ஆட்சிக்கு சாட்ச்சீ.

🔹 தீட்சிதர்கள் நிர்வாகத்தில் உள்ள சிதம்பரம் கோயிலில் முறைகேடு என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் கொடுத்ததில் இருந்தே முறைகேடு என காட்டம்.சிதம்பரம் கோயிலை நிர்வகிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது உயர் நீதிமன்றம். ஓய்வு பெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.ராஜேந்திரன் நியமனம். 🔹 திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதித்து, திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு செல்லும். 2022-ஆம் ஆண்டு அறநிலையத் துறை பிறப்பித்த ஆணை செல்லும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு.🔹 GSLV F18 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தம். இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த நடவடிக்கை.🔹 நிர்வாகத் திறனற்ற சோப்ளாங்கி தவெக அரசால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றவாளிகளுக்கு தவெக அரசு மீது பயம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம்.தற்போது தமிழ்நாட்டில் கரண்ட் பில், மளிகை பில் இடையேதான் போட்டி என ஸ்டாலின் விமர்சனம். ஒரு துறையிலாவது திமுக ஆட்சியை விட தவெக சிறப்பாக செயல்பட்டுள்ளதா? என்றும் கேள்வி.🔹 ஐந்து மாத தவெக ஆட்சிக்கு மைனஸ் பூஜ்யம் மதிப்பெண்ணே கொடுக்கலாம். வீட்டை விட்டு வெளியே வந்தால் மீண்டும் வீட்டிற்கு செல்வோமா என்கிற நிலை இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.🔹 மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பழனிசாமியை அடுத்து துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையின்போதும் மின்வெட்டு.🔹 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து வரும் 3-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வீரபாண்டியன் அறிவிப்பு.🔹 தவெகவுக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் ஆட்சி எப்போது ஒழியும் என எதிர்பார்க்கிறார்கள். ஆட்சிக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்.🔹 செஞ்சி அருகே தந்தையால் கிணற்றில் வீசப்பட்ட 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தந்தையே கிணற்றில் வீசிய கொடூரம்.🔹 முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகையால், புதுக்கோட்டையில் கல்லூரி செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு. பள்ளிக்கும் விடுமுறை அறிவித்து, பின்னர் திரும்ப பெறப்பட்டது.🔹 கும்பகோணம் அருகே 3 வயது குழந்தையை உடல் முழுவதும் கடித்த நபர் கைது. உடந்தையாக இருந்த குழந்தையின் தாயையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை.🔹 ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.🔹 விராலிமலையில் விவசாயத்திற்கு 5 மணி நேரம் மட்டுமே மும்முனை மின் விநியோகம் என புகார். செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.🔹 ஐரோப்பிய நாடுகள் மீது போர் நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு. எல்லை மீறினால் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை.

தீட்சிதர்களிடமிருந்து சிதம்பரம் கோயிலைக் காப்பாற்றுங்கள்.

உயர் நீதிமன்றம் உத்திரவு!


சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 


இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல அரசின் உத்தரவுக்கு ஆதரவாகவும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (அக்டோபர் 30) உத்தரவு பிறப்பித்தனர்.


அதில், ”கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் ஒப்படைத்து கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்த பிறகு கோயில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. 


எனவே, நிர்வாகத்தை கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர் சுரேஷ் குமார் ஆகியோரை முறையே தலைவர் மற்றும் துணைத் தலைவராக நியமிக்கப்படுகின்றனர்.


ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள்” என்று உத்தரவு பிறப்பித்தனர். 

மேலும், “இந்தக் குழு கோயிலின் புராதன கட்டிடங்களுக்கு இடையூறாக அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு புராதன சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 


ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் சொத்துக்களை மாவட்ட நிர்வாக உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கோயில் சொத்துக்களை கணக்கெடுத்து மாயமான மதிப்புமிக்க பொருட்களை மீட்கவும், கோயில் சொத்துகளின் வாடகை மற்றும் குத்தகை பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பித்தனர். 


கடந்த 12 ஆண்டுகளாக சிதம்பரம் கோயிலுக்கு வந்த வருமானம் குறித்து முழு கணக்கை சமர்ப்பிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பொது தீட்சிதர்கள் கோயிலை முறையாக நிர்வகிக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்தனர். 


புராதன கட்டடங்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு மத சடங்குகள் மரபுகளின் படி குடமுழுக்கு நடத்த வேண்டும். விரைவில் கோயிலின் பெருமையை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த குழு மேற்கொள்ள வேண்டும். 


நிர்வாக குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும்.


கோயிலின் கனக சபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும்,  தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை நிர்வாக குழு உறுதி செய்ய வேண்டும்” என்றும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மோடி அரசின் 11 ஆண்டுகால அவல ஆட்சிக்கு சாட்சி!


கடந்த வாரம் மோடியின் அடிவருடி ஊடகங்கள் உலகில் 4 ஆவது பணக்கார நாடாக இந்தியா மாறிவிட்டது என்று தம்பட்டம் அடித்தனர். 


அது உண்மையில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் புள்ளி விவரங்களோடு எடுத்துக்கூறியும் வதந்தியை பரப்பிக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் மோடி ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிய நிகழ்வு  ஜூன் இரண்டாம் வாரம் முதல் பாஜகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகத்தான் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் பயனாக பொருளாதாரத்தில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறிவிட்டது என்று விளம்பரம் செய்கின்றனர்.


அதாவது திட்டமிட்ட வதந்தியை பரப்பி மோடியின் ஆட்சியில் இந்தியா வளர்ந்துவிட்டது என்று தொலைக்காட்சியில் கூட விளம்பரம் செய்தனர்.


ஆனால் உண்மை என்ன?


பெரும் தொழில் நிறுவனங்கள் நலிவடைந்ததால் வேலை வாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. கூலி வேலையாவது கிடைக்காதா? என்ற மனநிலையில் நடுத்தர மக்கள் தவித்து வருகின்றனர்.  


இந்த நிலையில் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் தனிமனிதர் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு நெஞ்சை நொறுக்கும் ஓர் எடுத்துக்காட்டு.


10.06.2025 அன்று அரியானா மாநிலத்தில் இருந்து செய்தி ஒன்று வெளியானது.

வேலை இல்லாமல், பிள்ளைகளுக்கு சாப்பிட உணவு வாங்கிக் கொடுக்கவும் வழியில்லாமல் தந்தை தனது நான்கு குழந்தைகளுடன் ரயிலில் விழுந்து தன்னுயிர் மாய்த்துவிட்டார்.


அரியானா மாநிலம் பரிதாபாத்: 10.6.2025 அன்று மதியம், குர்கானில் 36 வயதான மனோஜ் என்ற நபர், தனது நான்கு மகன்களுடன் – இளையவர் மூன்று வயது, மூத்தவர் ஒன்பது வயது – ரயில் தண்டவாளத்திற்குச் சென்று, கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதும் வரை அவர்கள் அனைவரையும் கெட்டியாக அணைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

வேகமாக வந்த ரயிலுக்கு முன்பாக குனிந்த நிலையில் இருந்ததால் அத்தனை பேரையும் ரயில் உள்ளிழுத்துக் கொண்டு ரயில் சக்கரங்களில் சிக்கி உருக்குலைந்து போனார்கள்.


அருகிலிருந்தவர்கள் குழந்தைகளையாவது விட்டுவிடு என்று கத்தியும் அவர் கேட்கவில்லையாம். “மும்பையில் இருந்து வந்த ரயில், பிற்பகல் 1.10 மணியளவில் அவர்கள் மீது மோதியது,” என்று ரயில்வே காவல் துறை பிரிவின் அதிகாரி ராஜ்பால் தெரிவித்தார்.


வீட்டிலிருந்து கிளம்பும்போது பூங்காவுக்குச் செல்வதாகக் கூறிய மனோஜ், பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி அரியானா மாநிலம் வந்த மனோஜ், தனது மனைவி பிரியாவிடம், குழந்தைகளை அருகில் உள்ள பூங்காவுக்கு விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.


நான்கு குழந்தைகளையும் பூங்காவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, மனோஜ் மெஹ்தோ அவர்களை ரயில் தண்டவாளத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு மணி நேரம் ரயில் வருவதற்காகக் காத்திருந்துள்ளார்.


அவர் குழந்தைகளுக்காக சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களையும் வாங்கி கொடுத்துள்ளார்.


மனோஜின் ஆதார் அட்டை மூலம் காவல் துறையினர் அவரை அடையாளம் கண்டனர். மேலும் அவரது சட்டைப் பையில் ஒரு துண்டுக் காகிதத்தில் அவரது மனைவியின் தொலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது,

இது தொடர்பாக அவரது மனைவி கூறியதாவது: “நீண்ட நாள்களாகவே வேலையில்லாமல் இருந்தார்.


வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. கூலிவேலையும் கிடைப்பதில் பெரும் சிரமம், நான் வேலைக்குச் செல்லாம் என்றால் பிள்ளைகளை யார் கவனிக்க முடியும் என்ற கேள்வி. பீகாரில் வேலை இல்லை என்று இங்கே வந்தோம், இங்கேயும் வேலை சரியாக கிடைக்கவில்லை.

மூத்தவனை பள்ளியில் சேர்க்கவேண்டும் என்று நினைத்தோம். ஆனால், பள்ளிக்கான கட்டணம் அதிகம் என்பதால் பள்ளிக்கு அனுப்பமுடியவில்லை.

திரும்ப பீகாருக்குச் சென்றால் அங்கே சென்று என்ன செய்வது என்று புலம்பிக்கொண்டு இருந்தார்.


நான் தான் பரவாயில்லை. ஏதாவது வேலை கிடைக்கும் என்று ஆறுதல் கூறியிருந்தேன். ஆனால் கடைசியில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார். நான்கு பிள்ளைகள் மற்றும் அவரது உடல் ஆகிய அனைத்தையும் ஒன்றாக வெள்ளைத் துணியில் கட்டி எங்களிடம் கொடுத்தார்கள், இந்தக் கொடூர மரணம் வேறு யாருக்கும் வரக்கூடாது” என்று கூறினார்.


மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே உலகப் பணக்கார வரிசையில் வந்துவிட்டனர். ஆனால் நடுத்தர மற்றும் ஏழைகள் ,விவசாயிகள் குடும்பத்தோடு தன்னுயிர் மாய்த்துக்கொண்டு வருகின்றனர்.


மும்பை ரயில் விபத்திலும் இதே நிலைதான். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளபோது, கிடைக்கும் வேலையைத் தக்கவைத்துக்கொள்ள எப்பாடு பட்டாவது வேலையிடத்திற்குச் சென்று சேரவேண்டும் என புறநகர் ரயிலில் முண்டியத்த கூட்டம் கொத்து கொத்தாக விழுந்து மரணித்துவிட்டது.


மும்பை ரயில், குர்காவ் உயிரிழப்புகள் இரண்டுமே மோடி அரசின் 11 ஆண்டுகால அவல ஆட்சிக்கு சாட்சியாக அமைந்துவிட்டன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி