வெற்றியையே ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்புகள்!



விஜய்யை போல சொத்து

விவரங்களை மறைத்த வேட்பாளர்கள்…

வெற்றி ரத்து செய்த நீதிமன்ற தீர்ப்புகள்!


வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி லட்சுமிநாராயணன் தெரிவித்த கருத்துகள் விவாதப் பொருளாகி உள்ளன.


2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் விஜய்.


அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துகள் குறித்த முழுமையான விவரங்களை வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டி, விஜய்யின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


விஜய்க்கு எதிராக திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.
ஆர்.டி. சேகர், பெரம்பூர் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் இந்த வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 7) நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரூ.600 கோடி சொத்துகள் இருப்பதாக அறிவித்த விஜய், ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளை விடுபடச் செய்திருந்தாலே அது தேர்தல் முறைகேடாகுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.


மேலும், விஜய் தனது சொத்து விவரங்களை அவராகவே தயாரித்திருப்பாரா?

ஆடிட்டர்தானே தயாரித்திருப்பார்? அந்த ஆடிட்டர் தவறுதலாகச் சில சொத்துகளை விடுபடச் செய்திருந்தால் அதற்காகத் தேர்தலை ரத்து செய்ய முடியுமா என்றும் அறிவுப் மூர்வமாக நீதிபதி லட்சுமி நாராயணன் கேட்டார்.

அத்துடன் விஜய்க்கு வாக்களிக்க முடிவு செய்த வாக்காளர் ஒருவர், அவரது ரூ.30 கோடி சொத்து விவரங்கள் விடுபட்டதற்காகத் தனது முடிவை மாற்றியிருப்பாரா என்ற கேள்வியையும் நீதிபதி லட்சுமி நாராயணன் எழுப்பினார்.


நீதிபதி லட்சுமி நாராயணனின் இந்த கேள்விகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு விவாத பொருளாகி இருக்கிறது.

நீதிபதி லட்சுமி நாராயணனின் இந்த கருத்துக்கு மாறாக ஏற்கனவே உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் சொத்து விவரங்களை மறைத்தவர்களின் தேர்தல் வெற்றியை செல்லாது என்றே அறிவித்த தீர்ப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.


மகாராஷ்டிரா கிசான் சங்கர் கதோரே

2004-ம் ஆண்டு மகாராஷ்டிரா தேர்தலில் அம்பர்நாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கிசான் சங்கர் கதோரே. இவர் தனது வேட்புமனுவில் மனைவியின் பெயரிலிருந்த பங்களா, வாகனம், நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகள் உள்ளிட்ட சொத்து விவரங்களை மறைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.


இது தொடர்பாக அருண் தத்தாத்ரேய சாவந்த் என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி கதோரேவின் தேர்தல் வெற்றியை ரத்து செய்தது.


இந்தத் தீர்ப்பை எதிர்த்து கதோரே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2014-ம் ஆண்டு மே 9-ம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் முடிவை ஏற்று, கிசான் சங்கர் கதோரேவின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.


வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அறிந்துகொள்வது வாக்காளர்களின் உரிமை என்பதை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.

தெலுங்கானாவில்

2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டசபை தேர்தலில் கொத்தகூடம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வனமா வெங்கடேஸ்வர ராவ்.

இவர் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகவும், தவறான தகவல்களை அளித்ததாகவும் குற்றம்சாட்டி, தேர்தலில் தோல்வியடைந்த ஜலகம் வெங்கட ராவ் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம், 2023-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வனமா வெங்கடேஸ்வர ராவின் தேர்தல் வெற்றியை ரத்து செய்தது. மேலும், அவருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன், அவரிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஜலகம் வெங்கட ராவையே வெற்றி பெற்றவராகவும் அறிவித்தது.


சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பான தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.


கர்நாடகாவில்..

2023-ம் ஆண்டு கர்நாடக தேர்தலில் பாகேபள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.என். சுப்பாரெட்டி.


இவர் தனது வேட்புமனுவில் சொத்துகள், தொழில் நிறுவனங்கள், வருமான ஆதாரங்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டி வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், 2026-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சுப்பாரெட்டியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்தது.


வேட்பாளர்கள் தங்களது சொத்துகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவது கட்டாயம் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.


இந்த 3 வழக்குகளிலும் வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்த நீதிமன்றங்கள், ”ஆடிட்டர் தவறு செய்தாரா? இல்லையா?” என ஆய்வுக்குள் போகாமல் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் வெற்றியையே செல்லாது என அறிவித்து எம்.எல்.ஏ. பதவியையே பறித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


சரியான சொத்துக்களைக காட்ட வேண்டும் என்பதற்காகத்தான அந்த விதி.

அதில் ஆடிட்டரா் மறைத்தார்.கணக்குப்பிள்ளை தறந்து விட்டார் என்பது தவறான வாதம்.

இப்படி தவறு செய்தவன் ஆட்சிக்கு,அதிகாரத்திற்கு வருவது ஊழலை ஊக்குவிக்கும்.நேர்மைக்கு அங்கு இடமில்லை.

அதை ஒரு நீதிபதியே கூறுவது நியாயமே இல்லை.

தப்பு செய்தவனுக்கு ஆதரவாக ஒரு நீதிபதி பேசுவது இதுவரை கேள்விபட்டதில்லை. நீதி,நியாயம்,நேர்மைக்குநல்லதில்லை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி