மோடி வித்தை செல்லாது..!




மோடி வித்தை செல்லாது..!


தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் நேற்று மாலையோடு பிரசாரம் முடிவடைந்தது.


இந்த தேர்தல் களத்தில் தவெக, திமுக, அதிமுக, நாதக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களம் காண்பதால், 5 முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் இடைத்தேர்தல் என்றாலே அதில் ஆளும் கட்சியினரின் பணபலமும், படைபலமும் வெற்றி பெறும் என்கிற மாயைகளை தாண்டி, இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.


பொதுவாகவே இடைத்தேர்தல்கள் நியாயமான முறையில் நடக்காது என கூறி கொண்டு, சிலசமயங்களில் பிரதான கட்சிகள் கூட ஒதுங்கி கொள்வது வழக்கம்.


ஆனால் இம்முறை நடுநிலை வகிக்கும் பாமக தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்துமே தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டுகின்றன. அதற்கு காரணம் கடந்த 5 மாதங்களில் தவெக ஆட்சிக்கு மக்கள் மத்தியில் காணப்படும் எதிர்ப்பலையே காரணமாகும்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.


தவெக 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெற்றே ஆட்சி அமைக்க முடிந்தது.


சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமல்,


அதிமுக வேட்புமனுவில் ஒரு கணக்கு... தவெக வேட்புமனுவில் வேறு கணக்கு! 4 மாதங்களில் மாறிய பிரமாணப் பத்திர தகவல்கள்: மரகதம் குமரவேல் மீது தேர்தல் களத்தில் புதிய சர்ச்சை'


தவெக தலைவர் விஜய் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500, ஏழை பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம், பட்டுசேலை, ஆண்டுக்கு 6 சிலிண்டர் திட்டம், தமிழகத்தில் நவீன வசதிகளுடன் 100 காமராஜர் பள்ளிகள், விவசாய கடன்கள் முழுமையாக தள்ளுபடி என வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளி விட்டிருந்தார்.


பிரசாரத்திற்கும் கூட ஏதோ சென்று வருவோம் என்கிற கதையாய், ஒருநாள் விட்டு ஒருநாள் 10 முதல் 15 நிமிடங்கள் கூட்டங்களில் பேசிவிட்டு வந்தார்.


ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், பொதுமக்கள் ரீல்ஸ்களுக்கு மயங்கியும், சினிமா மாயையிலும் தவெகவை அரியணை ஏற்றினர். அரசியல் அனுபவம் இல்லாத ஒரு புதிய தலைமுறை, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, அதை முறையாக கையாள தெரியாமலும், மக்களுக்கு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாமலும் இதுநாள் வரை தவித்து வருகிறது.


அறுதி பெரும்பான்மை இல்லாததால், அதிமுகவை உடைத்து, அமமுகவை சிதைத்து, காரல் மார்க்ஸ் பட்டறையில் பயின்ற கம்யூனிஸ்டுகளையும் மதில் மேல் பூனையாக்கி இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.


காங்கிரசிற்கும் காவல், பாஜவிற்கும் தோழன் என்பதுபோல் தவெக அரசின் கொள்கை முடிவுகள், இன்று வரை தமிழக வாக்காளர்களை தலை சுற்ற வைக்கிறது.


இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தல், ஆளும் தவெகவின் ஆட்சி செயல்பாடுகளை எடை போடும் தேர்தல் எனலாம். தூய அரசியல் என சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், குதிரை பேரம் நடத்தி ஆட்சியை தக்க வைக்க நடத்தும் நாடகங்களை வாக்காளர்கள் கண்காணிக்க தவறவில்லை


தங்கள் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி கண்கூடாக வெளிப்படுகிறது என்பதை அறிந்தே, சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் 5 முதல் 10 நிமிடம் பேசிய முதல்வர் விஜய், இப்போது மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் டெண்ட் அடித்து தங்காத குறையாக பிரசாரம் செய்து வருகிறார்.


மாயைகள் மக்களிடம் வெகுகாலம் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம்.




போலீசால் தேடப்படும் குற்றவாளி

விஜய்க்கு மாட்டுவண்டி ஓட்டுகிறார்.!! 



 தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில், காவல் துறையினரால, தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அசோக் என்பவருடன் மாட்டுவண்டியில் முதலமைச்சர் விஜய் பயணம் செய்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதனை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமறைவு குற்றவாளியுடன், சட்டம்-ஒழுங்கைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே செல்கிறார் என்றால், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த இதைவிட வேறு சான்று தேவையில்லை.” என விமர்சித்து உள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்போடும் காவல்துறையின் கண்களுக்கு, மாட்டு வண்டியில் முதலமைச்சருடன் இருந்த தேடப்படும் குற்றவாளி தெரியவில்லையா.! என ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.


அதே போல திமுக தொண்டரின் தோட்டத்தில் முருங்கைக்காய் பறிக்கும் டிராமாவை அரங்கேற்றிய விஜய்யால் திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரை கூட பறிக்க முடியாது,

திமுக தொண்டனின் வீட்டில் இருக்கும் முருங்கைக்காயை மட்டும்தான் அவரால் பறிக்க முடியும் என்றும் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டு உள்ளார்.


அமைச்சர் கீர்த்தனா பள்ளி குழந்தைகளைப் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்திருக்கிறார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?


எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்?


எதற்காக அவசர அவசரமாக வழக்கு போடுகிறீர்கள்?

எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி