கிழிந்த முகத்திரை

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும்  கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் நாளை (நவ.09) மிதமான மழைக்கு வாய்ப்பு.- வானிலை ஆய்வு மையம் தகவல்.தவெக அரசு பதவிக்கு வந்த பிறகு கடந்த மாதங்களில் மட்டும் 2,993 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல்."இனி பேனர்கள் வைத்தால் அந்த நிகழ்ச்சிகளில் நிச்சயம் பங்கேற்க மாட்டேன்".. வைகோ எச்சரிக்கை.உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் தீபவளி அன்றுமுதலிடம் பெற்ற சென்னை.பட்டாசு கழிவுகளை அகற்ற சென்னையில் 600 தூய்மைப் பணியாளர்கள்.தமிழ் நாடு அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறேன்: நடிகர் சூர்யா.பூஷெர் நகரில் உள்ள பள்ளி குழந்தைகள், அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என அனைவருக்கும் இந்த மாத்திரைகளை உடனடியாக வழங்கும் ஈரான் அமெரிக்கதாக்குதல் அச்சம்..




ஏற்பா?இல்லையா??

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

மதுரையை சேர்ந்த கதிரேசன் உள்பட 20 பேர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 22.05.2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது, சீருடை மற்றும் சீருடை அணியாத காவல்துறையினர் கல்வீச்சு நடத்தி, தடியடி நடத்தியதுடன், பேரணியைக் கலைக்க முன்னறிவிப்பின்றி நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

சீருடை அணியாத காவல்துறையினர் மற்றும் சிறப்புப்பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டு, போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நபர்களின் தலை, மார்பு மற்றும் வாயை குறிவைத்து ஸ்னைப்பர் ரக நவீன துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

 11க்கும் மேற்பட்டோரைக் சுட்டுக் கொன்றதற்கு காரணமான காவல்துறை துணைத் தலைவர் கபில்குமார் சரட்கர், காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் மற்றும் ஆட்சியர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அய்பிசி 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய மாநில காவல்துறை இயக்குநருக்கு  உத்தரவிட வேண்டும்.

இந்நிகழ்வு தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமயில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஅய் விசாரணைக்கு மாற்ற வேண்டும். விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளும் அரசுப்பணிகளைத் தொடர இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்.

 சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ஆணையிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தனர்.

 இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சிபிஅய் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், காவல் ஆய்வாளர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தார். 

மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஏ.கண்ணன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் ஒரேயொரு காவல்துறை ஆய்வாளர்மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பது ஏற்புடையதல்ல. 

சிபிஅய்யின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:

நிகழ்வு தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டதா, இல்லையா?

 அப்போதைய ஆட்சியர், 3 தாசில்தார்கள் உள்ளிட்ட சில உயரதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்தது. அதன் மீது அரசின் நிலைப்பாடு என்ன? பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு அரசு ஏற்ெகனவே ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. 

மீதி ரூ.20 லட்சம் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆக.13ல் தெளிவுபடுத்த வேண்டும். 

 இவ்வாறு உத்தரவிட்டனர்.

கிழிந்த முகத்திரை

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், போதைக்கு ஆதரவாகவும், அரசியலுக்கு எதிராகவும் பேசி இருக்கிறார்.


த.வெ.க. சார்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருட்களைப் பற்றிப் பேசி இருக்கிறார். ‘அந்தப் பக்கம் போய் விடாதீர்’ எனச் சொல்லிவிட்டு, ‘வாழ்க்கையில் Fun, Enjoyment இருக்கும், ஆனா அடிமையாகிட வேண்டாம்’ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.


‘எதற்கும் அடிமையாகிவிட வேண்டாம், ஆனால் Fun, Enjoyment இருக்கும்’ எனச் சொல்வது, ‘Taste செய்வதால் தவறில்லை’ என்று சொல்கிறாரா முதலமைச்சர் விஜய்?

அறிவுரை என்ற பெயரில் ‘போதைப் பொருள் Taste செய்வது ஒன்றும் தவறில்லை’ என்று சொல்ல வருகிறாரா விஜய்?


பொறுப்புள்ள பதவியில் இருக்கும் விஜய், ‘போதைப்பொருள் பயன்பாடு அறவே கூடாது. அது உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடும்’ என்றுதானே பேசியிருக்க வேண்டும். ‘ Fun, Enjoyment இருக்கும், ஆனா அடிமையாகிவிட வேண்டாம்’ என்றால் என்ன அர்த்தம்?


சில வாரங்களுக்கு முன் மாணவர்களை போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வைத்தவர்தான் முதலமைச்சர் விஜய்.

‘’போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.

நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன்.


மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்” என்று உறுதி மொழி எடுத்தார். எடுக்க வைத்தார். தமிழ்நாடு முழுவதும் மாணவர்களை இந்த உறுதிமொழி எடுக்க வைத்தார்.


அவரேதான் இன்று மாற்றிப் பேசுகிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தமிழ்நாட்டு மாணவ சமுதாயமும் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அதே நாளில்தான் அமைச்சர் சரத்குமாரின் வீடியோவானது வெளியானது.

விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து ஏ.டி.எம். கார்டு வைத்து பொடி நசுக்கினார் அமைச்சர் சரத்குமார். அந்த வீடியோ வெளியானது.


அவர் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் போது ‘பவுடர்’ இழுக்கிறார். மொபைல் போன் திரையில் ‘பவுடர்’ போட்டு ஏ.டி.எம்.கார்டு மூலமாக அதைச் சீர் செய்கிறார். 500 ரூபாய் நோட்டு வைத்து இதை மறைத்துக் கொள்கிறார். இதையே வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று ரீல்ஸ் ஆக அவரே வெளியிட்டுக் கொள்கிறார்.


இந்த அமைச்சரை இதுவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவில்லை விஜய். இத்தகைய விஜய்யிடம் இருந்து இது போன்ற அறிவுரையைத்தானே எதிர்பார்க்க முடியும்?


விஜய்யின் மிக அருமையான தத்துவப் பாடம் உண்டே?

‘’பத்தாது பாட்டில் நா குடிக்க

அண்டால கொண்டா சேர்ஸ் அடிக்க கெட வெட்டி கொண்டாங்கடா

ஏன் பசி நான் தணிக்க – என்று பாடியவரிடம் இந்த மாதிரியான அறிவுரை தானே வரும்?

“மில்லி உள்ள போனா போதும்

கில்லி வெல்ல வருவான் பாரு’’ – என்பது அந்தப் பாடலில் வரும் பொன்வரி ஆகும். அதில் உருவானவர்தான் இன்றைய அமைச்சர் சரத்குமார்.


அவருக்குப் பெயரே ‘கில்லி’ சரத் என்பதுதான். எந்த மாதிரியான கும்பலிடம் தமிழ்நாடு சிக்கி இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவில்லையா?

போதையை ‘டேஸ்ட்’ பாருங்கள் என்பதைப் போல இன்னொரு முக்கியமான அறிவுரையையும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்.


தேர்தலுக்காக அன்று மாணவர்கள் – குழந்தைகளை பயன்டுத்திய விஜய் இப்போது, ‘மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை’ என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். எதனால் இந்த மாற்றம்? மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள்.


அவர்கள் முழு அரசியலையும் தெரிந்து கொண்டால் தன்னைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வார்கள் என்ற பயமா?

தேர்தலுக்கு முன், ‘பெற்றோரிடம் அடம் பிடித்து விஜய் மாமாவுக்கு ஓட்டுப் போடச் சொல்லுங்கள்’ என்று சொன்னவர் தான் இந்த விஜய். இன்று, ‘ படிக்கும் வயதில் அரசியல் தேவையில்லை’ என்று அப்படியே திருப்பிப் போடுகிறார்.


விஜய்யின் உண்மை முகத்தை மாணவர்கள், இளைஞர்கள் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்ற பயமா?

‘அவரை நம்பி ஏமாந்துவிட்டோம்’ என்று பெரியவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் இப்போது சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ‘நிறைய பண்ணுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டோம்’ என்று இளைஞர்கள் பலரும் இப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.


அதனால்தான், ‘அரசியல் வேண்டாம்’ என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார் விஜய்.

குழந்தைகளை தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தியது தொடர்பாக விஜய் மீது வழக்கு இருக்கிறது. ‘குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அதற்காக எனது வெற்றியை செல்லாது என்று சொல்ல முடியாது’ என்று உயர்நீதிமன்ற மனுவில் குறிப்பிட்டவர்தான் விஜய்.


ஆம், குழந்தைகளை பரப்புரைக்குப் பயன்படுத்தினேன் என்பதை ஒப்புக் கொண்ட விஜய், ‘உங்களுக்கு அரசியல் தேவையில்லை’ என்று இன்று ஏன் சொல்ல வேண்டும்?


மொத்தத்தில் அவர் முகத்திரையை அவரே கிழித்துக் காட்டிக் கொண்டு இருக்கிறார். அசிங்கமாகவும், அருவெறுப்பாகவும் இருக்கிறது முகம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி