மீண்டும் வாக்காளர் பட்டியல்..?

 


13 கோடி வாக்காளர்கள் நீக்கம்!


20 மாநிலங்களில் மீண்டும் பெயர்

தேர்தல் ஆணையம் E.C.I. முடிவு! 


 இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளால் நாடு முழுவதும் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை (Special Intensive Revision - SIR) என்ற பெயரில், சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்க்க 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு முகாம்களை தொடங்குமாறு தேர்தல் ஆணையம் அவசர உத்தரவிட்டுள்ளது.


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிறப்பித்த பல தன்னிச்சையான உத்தரவுகள்தான் இவ்வளவு பெரிய குழப்பத்திற்குக் காரணம் என்றும், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.


என்ன நடந்தது?


நாடு முழுவதும் போலி வாக்காளர்களை நீக்குவதாகவும், பட்டியலை சுத்தப்படுத்துவதாகவும் கூறி 'சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை' (SIR) மேற்கொள்ளப்பட்டது.


ஆனால், சரியான விசாரணை மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றாமல் சுமார் 13 கோடி மக்களின் பெயர்கள் வரைவு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.


இதனால், அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் பல லட்சம் வாக்காளர்களால் தங்கள் ஜனநாயகக் கடமையான வாக்கைச் செலுத்த முடியாமல் போனது.

மேற்கு வங்கத்தில் முற்றிலும் முஸ்லீம் வாக்காளர் பெயர்ஹள் நீக்கப்பட்டன.


வாக்காளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், சுமார் 93 சதவீத வழக்குகளில் வாக்காளர்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தனர்.

ஆனால், அந்த உத்தரவு வருவதற்குள் தேர்தல் முடிந்துவிட்டதால், லட்சக்கணக்கான மக்கள் ஓட்டளிக்க முடியாமல் தவித்தனர்.


இந்த திருத்தப் பணிகளுக்கு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர், இந்த சிறப்பு திருத்த நடைமுறைகளுக்கும், விதிகளை மீறி செய்யப்பட்ட மாற்றங்களுக்கும் பலமுறை தங்கள் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.


மகாராஷ்டிர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


ஒடிசா தலைமைத் தேர்தல் அதிகாரி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.


கர்நாடகாவில் குறிப்பிட்ட சிறுபான்மையின வாக்காளர்களைக் குறிவைத்து மொத்தமாக படிவம் 7 (பெயர் நீக்கும் மனு) அளிக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


பம்பாய் உயர்நீதிமன்றம் மகாராஷ்டிர தேர்தல் அதிகாரியிடமும், தேர்தல் ஆணையத்திடமும் மிகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் கொளத்தூர்(மு.க.ஸ்டாலின்)தொகுதியில 1.21லட்சம் வாக்காளர் நீக்கப் பட்டுள்ளனர்.

பீகார் வாக்காளர்களை தமிழ்நாட்டிலும் சேர்த்து பெரிய குளறுபடியை ஞானேஸ் குமார் திட்டமிட்டே செய்து தேர்தல் முடிவுகளையே மாற்றியுள்ளார்,

வாக்குசாவடி. சி.சி.டிவி பதிவை வெளியே தரவும்,வழக்கு ஆதாரமாக்கவும் தடைவிதித்து விட்டார்.

மேற்கு வங்கத்தில் மேல்முறையீடுகளை விசாரித்த நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்ததுடன், ஒரு நீதிபதி தனது பணியை விட்டே விலகியுள்ளார்.


புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர பொதுமக்கள் நிரப்பும் விண்ணப்பம்தான் 'படிவம் 6' (Form 6). இந்த படிவத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஒரு புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டது.


அதாவது, "விண்ணப்பதாரர், அவரது பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியின் பெயர் கடந்த தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலில் இருந்ததா?" என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் விண்ணப்பிக்க முடியாத வகையில் மாற்றம் செய்யப்பட்டது.


மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதம் என்று தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து சுட்டிக்காட்டினார்.


உள் அரங்கில் எழுந்த இந்த கடுமையான எதிர்ப்பை அடுத்து, தேர்தல் ஆணையம் பின்வாங்கியது. சிறப்பு திருத்தப் பணி முடிவடைந்த மாநிலங்களில், அந்த புதிய நிபந்தனையை நீக்கிவிட்டு, வழக்கமான பழைய படிவம் 6 மூலமாகவே மக்கள் விண்ணப்பிக்கலாம் என தனது இணையதளத்தில் ஆணையம் அமைதியாக மாற்றத்தை செய்துள்ளது.


தவறுகளை மறைக்கவும், வாக்காளர்களின் கோபத்தைத் தணிக்கவும் தேர்தல் ஆணையம் தற்போது புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:


சிறப்பு திருத்தப் பணிகள் முடிவடைந்த 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க சிறப்பு இயக்கம் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.


சிறப்பு திருத்தத்திற்கு முன்பிருந்த வாக்காளர் பட்டியலையும், தற்போதைய பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து, அநியாயமாக யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் அவர்களை அடையாளம் கண்டு மீண்டும் சேர்க்க வேண்டும்.


பெயர் விடுபட்ட அல்லது குழப்பமான தகவல்கள் உள்ள வாக்காளர்களை அலுவலகங்களுக்கு நேரில் அழைக்காமல், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களே (BLO) அவர்களின் வீடுகளுக்குச் சென்று படிவம் 6 பெற வேண்டும்.


வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவையும் பெற்று விடுபட்டோரை விரைவாக பட்டியலில் இணைக்க வேண்டும்.

எழும் முக்கியமான கேள்விகள்


இத்தனை கோடி வாக்காளர்களின் பெயர்களை எந்த ஆய்வும் இல்லாமல் நீக்க யார் அனுமதி தந்தது?


சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடங்குவது தொடர்பாக தலைமை அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கான அசல் கோப்புகள் எங்கே?


மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுதிய எதிர்ப்புக் கடிதங்களையும், தேர்தல் ஆணைய கூட்டங்களின் விரிவான குறிப்புகளையும் பொதுமக்களுக்கு ஏன் வெளிப்படையாகக் காட்ட மறுக்கிறார்கள்?


இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்களிக்கும் உரிமைதான். தகுதியுள்ள சாதாரண குடிமக்களின் பெயர்களை எந்த முகாந்திரமும் இன்றி நீக்கிவிட்டு, பின்னர் அவசர அவசரமாக அதை சரிசெய்ய முயற்சிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


முறையான விசாரணை நடத்தப்பட்டு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் வரை தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனங்கள் ஓயாது என்றே தெரிகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி