ஆபாச செய்தியாளர் அருள்!
🗞️ வங்கக்கடலில் இன்று உருவாகிறது அக்வான் புயல். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல்.
🗞️ சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு மிகக் கனமழை எச்சரிக்கை. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தல்.
🗞️ மதுரை செக்கானூரணி காவல்நிலையத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 காவலர்களிடமும் நீதிபதி 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை
🗞️ பெண் ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்.
ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம். நேர்மையான் நேர்மையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர்ஆணையம்உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, அரசியல் அழுத்தம் இன்றி விசாரித்து 7 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகி அது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அது தொடர்பாக ஜோசப் விஜய் வாயே திறக்காத நிலையில் எம்எல்ஏவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
ஆனால், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனினும் தவெக எம்எல்ஏவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் திமுக சார்பில் நேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்த புகாரை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்.
நேர்மையான் நேர்மையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்து, அரசியல் அழுத்தம் இன்றி விசாரித்து 7 நாட்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு காவல்துறை டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.உலகை மாசுபடுத்தும் முதல் 5 நாடுகள் எவை?
காலநிலை மாற்றத்தை அதிகரிக்கும் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் முதல் 5 நாடுகளில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ரஷ்யா ஆகியவை உலகளாவிய வெளியீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக நாடுகள் மொத்தம் 54.1 பில்லியன் டன் வாயுக்களை வெளியிட்டுள்ளன.
காலநிலை மாற்றம் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கு தீர்வு காண உலக நாடுகள் துருக்கியில் கூடி விவாதித்து வருகின்றன. கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுங்குடில் வாயுக்கள் பூமிப்பந்தின் வெப்ப நிலை உயர்வுக்கு காரணமாகி இயற்கை சீற்றங்களுக்கு வித்திடுகின்றன.பசுங்குடில் வாயுக்களை அதிகமாக வெளியிடும் முதல் 5 நாடுகள் எவை என பார்க்கலாம்.
கடந்தாண்டு மட்டும் 54.1 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை உலக நாடுகள் வெளியிட்டுள்ளன. இதில் சீனா முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு இந்நாடு 15.98 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த வெளியீட்டில் 29.5% ஆகும். 6.02 பில்லியன் டன் வாயு வெளியீட்டுடன் 11.1% பங்குடன் அமெரிக்கா 2ஆவது இடம் பிடித்து இருக்கிறது.
4.51 பில்லியன் டன் வாயு வெளியீட்டுடன் 8.3% பங்களிப்புடன் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. உலகில் வெளியாகும் பசுங்குடில் வாயுக்களில் பாதியை இம்மூன்று நாடுகளே வெளியிடுவது
குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியன் 3.12 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டு 3.12% பங்குடன் 4ஆவது இடம் பிடித்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யா 2.57 பில்லியன் டன் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டுள்ளது.
இது உலகளாவிய வெளியீட்டில் 4.8% ஆகும். பிற நாடுகள் 21.9 பில்லியன் டன் வாயுவை வெளியிட்டுள்ளன. இதன் பங்கு 40.5% ஆகும்.




