கணினி பணி:மறுவடிவமைப்பு தேவை.

 


அன்பில் மகேஷ்  கைது

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர, ரூ.100 கோடி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், அன்பில் மகேஷை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிதுள்ளன.@ மதுரை மாவட்டம் மேலூர் அருகே நேற்று காணாமல் போன 7 வயது சிறுவன் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையளிப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், தமிழக வெற்றி கழக ஆட்சியில் ஒட்டுமொத்த மாநிலமே அச்சத்தில் உறைந்துபோய் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். "விஜய் மாமா" என்று அழைத்து வாக்களிக்குமாறு கோரிய குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில், முதலமைச்சர் காவல்துறையைக் கையில் வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என்றும், அந்தத் துறையைச் சரிவர கவனிக்க முடியாவிட்டால் வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு மழலைகளின் உயிரைப் பணயம் வைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.கோடிங்கை விட்டுவிட்டு செல்லத் துடிக்கும் மென்பொறியாளர்கள்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி, உலக அளவில் பெரும் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

 மனித மூளையால் சிந்தித்துச் செய்யப்பட வேண்டிய பல நுணுக்கமான வேலைகளை இன்று கணினி நொடிப் பொழுதில் செய்து முடிக்கிறது. இந்த அசுர வேகம் ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் மனிதனின் வாழ்வாதாரமாக விளங்கிய தொழில்நுட்ப வேலைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

 குறிப்பாக, மென்பொருள் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் கூட தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்துப் பெரும் கவலையடைந்து, மாற்றுத் தொழில்களை நாடத் தொடங்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்ப மாற்றமும் அதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தீவிர மன உளைச்சலும் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.தொழில்நுட்பத் துறையில் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த ஒரு மூத்த மென்பொறியாளர், அண்மையில் சமூக ஊடகப் பக்கத்தில் 'என்னால் இனி முடியாது' என்ற விரக்தியுடன் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். 

டிஜிட்டல் உலகை இயக்கும் பல முக்கிய அமைப்புகளைத் தனது கோடிங் திறமையால் உருவாக்கிய அவர், தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியைக் கண்டு முற்றிலும் சோர்வடைந்துள்ளார்.

 வரும் 5 முதல் 10 ஆண்டுகளில் தற்போதிருக்கும் பாரம்பரிய மென்பொருள் வேலைகள் எதுவுமே மிஞ்சியிருக்காது என்ற அச்சத்தின் காரணமாக, அவர் கோடிங் செய்வதை முழுமையாகக் கைவிட்டுவிட்டு, சொந்தமாக விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்யும் தொழிலுக்கு மாறத் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். 

மனித மூளையால் செயலாக்க முடியாத அளவுக்குத் தொழில்நுட்ப மாற்றங்கள் மிக வேகமாக நடந்து கொண்டிருப்பதாக அவர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை, ஏஐ தொழில்நுட்பத்தால் வெறும் கோடிங் மட்டுமே எழுத முடியும் என்றும், ஒட்டுமொத்த மென்பொருள் வடிவமைப்பு மற்றும் சிக்கலான திட்டங்களை நிர்வகிக்க இன்னும் அனுபவமிக்க மனிதப் பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் நம்பியிருந்தார். 

ஆனால், தற்போது அந்த நிலையும் மாறிவிட்டது. இன்று ஏஐ கருவிகள் மென்பொருள் வடிவமைப்பு போன்ற கடினமான பணிகளையும் மனிதர்களை விட மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் செய்து முடிக்கத் தொடங்கியுள்ளன. பல வருடப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற பொறியாளர்களின் வேலைகளை ஒரு இயந்திரம் மிக எளிதாகச் செய்யும்போது, இந்தத் துறையையே நம்பித் தங்களின் வாழ்க்கையைத் தொடங்கிய லட்சக்கணக்கான ஊழியர்களின் நிலை என்னவாகும் என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. 

இணையத்தில் எழுந்துள்ள இந்த விவாதம் வெறும் கற்பனை அல்ல என்பதைச் சமீபத்திய புள்ளிவிவரங்களும் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.

கடந்த ஜூன் மாதத் தரவுகளின்படி, இந்தியாவில் மென்பொருள் மேம்பாட்டுத் துறை சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெறும் மூன்று மாதங்களிலேயே 12.3 சதவீதம் அளவுக்குக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. 

இதுமட்டுமல்லாமல், ஐடி உள்கட்டமைப்பு, தரவு பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற பிற பிரிவுகளிலும் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறைந்து வருகின்றன. இதனால், புதிதாகப் படித்து முடித்து வெளியில் வரும் இளம் பட்டதாரிகள் தங்களின் ஆரம்பக்கட்ட வேலைகளைக் கண்டறிவதில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அடிப்படை கோடிங் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட வேலைகளை இன்று ஆட்டோமேஷன் மற்றும் ஏஐ கருவிகள் முழுமையாகச் செய்யத் தொடங்கிவிட்டதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் தரவுகள் அனைத்தும் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன.

இருப்பினும், இந்த நிலைமையை வேலை இழப்பு என்று மட்டுமே சுருக்கிப் பார்த்துவிட முடியாது. தொழில்நுட்ப உலகம் புதியதொரு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.பாரம்பரிய வேலைகள் குறைந்தாலும், ஏஐ அமைப்புகளை உருவாக்குதல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற பணிகளுக்கான தேவைகள் சந்தையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.

 ஏஐ கட்டடக் கலைஞர்கள் மற்றும் ஜென்ஏஐ பொறியாளர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகள் தற்போது உருவாகத் தொடங்கியுள்ளன. 

இதனால், மென்பொருள் வல்லுநர்கள் கோடிங் மொழிகளைக் கற்றுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களின் ஒட்டுமொத்தத் திறமையையும் தற்போதைய ஏஐ காலத்திற்கு ஏற்ப மறுவடிவமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

நேற்றைய மதிப்புமிக்க திறமைகள் நாளைய உலகிற்கு போதுமானதாக இருக்காது என்ற நிதர்சனத்தை உணர்ந்து, இந்தத் தொழில்நுட்பப் புயலை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி