ஏன் இந்த தடுமாற்றம்?





ஏன் இந்த தடுமாற்றம்?

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் முதல் நாள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த நாள் டெண்டர் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக முடிவுகளை எடுப்பதில் அரசுக்கு தடுமாற்றம் ஏன்? சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவற்காக கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை கடந்த புதன்கிழமை ரத்து செய்த தமிழ்நாடு அரசு,

அதற்கு அடுத்த நாளே ரத்து  அறிவிப்பை ரத்து செய்து ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடரும் என்று அறிவித்துள்ளது.


அரசு நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு  பெரும் தடுமாற்றத்தில் இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.


மாநகரப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த மார்ச் மாதம் கோரப்பட்டன. அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஆட்சி மாற்றமும் ஏற்பட்ட நிலையில், ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு பல முறை ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும் அறிவிக்கை ரத்து செய்யப்படுவதாக கடந்த 14-ஆம் தேதி புதன் கிழமை  தமிழக அரசு அறிவித்தது

அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,  ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்யும் அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டு விட்டதாகவும்,  அதை திரும்பப்பெற்று ஒப்பந்தப்புள்ளி நடைமுறை தொடருவதாகவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி அரசுக்கே தெரியாமல் எவ்வாறு ரத்து செய்யப்படும் என்பது தெரியவில்லை.

அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும் அது பிரிவு அலுவலர் முதல் இயக்குனர்கள்/ செயலாளர்கள் வரையிலான பல்வேறு அதிகாரிகளை கடந்து வர வேண்டும்.


எவரேனும் ஒருவர் தவறு செய்யலாம்; எல்லா அதிகாரிகளும் எவ்வாறு தவறு செய்ய முடியும்? அல்லது வேறு எதையோ எதிர்பார்த்து கிடைக்கவில்லையோ?

எனவே, ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து செய்யப்படுவதில் ஏற்பட்ட குழப்பத்திற்கு அதிகாரிகள் காரணம் அல்ல...


கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் தான் காரணம் ஆகும்.



.

டம்மி அரசு பம்மியது ஏன்?

தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், “தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 பொய்ச் செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின் போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புப் பிரிவு (TN Fact Check Unit) தொடங்கப்பட்டது.

அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers – கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? 

இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? 

என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ?

 இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் ஆர்.டி.ஐ மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் ஆர்.டி.ஐ மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.

 வெளிப்படையான நிர்வாகம் (Transparent Governance) தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய ஆலோசகர்கள் நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா அரசாணைகளையும் ஒளித்து வைப்பது ஏன்?

ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி –  ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா? 

உண்மை எது – பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல.  உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த டம்மி அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி