தீ' பரவட்டும்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திஇந்தியா அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி மாபெரும் பேரணிநடத்தியுள்ளனர்.
இந்தப் பேரணியை காவல்துறையினர் தடுத்துநிறுத்தியதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் தில்லி, மும்பை உட்பட பல்வேறு பெரு நகரங்களில் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமாகிவருகிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறையின் அடக்குமுறையை முறியடித்து இளைஞர்களும், மாணவர்களும் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்என்று வலியுறுத்தி தில்லியில் பற்ற வைக்கப்பட்டபோராட்டப் பெரு நெருப்பு நாடு முழுவதும் பற்றிப்பரவியதைப் போல இந்திய மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் நடைபெறும் இந்தப் போராட்டம் நாடுதழுவிய அளவில் விரிவடைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் இந்தியா அணி சார்பில் மாவட்டங்கள் தோறும் பெருந்திரள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக தலைமைத் தேர்தல்ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார் என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றிநிரூபணமாகியுள்ளது.
குறிப்பாக எஸ்ஐஆரின் போது பயன்படுத்தப்பட்ட படிவம் 6ல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு உச்சநீதிமன்ற அனுமதிவழங்கப்பட்டதாக ஞானேஷ் குமார் பொய்யுரைத்த நிலையில்உச்சநீதிமன்றம் அத்தகையஅனுமதி வழங்கவில்லை என்று தெளிவுபடுத்திவிட்டது.
சக தேர்தல் ஆணையர்களின் கடும் ஆட்சேபணையை மீறி ஞானேஷ் குமார் எஸ்ஐஆர் விவகாரத்தில் செயல்பட்டதன் பின்னணி என்னஎன்பது வெளிப்படையான ஒன்று. அரசியல் சட்டத்தின்படி அவர் செயல்படவில்லை.
ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதல்படியே செயல்பட்டுள்ளார். நாட்டின் உயர்ந்த, நம்பகமான பதவியில் ஒரு நொடி கூட நீடிக்கும் உரிமை ஞானேஷ் குமாருக்கு இல்லை.
தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை ஆலோசிக்க வேண்டியதில்லை என நரேந்திர மோடி அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்ததன் அவசரத்தை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த லட்சணத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில்உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதிலிருந்தே அரசு அமைப்புகள் சுயேச்சையாகசெயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பீற்றியுள்ளது அவக்கேடானது.தேசவிரோதி,ஊழல்வாதி ஞானேஷ் குமார் பதவி விலகுவது ஒன்றே ஒரே தீர்வாகும்.
அசையாமல் இருக்கும் மக்களாட்சி விரோதி ஞானேஷ்குமார் பதவிநாற்காலியை மக்கள் போராட்த் தீ சாம்பலாக்கட்டும்.
உலகளாவிய உணவுத் தட்டுப்பாட்டிற்கு மூன்று முக்கிய காரணங்கள்- உலகளாவிய உணவுத் தட்டுப்பாட்டிற்கு மூன்று முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன:
- உக்ரைன் - ரஷ்யப் போர்
- மத்திய கிழக்கு நாடுகளின் மோதல்கள்
- தீவிரமடைந்து வரும் ‘சூப்பர் எல் நினோ’ விளைவு குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை மற்றும் கருங்கடல் பகுதிகளின் போக்குவரத்துப் பாதைகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, யூரியா, அமோனியா மற்றும் பாஸ்பேட் போன்ற உரங்களின் ஏற்றுமதியும், தானியங்கள் மற்றும் எரிபொருள் கப்பல் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சூப்பர் எல் நினோ’ மற்றும் பருவமழைப் பற்றாக்குறை

அமெரிக்கக் காலநிலை கணிப்பு மையமான 'நோவா' (NOAA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது உருவாகியுள்ள எல் நினோ மிகவும் வலுவான ‘சூப்பர் எல் நினோ’ ஆக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் இந்த பருவத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட 40% வரை குறைந்துள்ளதால், உணவு தானிய உற்பத்தி இலக்கை அரசு குறைத்துள்ளது.

கடல் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், 1950-க்குப் பிறகு மிகக் கடுமையான வறட்சி சூழல் நிலவுகிறது. இக்கடுமையான எல் நினோ சூழல் 2027 பிப்ரவரி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுக்கழகத்தில் (FCI) 40 மில்லியன் டன் அரிசி இருப்பு இருந்தபோதிலும், சந்தையில் அரிசி விலையேற்றத்தைத் தடுக்க முடியாத சூழல் நிலவுகிறது. தாய்லாந்து, கம்போடியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அரிசி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.








