அரசு வேலை வாய்ப்புக்கு,.ஆப்பு...
என ஏமாற்றிய பெப்சி? ஒன்றிய அரசு குற்றச்சாட்டு..
கேஃபின் அடங்கிய பானங்களை ’எனர்ஜி டிரிங்க்’ என நுகர்வோருக்கு பெப்சிகோ நிறுவனம் ஏமாற்றி விற்பனை செய்ததாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விமர்சித்துள்ளது.
FSSAI என அழைக்கப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த ஜூன் மாதம் அதிக கேஃபின் கொண்ட பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.அதில், ’இந்திய சட்டப்படி எனர்ஜி டிரிங்க் என்ற தனிப்பிரிவு கிடையாது, இவை கேஃபின் அடங்கிய பானங்கள் மட்டுமே’ என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் நுகர்வோரை ஏமாற்றும் வகையில் இத்தகைய பானங்களில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற வார்த்தையையோ அல்லது 'உடலுக்கு ஆற்றல் தரும்' என்ற விளம்பரங்களையோ பயன்படுத்தக் கூடாது என்றும் ஏற்கெனவே அச்சடித்துள்ள லேபிள்கள் மற்றும் விளம்பரப் பொருட்களை 90 நாட்களுக்குள் சந்தையில் இருந்து முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த 90 நாள் கெடுவை எதிர்த்து பெப்சிகோ நிறுவனம் FSSAI-யிடம் முறையிட்டது. அதில், தங்களிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பழைய லேபிள்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள் இருப்பதாகவும், அவற்றை வீணாக்காமல் பயன்படுத்தி முடிக்க 12 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்றும் கேட்டது.
ஆனால், இதனை FSSAI ஏற்க மறுத்த நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பெப்சிகோ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நிறுவனங்கள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் 'எனர்ஜி டிரிங்க்' லேபிள் ஒட்டப்பட்ட பழைய இருப்புப் பொருட்களைப் விற்பனை செய்யலாம் என்றும், புதிய பானங்களில் FSSAI-ன் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பெப்சிகோ நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து FSSAI அமைப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் நோக்கில், பெப்சிகோ நிறுவனம் தனது அதிக காஃபின் கொண்ட 'அட்ரினலின் ரஷ்' (Adrenaline Rush) மற்றும் 'ஸ்டிங் எனர்ஜி' (Sting Energy) பானங்களை வேண்டுமென்றே 'எனர்ஜி பானங்கள்' என்று சந்தைப்படுத்தி விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அரசின் சட்டத் திட்டங்கள் குறித்து பெப்சிகோ நிறுவனத்துக்கு முன்னரே தெரிந்திருந்தும் அவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நவம்பர் 6-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், முக்கிய தீர்ப்பு அதில் வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இளைஞர் வேலை வாய்ப்புக்கு ஆப்பு?
தமிழ்நாடு அரசு பணிகளில் ஒப்பந்த பணியாளர் முறையை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் தவெக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில், ``தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை (Overseas Manpower Corporation Limited - OMCL ) அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஆட்களை அவுட்சோர்சிங் (Outsourcing) முறையில் வழங்கும் முகமையாக நியமிக்கிறது’’ என்று கூறியிருக்கிறது.
இதனால் அரசின் ஒரே அலுவலகத்தில் ஒரே வேலை செய்யும் ஒருவர் நிரந்தர பணியாளர். மற்றொருவர் ஒப்பந்த பணியாளர்.
ஒருவருக்கு உரிய ஊதியமும் பணி பாதுகாப்பும் உண்டு. மற்றொருவருக்கு நிலையற்ற பணியும் எதிர்காலம் குறித்த அச்சமும் இருந்து கொண்டே இருக்கும்.
அரசாங்கம் என்பது நிரந்தர வேலைவாய்ப்பு கொடுக்கும் அமைப்பாக இருக்க வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்புகளை ஒப்பந்த வேலைவாய்ப்புகளாக மாற்றி இளைஞர்களின் எதிர்காலத்தை நிலையற்றதாக மாற்றி விடக்கூடாது. தமிழக இளைஞர்கள், கேட்பது தங்களது கல்விக்கும் உழைப்புக்கும் தகுதியான நிரந்தர வேலைவாய்ப்பாகும்.
இது அவர்களின் உரிமை சார்ந்த எதிர்பார்ப்பாகும்.
தமிழக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, இருக்கின்ற அரசு பணியிடங்களையும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்? என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு சங்கங்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றன.
அரசு பணிகளையே வெளிமுகமை வழியாக நிரப்ப முற்படுவது, அரசுப்பணிக்காக இரவுபகல் பாராமல் படித்து, அயராது முயலும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் செயலாகும்.
தவெக அரசு ஆட்சிக்கு வந்தது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கா அல்லது இருக்கின்ற வேலைவாய்ப்புகளைக்கூட நிரந்தரமற்றதாக மாற்றுவதற்கா?
அரசுப்பணிகள் அனைத்தையும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தாரை வார்த்துவிட்டு, அரசு போட்டித்தேர்வு வயது வரம்பை உயர்த்துவதால் யாருக்கு என்ன பயன்? அரசு பணிகளை வெளிமுகமை மூலம் நியமித்தால் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று எதற்கு? கலைத்துவிடலாமே?.
எல்லாவற்றையும் தனியாரிடம் ஒப்படைத்தால் அரசு எதற்கு? ஆட்சி நிர்வாகம்தான் எதற்கு? தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் அரசுக்கு என்ன தயக்கம்?
அரசுப்பணிகளை வெளிமுகமைகளிடம் ஒப்படைப்பதால் பயன்பெறப்போவது வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களா அல்லது பணியாளர் வழங்கும் நிறுவனங்களா என சரமாரி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியாளர்களை தற்காலிக ஒப்பந்த முறையில் நியமிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிடுவதோடு, காலியாக உள்ள பணியிடங்களை அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து, பல லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப்பணி வாய்ப்பையும், சமூகநீதி இட ஒதுக்கீட்டையும், தொழிலாளர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இளைஞர்களுக்கு 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள், 5 லட்சம் இளைஞர்களுக்கு உள்ளாட்சி அளவில் வேலைவாய்ப்புகள் என்று தவெக தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு, இப்போது, ஒப்பந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறுவது அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.












