லஞ்சம் கொடுப்பதும் குற்றமே,

🔊 சென்னை தியாகராயர் நகர், கோவை, ஈரோட்டில் களையிழந்த தீபாவளி ஷாப்பிங். விலையேற்றம், ஆன்லைன் விற்பனையே காரணம் என வியாபாரிகள் கவலை.🔊 சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 7 பேரையும் விடுவித்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.🔊   தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க அறிவுரை.🔊 ரேஷன் கடைகளில் விநியோகிக்க தமிழ்நாடு அரசு வெங்காயம் கொள்முதல் செய்ததில் குளறுபடி,முறைகேடு. திருச்சி உள்ளிட்ட இடங்களில் 400 டன் வெங்காயத்துடன் தவிக்கும் லாரி ஓட்டுநர்கள்.🔊 மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை. தீபாவளி தினத்தன்று தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிப்பு.

         எல்லாம் அவாள் செயல்?🔊 சென்னையை அடுத்த மாதவரத்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி. முறையான பராமரிப்பு இல்லாத மின்பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதே காரணம் என புகார்.🔊 திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் பலி. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்பு.🔊 சுடுகாட்டுப் பாதைக்கு அரசு நிலம் இல்லாவிட்டால், தனியாரிடம் கையகப்படுத்த உத்தரவு. தற்போதைய காலத்தில் யாரும் விட்டுக்கொடுத்து வாழ்வது இல்லை என உயர்நீதிமன்ற கிளைகருத்து .🔊 நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை. ஜாமினில் வெளியே வந்தவரை கொன்றுவிட்டு தப்பிய கும்பல்.🔊 நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து, 6 ரூபாய் 40 பைசாவாக நிர்ணயம். கடந்த 5 நாட்களில் மட்டும் 70 காசுகள் உயர்ந்தன.🔊 சென்னையில் இளைஞரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற ரவுடி கும்பல் கைது. டேட்டிங் ஆப்பில் பெண் குரலில் பேசி வரவழைத்து பணம் பறிக்க முயன்றபோது தாக்குதல்.🔊 ஆரணி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து. ஓட்டுநர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மழலைகள் மருத்துவமனையில் அனுமதி.🔊 ஐதராபாத்தில் மாரத்தான் போட்டியி்ல் பங்கேற்ற மென்பொறியாளர் சில நிமிடங்களில் உயிரிழப்பு. பதக்கம் வென்று, மகிழ்ச்சியுடன் சாப்பிட சென்ற நேரத்தில் திடீர் மாரடைப்பால் மயங்கி விழுந்து பலியானார்.🔊 விண்வெளி வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சூரிய ஒளிக் கதிர்களின் சமச்சீரற்ற தன்மை கண்டுபிடிப்பு. இந்தியாவின் ஆதித்யா-L1 விண்கலத்தில் உள்ள கருவி கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.🔊 வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். படிவம் 6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.🔊 மகாராஷ்டிராவில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு 27 கிலோ தங்கம் 12 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை. திருட்டு வழக்கில் கைதான முன்னாள் எஸ்.ஐ மீண்டும் ஒரு துணிகர கொள்ளையை அரங்கேற்றியது அம்பலம்.

லஞ்சம் கொடுப்பதும் குற்றமே,

தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து லஞ்சம் ஒளிந்து விட்டது.?

லஞ்சம் கேட்டால் என் பெயரை சொல்லுங்கள் என மேடைதோறும் முதல்வர் விஜய் கூறிக் கொண்டு வருகிறார்.


ஆனால், அமைச்சர்கள் பலர் பொதுவெளியில் தங்களை தூய சக்தியாக காட்டிக் கொள்வதாக நினைத்து, உளறிக் கொட்டுகின்றனர்.


அந்த வகையில் சமீபத்தில் அமைச்சர் ராஜ்மோகன், இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் தர ஒருவர் பேரத்தில் ஈடுபட்டதாக பேசிய பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அமைச்சர் பொறுப்பில் வகிக்கும் ஒருவர், அரசு நேர்மையாக செயல்படுவதாக பொதுவெளியில் பேசுவது தவறில்லை. ஆனால், பதவிக்காக லஞ்சம் தர முன் வந்ததாக பேசிய பேச்சை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.


லஞ்சம் தர முன் வந்த ஒருவரைப் பற்றி, ஏன் தமிழக அரசில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அமைச்சர் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை. அவர் யார்? அவரது பின்புலம் என்ன?

பதவியை வைத்து அவர் பெற விரும்பிய ஆதாரம் என்ன இப்படி பல கேள்விகள் எழுகின்றன.


ஏற்கனவே, மதுரை தவெக எம்எல்ஏ, கட்சிப்பதவிக்கு ரூ.15 லட்சம் கேட்பதாக, அவரது கட்சியை சேர்ந்தவர்களாலே ஆடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உள்ளாட்சியில் மேயர் பதவி முதல் கவுன்சிலர் பதவி வரை ரேட் நியமித்து பல லட்சம் வரை பேரம் பேசப்படுவதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசி வருகின்றனர்.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக அக்கட்சி பிரமுகரே மேடையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது.


ரூ.5 கோடி லஞ்சம் தர முன் வந்த தகவல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவரான லயோலா மணி மூலம் வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


அவரிடமே மறுப்பு தெரிவித்த விஷயத்தையும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சட்ட அமலாக்க நிறுவனத்திற்கு அமைச்சர் தகவல் தெரிவிக்கவில்லை.


இந்த விவகாரம் மறைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு திமுக தரப்பில் புகார் செய்யப்பட்டுள்ளது.


மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென கோரியுள்ளனர்.


தூய ஆட்சி நடத்துவதாக கூறிக் கொள்ளும் தவெக அரசு, இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களை ஆராய்ந்து, உரிய விசாரணை நடத்த முன்வர வேண்டும்.

இதுபோதாதென்று, அரசுப்பள்ளி விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, பள்ளிக்கு முடி ஒழுங்காக திருத்தி வராத மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டுமென்கிறார். கேட்டால் தாய் மனநிலையில் கூறினார் என்று விளக்கமும் தருகிறார்.


இப்படி ஒவ்வொரு அமைச்சரும், சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது தவெக ஆட்சியில் தொடர்கிறது.


இனியாவது, முதல்வர் விஜய், தனது அமைச்சர்கள் மற்றும் கட்சியினரின் நடவடிக்கைகளை கண்காணித்து கடிவாளம் போட வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி..

40 சொகுசு வில்லாக்கள்.

முறைகேடு..

 ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து சொகுசு வில்லாக்களை வாங்கிய அரசு உயர் அதிகாரிகள், அதே நிறுவனத்திற்கே அவற்றை வாடகைக்கு விட்டுள்ளனர்.


இந்த விவகாரம் கடந்த 2 நாட்களாகவே ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி தொடர்பான இந்த விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன..


ராஜஸ்தான் முன்னாள் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிகர் அகர்வால், அவரது மனைவி பிரஷாகா மாத்தூர் ஆகியோரது குடும்பத்தினர், அனந்தா ரிசார்ட்ஸ் நடத்தும் கோயல் பேஷன் நிறுவனத்திடமிருந்து 40 சொகுசு வில்லாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கியிருக்கிறார்கள்.

சந்தை விலையைவிட குறைவாக வாங்கிய இந்த சொத்துக்களை மீண்டும் அதே நிறுவனத்திற்கே விட்டுள்ளனர்.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.80 கோடி வாடகை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 40 சொத்துக்களில் 20 காட்டேஜ்கள் உதய்பூர் புஜ்தா பகுதியில் 2023 செப்டம்பரிலும், 20 வில்லாக்கள் அல்வார் அஜாப்கர் பகுதியில் 2026 மார்ச் மாதத்திலும் வாங்கப்பட்டுள்ளன.

இவற்றுக்காக மொத்தம் ரூ.6.16 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


ஷிகர் அகர்வால், அவரது மனைவி ஆகியோர் தலா 10 காட்டேஜ்களை வாங்கியுள்ளனர். அல்வாரில் 2 பேரின் பெயர்களிலும் தலா 4 வில்லாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


அதுமட்டுமல்ல 2 மகன்கள் பெயரில் தலா 4 வில்லாக்களும், பிரஷாகா மாத்தூரின் பெற்றோர் பெயரில் தலா 2 வில்லாக்களும் வாங்கப்பட்டுள்ளன.

மகன்கள் சார்பில் பிரஷாகா மாத்தூர் பவர் ஆஃப் அட்டர்னி மூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

தேவயானியை கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொன்னேன்.. ஏன்னா, இயக்குனர் ராஜகுமாரன் அம்மா உருக்கம்

சொத்து முரண்பாடு

2026 ஜனவரி 7-ம் தேதி தாக்கல் செய்த சொத்து கணக்கில் ஷிகர் அகர்வால் 14 சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


அடுத்த நாள் அவரது மனைவி தாக்கல் செய்த கணக்கில் தனக்கு சொத்துக்கள் இல்லை என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் பெயரில் 40 சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு ரிசார்ட் கட்ட அனுமதி கொடுப்பதில் விதிமுறைகள் மீறப்பட்டதா, தேவையான சான்றிதழ்களை வாங்காமலேயே அனுமதி கொடுத்தார்களா, அரசு தரப்பில் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அக்டோபர் 29-ம் தேதியே ஷிகர் அகர்வால் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அக்டோபர் 31-ம் தேதி அவரது மனைவி பிரஷாகா மாத்தூரும் கூடுதல் டிஜிபி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.


2 பேரும் இப்போது காத்திருப்போர் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது...!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி