முதல் போட்ட...,,?
வரும் ஜனவரி மாதத்தில் அரிசி 1 கிலோ ரூ.120 வரை உயரக்கூடும் வரலாறு காணாத வகையில் அரிசியின் விலை உயர்ந்து வருவதாகவும் அரிசி ஆலை உரிமையாளரும், அரிசி விலை நிர்ணய குழுவின் உறுப்பினருமானதேவசேனாதிபதி பேட்டி.
மதுரை செக்கானூரணியில் புதிதாக விடப்பட்ட வெற்றிப் பயண அரசுப் பேருந்து பழுதடைந்து நடுரோட்டில் நின்றதால் அதிர்ச்சி.பயணிகள் கட்டணப் பேருந்தில் ஏறிச் சென்றனர்.
முதல் போட்ட.. பிரதமர் அம்பானியா.?
ஸ்டார்லிங்க் இணையதளம் 165க்கும் மேற்பட்ட நாடுகளில் லைசென்ஸ் பெற்று சேவை வழங்கி வருகிறது.
ஆனால் அனைத்து சட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் இணங்கியும் கூட 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்தும் இன்னும் லைசென்ஸ் கிடைக்கவில்லை. இதனால் அம்பானி தான் இந்தியாவின் ரியல் பாஸா?'' என்று எலான் மஸ்க் கேள்வி கேட்டு இருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் எலான் மஸ்க். அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்.
அதில் ஒன்று தான் 'ஸ்டார்லிங்'. செயற்கைகோள் வழியாக அனைத்து பகுதிகளுக்கும் இண்டர்நெட் சேவையை வழங்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறதுஎலான் மஸ்க் தனது ‛ஸ்பேஸ்எக்ஸ்'என்ற விண்வெளி நிறுவனத்தின் மூலமாக ‛ஸ்டார்லிங்' என்ற பெயரில் செயற்கைகோள் மூலமாக இணையதள சேவைகளை வழங்கி வருகிறார். தற்போது 'ஸ்டார்லிங்' சேவை ஒவ்வொரு நாடுகளுக்கும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று இந்தியாவில் 'ஸ்டார்லிங்' சேவை அவசியம் என்பது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் விவாதம் கிளம்பியது.
“ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. மேலும், இந்திய அரசின் அனைத்து விதமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் பின்பற்றப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. அப்படியிருக்க, இன்னும் ஏன் அதற்கு உரிமம் வழங்கப்படவில்லை?...
DogeDesigner என்ற பக்கத்தில் இருந்து எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனத்தை டேக் செய்து மேற்கொண்ட பதிவு கவனம் பெற்றது.
அந்த பதிவில், ''இந்தியாவிற்கு ஸ்டார்லிங் தேவை. ஏனென்றால் 2026 மே மாத நிலவரப்படி இந்தியாவி்ல 1,256 கிராமங்களில் 4ஜி சேவைகள் கிடைக்காமல் உள்ளது.
2026 மார்ச் மாதத்தின்படி இந்தியாவி்ல 1.093 பில்லியன் இண்டர்நெட் சப்ஸ்கிரிப்ஷன் இருந்தது. இதில் கிராமங்களில் 440.87 மில்லியன் சப்ஸ்கிரிப்ஷன் மட்டுமே இருந்தது.
இந்தியாவில் ஸ்டார்லிங் தனது சேவையை தொடங்க ஆர்வமாக உள்ளது.
இதற்காக மீதமுள்ள அனுமதியை ஒன்றிய அரசு வழங்கினால் உடனடியாக 'ஸ்டார்லிங்' தனது இண்டர்நெட் சேவையை தொடங்கும்'' என்று கூறியிருந்தார்.
இதற்கு 'ஸ்டார்லிங்'கின் எலான் மஸ்க் பதிலளித்து இருந்தார். அதில்,''துரதிர்ஷ்டவசமாக சில பெரும் செல்வந்தர்கள் தங்களுக்கான ஏகபோக ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்வதற்காக நம்மை தடுக்கிறார்கள்.
அவர்கள் யார் என்று உங்களால் யூகிக்க முடியும். இது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றம்'' என்று கூறியிருந்தார்.
ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால், தற்போதைய இணையக் கட்டணங்களை செலுத்த முடியாத ஏழைகளுக்கும், இணையமே இல்லாதவர்களுக்கும் மலிவான விலையில் அதிவேகத்தில் இண்டர்நெட் வசதி கிடைக்கும் என்பதால் நம் நாட்டில் தகவல் தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தும் சில செல்வந்தர்கள் இதனை தடுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டை மத்திய அரசு அதிரடியாக மறுத்தது. ''இந்தியாவில் செயற்கைக்கோள் சேவைக்கான ஒழுங்குமுறை சட்டம் பாரபட்சமின்றியும், நியாயமான முறையிலும் நடைமுறையில் உள்ளது. எலான்மஸ்க்கின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது'' என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.யார் அந்த இந்திய தொழிலதிபர்கள்? எலான் மஸ்கின் பகீர் குற்றச்சாட்டுக்கு.. மத்திய அரசு சொன்ன பதில்
இருப்பினும் ஸ்டார்லிங் சேவையை இந்தியாவில் தடுப்பதாக எலான் மஸ்க் கூறிய செல்வந்தர்கள் செல்வந்தர்கள் யார்? என்று பலரும் யூகிக்க தொடங்கினர்.
இதனால் இது சமூக வலைதளங்களில் விவாதமானது. இந்நிலையில் தான் எலான் மஸ்க்கே அதற்கு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
''ஸ்டார்லிங்க்' 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. இந்திய அரசின் அனைத்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கி செயல்பட கடந்த ஐந்து ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்படியிருந்தும் இன்னும் ஏன் உரிமம் வழங்கப்படவில்லை?
அம்பானிதான் இந்தியாவின் உண்மையான பாஸா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
நம் நாட்டில் அம்பானி குடும்பம் ஜியோ
தொலை தொடர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ என்ற நிறுவனம் தான் அது. நம் நாட்டில் தற்போது அதிகமான மக்கள் செல்போன் இண்டர்நெட் மற்றும் வீட்டு உபயோ இண்ட்நெட் உள்ளிட்டவற்றுக்கு ரிலையன்ஸ் ஜியோவை பயன்படுத்தி வரும் நிலையில் எலான் மஸ்க் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த பதிவு தற்போது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

