டெல்லியில் தொடர் பதற்றம்!
போலீஸ் குவிப்பு, இணையச் சேவைகள் முடக்கம்;
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, நீக்கப்பட்ட அல்லது புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6 -ல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகத் திருத்தம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள்,போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மூலமாக ஆளும் பா.ஜ.க கட்சிக்கு சாதகமாக ஞானேஷ்குமார் செயல்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் பதவி விலக வேண்டும் எனவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இடதுசாரி மாணவர்கள் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி நாளை (10-10-26) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடைபெறும் எனக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) அறிவித்திருந்தது.
இந்த போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சிஜேபியினர் டெல்லி காவல்துறையிடம் மனு கொடுத்தனர்.
ஆனால், காவல்துறை தரப்பில் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. இருந்த போதிலும், அனுமதி கிடைக்காவிட்டாலும் அறிவித்தபடி இந்த போராட்டம் நடைபெறும் என சிஜேபியினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன்படி ஜந்தர் மந்தரில் 32,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில், ஜந்தர் மந்தர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு 10 மணி முதல் 24 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் தலைநகர் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.
போராட்டக்காரர்களை டெல்லி காவல்துறையும் துணை ராணுவப் படைகளும் காவலில் எடுத்ததற்கு எதிரான மனுக்களையும், நீதிமன்ற உத்தரவுகளை வேண்டுமென்றே மீறியதாகத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவையும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, நீதிபதி பாக்சி, "போராட்டக்காரர்களைக் காவலில் எடுத்ததற்கும் மற்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்ததற்கும் எதிரான மனு மீது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதங்களைத் தொடங்கினார்.
அதில், “ரயில்கள் போன்றவற்றில் இருந்துகூட மக்களை அவர்கள் பிடித்துச் செல்கிறார்கள். மேலும், இணையச் சேவை முடக்கம் தொடர்பான ஒரு பிரச்சினையும் இங்கு உள்ளது (இது அனுராதா பாசின் வழக்கில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது)” என்று சிபல் கூறினார்.
அதற்கு நீதிபதிகள், “சட்டத்திற்கு உட்பட்டு நகருக்குள் மக்கள் தடையின்றி நடமாடுவது அனுமதிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, பி.என்.எஸ்.எஸ் பிரிவு 163 அமலில் உள்ள பகுதிக்கு அப்பால், அமைதியான முறையில் ஆயுதங்களின்றி கூடியிருக்கும் மக்களை சட்டவிரோதமாகக் காவலில் வைக்கக் கூடாது. உச்ச நீதிமன்ற வளாகத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பிரிவு 163இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்குள் வருவதற்கும் வெளியேறுவதற்கும் நீதி கிடைப்பதில் எவ்வித அச்சமும் இருக்கக் கூடாது என்பதால், இந்தத் தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்" எனத் தெரிவித்தனர்.
மேலும் நீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளையும் பிறப்பித்தது. அதில், “ போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு நகருக்குள் மக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைப்பதற்கான தேவை குறித்து மறுஆய்வு செய்யப்பட வேண்டும். இணைய வசதிகள் எவ்வித இடையூறுமின்றி செயல்பட வேண்டும்”எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது அவை சாதாரணமாக இயங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நேற்று டெல்லி முழுவதும் முடக்கப்பட்டிருந்த குடிமக்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை நீதிமன்றம் நீக்கியுள்ளது, இதன் மூலம் எந்தவொரு குடிமகனும் நகருக்குள் சுதந்திரமாக நடமாட முடியும்.
அமைதியான முறையில் போராடுவது குடிமக்களின் அடிப்படை உரிமை என்பதை நீதிமன்றம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் எந்தவொரு நபரையும் காவலில் வைக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, நேற்றைய கைதுகள் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சட்டவிரோதக் காவலில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மோடி, முதல்வர் விஜய் வழிபாடு!
சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை திறப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11.10.2026) சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
அதன்படி சென்னை போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர், பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை ஒன்றாக இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய்யும் புதிய மெட்ரோ ரயிலில் ஏறி, சக அதிகாரிகளுடன் இணைந்து முதன்முறையாகப் பயணம் மேற்கொண்டனர்.இதனையடுத்து சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக பிரதமர மோடி, அங்குள்ள மூலவருக்குத் தாமரை மலர்களை வைத்து அர்ச்சனை செய்து பூஜித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற புதிய திட்டங்கள் தொடங்கியது.
இந்த அரசு விழாவில், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் முன்னிலையில், தமிழகத்தின் சுமார் ரூ. 13,000 கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவுற்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன.
இதற்கிடையே, சென்னை வந்துள்ள பிரதமர் மோடியைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் பல்வேறு மாணவர் அமைப்புகள் பனகல் மாளிகை அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனுமதியின்றிப் போராட்டம் நடத்திய மாணவர்களைப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து பேருந்தில் ஏற்றிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











