போலீசுக்கு தேவை போலீஸ்,.!

🔲 மதுரையில் தனிஷ்க்கில் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி? முகமூடி அணிந்து வந்த கொள்ளையன் தங்க, வைர நகைளை சாக்குப்பையில் அள்ளிச் சென்றது அம்பலம்🔲 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஆளுநர் அர்லேகர். சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஒன்றிய அரசு அறிக்கை கேட்டிருந்த நிலையில் சந்திப்பு🔲 வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்தம் புயலாக வலுப்பெற வாய்ப்பு. 19 முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யக் கூடும் என்று அறிவிப்பு🔲 விலைவாசி உயர்வில் நாட்டிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம். அக்டோபர் மாதத்திலும் தேசிய சராசரியை மிஞ்சி சில்லறை பணவீக்கம் 7.29 சதவீதமாக அதிகரிப்பு🔲 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக  3வது நாளாக ஆலோசனை. சட்டம் ஒழுங்கு டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு🔲 நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மோசமான ஆட்சி நடப்பதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி நடைபெறாத நாளே இல்லை என்று சாடல்🔲 காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல். மருத்துவர், நோயாளிகள் உள்பட 6 பேர் பலி.. 30 பேர் படுகாயம்



போலீசுக்கு பாதுகாப்பு !

விஜய் ஆட்­சி­யில் பொது­மக்­கள் தான் அச்­சத்­தில் வாழ்­கி­றார்­கள் என்­றால் பொது­மக்­க­ளைக் காக்க வேண்­டிய போலீ­ஸா­ரும் அச்­சத்­தில் வாழ்­கி­றார்­கள். போலீ­ஸா­ரையே கொலை செய்­வ­தும், அவர்­க­ளையே அடிப்­ப­தும் நாட்­டில் அதி­க­மாகி இருக்­கி­றது.

தீபா­வளி அன்று 15க்கும் மேற்­பட்ட கொலை­கள் தமிழ்­நாட்­டில் நடந்­துள்­ளது. 

அதில் அச்­சம் தரு­வது தேனி­யில் நடந்த படு­கொலை ஆகும். தேனி மாவட்­டம் பழனி செட்­டி­பட்டி காவல் நிலை­யத்­தில் சிறப்பு சார்பு ஆய்­வா­ள­ராக இருப்­ப­வர் செந்­தில்­கு­மார். இவர், மாற்­றுப் பணி­யாக தேனி டி.எஸ்.பி.

அலு­வ­ல­கத்­தில் பணி முடித்­து­விட்டு வீடு திரும்­பிக் கொண்டு இருந்­தார்.

சம­தர்­ம­பு­ரம் முக்­கிய சாலை­யில் மது போதை­யில் பட்­டாசு வெடித்து, அதை ரீல்ஸ் ஆக எடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள் சிலர். பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அவர்­கள் செயல்­பட்­ட­தால், அந்த இளை­ஞர்­க­ளுக்கு அறி­வுரை சொல்லி இருக்­கி­றார் செந்­தில்­கு­மார். அவர்­கள் இவர் பேச்­சைக் கேட்­க­வில்லை. காவல்­துறை கட்­டுப்­பாட்டு அறைக்கு தக­வல் அனுப்­பி­விட்டு, அங்கு நடப்­பதை இவர் போனில் பதிவு செய்து கொண்டு இருந்­தார். இதைப் பார்த்து ஆத்­தி­ர­ம­டைந்த மது­போதை ஆட்­கள் இவரை அடிக்­கத் தொடங்­கி­னார்­கள். சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னார்­கள். அரு­கில் இருந்த பொது­மக்­கள் இதைப் பார்த்து செந்­தில் குமாரை அவர்­க­ளி­டம் இருந்து மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ளார்­கள். சில நிமி­டங்­க­ளில் செந்­தில்­கு­மார் இறந்து போனார்.

செந்­தில்­கு­மார் அப்­போது பணி­யில் இல்லை என்று காவல்­து­றை­யின் அறிக்கை சொல்­கி­றது. பணி­யில் இருந்­தார் என்று காவல் துறை­யைக் கையில் வைத்­தி­ருக்­கும் முத­ல­மைச்­சர் விஜய் அறிக்கை சொல்­கி­றது. நிர்­வா­கம்

எவ்­வ­ளவு தள்­ளா­டு­கி­றது என்று இதன் மூலம் தெரி­ய­வில்­லையா?

தேனி­யில் போலீஸ்­கா­ரர் செந்­தில்­கு­மார் கொல்­லப்­பட்ட அன்று

சென்­னை­யி­லும் அதே­போல ஒரு தாக்­கு­தல் நடந்­துள்­ளது. பரங்­கி­ம­லை­யில் இரவு ரோந்­துப் பணி­யில் இருந்­தார்­கள் காவ­லர்­கள். போதை­யில் வந்த

3 பேரை போலீ­ஸார் நிறுத்தி இருக்­கி­றார்­கள். அப்­போது காவ­லர் ராஜாவை போதை ஆசா­மி­கள் கடு­மை­யாக தாக்கி இருக்­கி­றார்­கள்.

கட­லூர் மாவட்­டம் நெல்­லிக்­குப்­பத்­தி­லும் இதே போல் போலீ­ஸார் தாக்­கப்­பட்­டுள்­ள­னர். காவ­ல­ரின் சட்­டை­யைப் பிடித்து அடிக்க வந்த வீடி­யோக்­கள் இணைய தளத்­தில் பரவி வரு­கி­றது.

கடந்த 10 ஆம் தேதி­யன்று சேலத்­தில் என்ன நடந்­தி­ருக்­கி­றது என்­றால்.. தலை­மைக் காவ­லரை கத்­தி­யால் குத்த முயன்­றுள்­ளார் ஒரு­வர். ஓம­லூர் அருகே தாதி­யம்­பட்டி டாஸ்­மாக் கடை­யில் கூட்­டத்தை ஒழுங்­கு­ப­டுத்த முயன்­றுள்­ளார் தலை­மைக் காவ­லர் சங்­கர். ஆத்­தி­ர­ம­டைந்த பிர­பா­க­ரன் என்­ப­வர், கத்­தியை எடுத்து தலை­மைக் காவ­லரை மிரட்டி குத்த வந்­துள்­ளார். அரு­கில் இருந்­த­வர்­கள் பிர­பா­க­ரனை பிடித்து தலை­மைக் காவ­லரை

காப்­பாற்றி இருக்­கி­றார்­கள்.

போதைக் கலாச்­சா­ரம், விஜய் ஆட்­சி­யில் போலீ­ஸையே போட்­டுத்

தள்­ளும் அள­வுக்கு முத்­திக் கொண்டு வரு­வ­தைத் தான் இது காட்­டு­கி­றது. இவை ஏதோ தீபா­வ­ளி­யில் இருந்­து­தான் தொடங்கி இருக்­கி­றது என நினைக்க வேண்­டாம். விஜய் ஆட்­சிக்கு வந்­தது முதல் கிரி­மி­னல்­க­ளின்

அட்­டூ­ழி­யம் அதி­கம் ஆகி வரு­கி­றது. இத­னால் பொது­மக்­க­ளைக் காக்க வேண்­டிய காவல் துறையே பாதிக்­கப்­பட்டு வரு­கி­றது.

« ஆகஸ்ட் 31 ஆம் தேதி­யன்று குடி­யாத்­தம் தலை­மைக் காவ­லர் தாம­ரைச் செல்வி கத்­தி­யால் குத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டார்.

« செப்­டம்­பர் 19 தேதி சென்னை நுங்­கம்­பாக்­கம் லேக் ஏரியா பகு­தி­யில் வசித்து வந்த 58 வய­தான ஆயு­தப்­படை உதவி ஆய்­வா­ளர் ராஜ் தனது

வீட்­டில் தீயில் கரு­கிய நிலை­யில் இறந்து கிடந்­தார். அவ­ரது மனை­வி­யும், தேவா என்­ப­வ­ரும் சேர்ந்து பெட்­ரோல் ஊற்றி கொன்­றது பின்­னர் தெரிய வந்­தது.

« செப்­டம்­பர் 28 ஆம் தேதி ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், பர­மக்­குடி அரசு மருத்­து­வ­ம­னை­யில் மோத­லைத் தடுக்க முயன்­ற­போது பெண் தலை­மைக் காவ­லர் கண்­ணகி தாக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­தார்.

« அக்­டோ­பர் 31 ஆம் தேதி அரி­ய­லூ­ரில் ஊர்க்­கா­வல்­படை வீரர் வெங்­க­டே­சன் ரோந்­துப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­தார். பொது­ம­டத்­தில் மது அருந்­தி­விட்டு

தக­ராறு செய்­த­வர்­க­ளைத் தட்­டிக்­கேட்­ட­போது காவ­லரை சிலர் தாக்­கி­னர். அதில் அவர் உயி­ரி­ழந்­தார். இதன் தொடர்ச்சி தான் தேனி­யில் செந்­தில்­கு­மார் கொலை செய்­யப்­பட்டு இருப்­பது.

பெண்­க­ளைக் காக்க சிங்­கப் பெண் படை அமைத்த விஜய் ஆட்­சி­யில் பெண் காவ­லர்­கள் நிம்­ம­தி­யாக இருக்­கி­றார்­களா?

சிவ­கங்கை ஆயு­தப்­படை பிரி­வில் பணி­யாற்­றும் பெண் காவ­லர் கூட்­டுப் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளான சம்­ப­வம் கடந்த ஜூன் மாதம் நடந்­தது. 3 பேர் கைது செய்­யப்­பட்­டார்­கள். தூத்­துக்­குடி மாவட்­டம் குல­சே­க­ரப் பட்­டி­னத்­தில் காவல் நிலை­யத்­தில் பணி­யாற்றி வந்த பெண் பணி­யா­ள­ருக்கு, வாட்ஸ்­அப் மூலம் பாலி­யல் தொல்லை கொடுத்­தார் காவல் ஆய்­வா­ளர். திரு­நெல்­வே­லி­யில் பெண் தலை­மைக் காவ­ல­ருக்­குப் பாலி­யல் தொல்லை கொடுத்த விவ­கா­ரத்­தில், சிறப்பு உதவி ஆய்­வா­ளர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

கோவை­யில் ஆய்­வா­ளர் சுவர்­ண­வள்ளி, கும்­ப­கோ­ணத்­தில் தலை­மைக் காவ­லர் கவிதா, கண்­ண­மங்­க­லத்­தில் எஸ்.ஐ.கவிதா ஆகி­யோர் மீது தாக்­கு­தல் நடந்­துள்­ளது. சிங்­கப் பெண்­களே பீதி­யி­லும் பயத்­தி­லும் இருக்­கி­றார்­கள் விஜய் ஆட்­சி­யில்.

விஜய் ஆட்­சிக்கு வந்த பிறகு இது­வரை 4 காவ­லர்­கள் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். ஒரு ஊர்க்­கா­வல் படை வீரர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார். 5 பெண் காவ­லர்­கள் தாக்­கப்­பட்­டுள்­ளார்­கள். 

3 பெண் காவ­லர்­கள் பாலி­யல் துன்­பு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார்­கள். இது­தான் விஜய் ஆட்சி. அவர் கட்­டுப்­பாட்­டில் தான் காவல் துறை இருக்­கி­றது.

பொது­மக்­களை அல்ல, காவல் துறை­யையே காக்க துப்பு இல்­லா­த­வர் தான் இன்­றைய முத­ல­மைச்­சர் விஜய்.

ஐந்து மாதம் கழித்து நேற்று சட்­டம் ஒழுங்கை ஆய்வு செய்­தா­ராம் முத­ல­மைச்­சர். அவர் தினந்­தோ­றும் ஆய்வு நடத்­தி­னா­லும் இப்­ப­டித்­தான் இருக்­கப் போகி­றது தமிழ்­நாடு.

தெர்மோமீட்டரை உடைத்தால் காய்ச்சல் தீருமா?

துருக்கியின் அன்டால்யாவில் ஐ.நா.-வின் 31-வது காலநிலை மாற்ற மாநாடு துவங்கியுள்ள வேளையில், இந்தியத் தலைநகர் நச்சுக் காற்றால் மூச்சுவிடத் திணறுகிறது.


நவம்பர் 8 தீபாவளி இரவு, தில்லியின் காற்றில் கலந்திருந்த நுண்ணிய நச்சுத் துகள்களின் அளவு, உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பான வரம்பை விட சுமார் 250 மடங்கு அதிகரித்தது.


ஆனால், மக்களைக் காக்க வேண்டியமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், “எங்கள் கருவிகளால் 1,000-க்கு மேல் அளவிட முடியாது; எனவே அந்தத் தரவுகளை நீக்கிவிட்டோம்” எனக் கைவிரித்துவிட்டது. ‘எரிசக்தி மற்றும்தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையத்தின்’ (சிஆர்இஏ) அறிக்கையின்படி, இவ்வாறு 18 சதவிகித தரவுகள்திட்டமிட்டுத்தவிர்க்கப்பட்டதால், தில்லியின் உண்மையானமாசு அளவு 49 சதவிகிதம் குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

நோயைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தெர்மோமீட்டரை உடைக்கும் இந்தப்போக்கு பொறுப்பற்ற செயலன்றி வேறென்ன?

இந்திய நகரங்கள் ஆண்டுதோறும் நச்சுக்கூடங்களாக மாறுவதற்கு வைக்கோல் எரிப்போ, பட்டாசுகளோ மட்டுமே காரணமல்ல; கார்ப்பரேட்லாபத்திற்காகச் சுற்றுச்சூழல் விதிகளை அரசு நீர்த்துப் போகச் செய்வதே முக்கியக்காரணமாகும்.


காற்று மாசுவில் 15 சதவிகிதம் பங்களிக்கும் நிலக்கரி அனல்மின் நிலையங்கள், சல்பர் டை ஆக்சைடு நச்சுப் புகையைக் கட்டுப்படுத்தும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்பது விதி. ஆனால், “செலவு அதிகமாகிறது” என

நிறுவனங்கள் முறையிட்டதால், 78 சதவிகிதஆலைகளுக்கு ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது.


தில்லியைச் சுற்றி 300 கி.மீ. சுற்றளவில் உள்ள இந்த ஆலைகளிலிருந்தே 81 சதவிகித கந்தக டை ஆக்சைடுவெளியாவதாக சிஆர்இஏ எச்சரிக்கிறது. இந்த விலக்கால் மின்கட்டணம் யூனிட்டுக்கு 25-30 பைசா குறையும் என அரசு வாதிடுகிறது.


ஆனால், அந்த 30 பைசா சேமிப்பின்மறுபக்கம் மருத்துவமனைக் கட்டணமாகவும், பறிபோகும் உயிர்களாகவும் சாமானிய மக்கள் தலையில்விழுகிறது. லாபம் தனியார் கணக்கிலும், இழப்பு பொதுமக்களின் நுரையீரலிலும் சேர்கிறது.


ஒன்றிய அரசு ஒருபுறம் ‘பசுமை எரிசக்தி’ எனப் பேசிக்கொண்டே, மறுபுறம் ஒடிசா முதல்சத்தீஸ்கர் வரை பழங்குடியினரின் காடுகளை அழித்து புதிய நிலக்கரிச் சுரங்கங்களைத் திறக்கப் பெரும் தொழில் குழுமங்களுக்கு அனுமதி வழங்குகிறது.


2025-ம் நிதியாண்டிலும் தூய்மை ஆற்றலுக்கு 10 சதவிகிதம் மட்டுமேமானியம் ஒதுக்கப்பட்டு, புதைபடிவ எரிபொருள்களுக்கு மூன்று மடங்கு அதிக மானியம் வழங்கப்பட்டுள்ளது.


கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச்செலவைக் குறைக்கக் காற்றை மாசுபடுத்துவதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும்.


பசுமை ஆற்றலை ஊக்குவிப்பதோடு, இந்தமாற்றத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமற்ற நேரடிப் பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி