குற்றவாளிகளைக் காப்பாற்றிய குற்றவாளிகள்!

இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை.!! ஆதாரத்துடன் குற்றச்சாட்டுதலைமையின் ஒப்புதல் பெற்றபிறகே கருத்துகளை தெரிவிக்க வேண்டும்: அதிமுக அறிவிப்பு.மதிமுகவில் 3 ஆண்டுகள் பணியாற்றிய அமைச்சர் பார்த்திபனை தெரியாது என வைகோ சொன்னது பொறாமையால் தான்: மல்லை சத்யா .த.வெ.க,துணை சபாநாயகர் மீது வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைசென்னை கிண்டி மக்கள் மாளிகையில் ஆளுநர் அர்லேகருடன் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்புமணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை: வனத்துறை அறிவிப்பு டாஸ்மாக் நிறுவனத்தில் காலி பணியிடங்கள்: தனியார் மூலம் தற்காலிக ஊழியர்கள் நியமனம்.கோர்ட் தீர்ப்பைத்தான் மதிக்க மாட்டீங்களே! நூலக ஊழல் வழக்கில்! தவெக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கைவானம் ஒன்றும் இடிந்துவிடாது..ஏன் அவசரப்படுறீங்க? செந்தில் பாலாஜி கேசில்.. தமிழக அரசை விளாசிய நீதிபதி.

ஒரு முதலீட்டாளர்.இந்திய வங்கிகளில் கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் முதல்முறையாக பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

வரி செலுத்துவதற்காக வங்கிகளில் இருந்து அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டதால், வங்கிகளின் கையிருப்பு குறைந்து, அவை ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

இதையடுத்து வங்கிகளுக்கு அவசரமாக ரூ.1 லட்சம் கோடி நிதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.குற்றவாளிகளைக் காப்பாற்றிய குற்றவாளி !

எவ்­வ­ளவு கேவ­ல­மான, மோச­மான, கிரி­மி­னல் மய­மான ஆட்சி தமிழ்­நாட்­டில் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தற்கு உதா­ர­ணம் கள்­ளக்­கு­றிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்­னேஷ் இன்­ன­மும் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருப்­பது.

கள்­ளக்­கு­றிச்சி பெண் மாவட்ட ஆட்­சி­ய­ருக்கு ஆபாச குறுஞ்­செய்தி அனுப்பி, அவ­ருக்­குத் தொடர்ச்­சி­யாக பாலி­யல் தொல்லை கொடுத்து வந்­துள்­ளார் ‘விஜய்’ அருள் விக்­னேஷ். இது ஜூலை மாதம் 31ஆம் தேதியே மாவட்ட ஆட்­சி­ய­ரால் ஆட்­சித் தலை­மைக்­குப் புகா­ரா­கச் சொல்­லப்­பட்­டுள்­ளது.


நவம்­பர் மாதம் 24ஆம் தேதி வரைக்­கும் எந்த நட­வ­டிக்­கை­யும் முத­ல­மைச்­சர் விஜய் எடுக்­க­வில்லை. இது யார் குற்­றம்? குற்­ற­வா­ளி­யைக் காப்­பாற்­றிய குற்­ற­வாளி தானே இன்று முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் விஜய்?

நான்கு மாத காலம் ஒரு பாலி­யல் குற்­ற­வா­ளி­யைக் காப்­பாற்­றி­ய­தற்கு முத­ல­மைச்­சர் விஜய் பொறுப்­பேற்க வேண்­டாமா? பகி­ரங்க மன்­னிப்­புக் கேட்க வேண்­டாமா?

அருள் விக்­னேஷ் இப்­படி நடந்து கொண்­டார் என்­ப­தைக் கேள்­விப்­பட்டதும், அந்­தப் பெண் மாவட்ட ஆட்­சி­ய­ருக்கு பேசி, ‘உங்­க­ளுக்கு இந்த அரசு பாது­காப்­பாக இருக்­கும்’ என்று சொல்லி இருக்க வேண்­டாமா ‘உங்­கள்’ விஜய்?


சினி­மா­வால் பெண்­களை ஈர்த்து, சினி­மா­வைப் போலத்­தான் விஜய் நிஜத்­தி­லும் இருப்­பார் என்று நம்ப வைத்து, அவர்­களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய், வெற்­றிக்­குப் பிற­கா­வது திருந்­தி­யி­ருக்க வேண்­டாமா? மனம் மாறி இருக்க வேண்­டாமா? பொது­மக்­க­ளைத் தான் காப்­பாற்ற முடி­ய­வில்லை, தெரி­ய­வில்லை. ஒரு மாவட்ட ஆட்­சி­ய­ரைக் காப்­பாற்­றக் கூட முது­கெ­லும்பு இல்­லையா?


அருள் விக்­னேஷ் மீது நட­வ­டிக்கை எடுத்­து­விட்­டால் ஆட்சி கவிழ்ந்­து­வி­டுமா? கவி­ழாது. ஆனா­லும் ஏன் அருள் விக்­னேஷ் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றால் அலட்­சி­யம். நம்மை எவன் கேள்வி கேட்க முடி­யும் என்ற ஆண­வம். அருள் விக்­னேஷ் மீது நட­வ­டிக்கை எடுத்­தால் தனது தூய சக்தி பிம்­பம் கிழிந்து தொங்­கும் என்ற பயம்.


அத­னால் தான் போதைப் பொருள் பயன்­ப­டுத்­திய வீடியோ வெளி­யான பிற­கும் அமைச்­சர் சரத்­கு­மார் இன்­ன­மும் அமைச்­ச­ர­வை­யில் நீடிக்­கி­றார். விஜய் ரசி­கையை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கிய இரண்டு பேருக்கு உதவி செய்த ஸ்ரீவை­குண்­டம் எம்.எல்.ஏ. சர­வ­ணன் காப்­பாற்­றப் பட்­டார். அனைத்­துத் துறை­க­ளி­லும் ஊழல் புகார்­கள் வரு­கின்­றன.


இப்­படி எத்­த­னையோ அமைச்­சர்­கள், எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் வந்­தும் விஜய்­யால் நட­வ­டிக்கை எடுக்க முடி­ய­வில்லை. எடுத்­தால் தனது சாயம் வெளுத்­துப் போகும் என்று நினைக்­கி­றார் விஜய்.


‘இனி சவாலோ, வாய் சவ­டாலோ விட முடி­யாது’ என்று பனை­யூ­ரில் பதுங்கி விட்­டார் விஜய். தன்னை நம்பி வாக்­க­ளித்த மக்­கள் வேட்­டை­யா­டப்­படு­வதை வேடிக்கை பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார் விஜய்.


நடந்த சம்­ப­வத்தை விட, நான்கு மாத காலம் இதை நட­வ­டிக்கை எடுக்­கா­மல் மறைத்து வைத்­தது தான் மாபெ­ரும் குற்­றம்.

தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர், நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வர் கனி­மொழி ராஜாத்தி கரு­ணா­நிதி, கள்­ளக்­கு­றிச்சி விவ­கா­ரத்தை முதன்­மு­த­லில் வெளிப்­ப­டுத்­திக் கண்­டித்­தார். நட­வ­டிக்கை எடுக்­கச் சொன்­னார்.


அப்­போ­தா­வது நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்­டும். ‘யாராக இருந்­தா­லும் விட­மாட்­டேன், ஆட்­சிக்கு வந்­து­விட்­டோம்... ஒரு ஆட்­டம் ஆடிப்­பார்க்­க­லாம் என்று யார் நினைத்­தா­லும் விட­மாட்­டேன்’ என்று சொன்ன விஜய், உட­ன­டி­யாக இதைச் செய்­தி­ருக்க வேண்­டும்.


ஆனால் என்ன நடந்­தது? ‘கனி­மொழி பொய் சொல்­கி­றார், இது கண்­டிக்­கத்­தக்­கது’ என்­றார் ஐந்து கட்சி மாறிய, இப்­போது அமைச்­சர் ஆகி இருக்­கும் நிர்­மல்­கு­மார். ‘ புகார் கொடுத்­தால் நட­வ­டிக்கை எடுப்­போம்’ என்­றார் அமைச்­சர் அருண்­ராஜ். ‘யாரும் புகார் தர­வில்லை’ என்­றார் அமைச்­சர் ராஜ்­மோ­கன்.

கள்­ளக்­கு­றிச்சி விவ­கா­ரம் முத­ல­மைச்­ச­ரின் கவ­னத்­தில் உள்­ளது’ என்­றார் அமைச்­சர் அருண்­ராஜ். எவ்­வ­ளவு நாட்­க­ளாக சிந்­திக்­கி­றார் முத­ல­மைச்­சர் விஜய்? என்ன முடி­வெ­டுக்­க­லாம் என்று முடி­வெ­டுக்க முடி­யாத அள­வுக்கு இது என்ன ஐ.நா. தீர்க்க வேண்­டிய விவ­கா­ரமா?


ஒரே ஒரு போன் போட்டு ஆட்­சி­ய­ரி­டம் கேட்­டு­விட்டு, உண்­மை­தான் என்று உறுதி செய்­த­தும், அந்த எம்.எல்.ஏ.வை ராஜி­னாமா செய்ய வைத்து, கட்­சியை விட்டு நீக்­கி­விட்டு கைது செய்ய நான்கு நிமி­டம் போதும். அதற்கு நான்கு மாதம் பனை­யூ­ரில் தவம் செய்­கி­றாரா?


இவர்­க­ளோடு போய்ச் சேர்ந்­துள்­ளார்­களே, விஜய்­யால் ‘கல்­லாப்­பெட்டி கட்­சி­கள்’ என்று சொல்­லப்­பட்­ட­வர்­கள் – அவர்­கள் என்ன பேசி­னார்­கள்?


‘அய்யோ பாவம் அந்த எம்.எல்.ஏ.’ என்­றார் காங்­கி­ரஸ் தலை­வர் மாணிக்­கம் தாகூர். சொந்­தக் கட்சி பெண் எம்.பி.க்களே மாவட்ட ஆட்­சி­ய­ருக்கு ஆத­ர­வாக அறிக்கை வெளி­யிட்டு த.வெ.க. எம்.எல்.ஏ. மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று சொன்ன போது எம்.எல்.ஏ.வுக்கு ஆத­ர­வாக தனது அரு­வெ­றுப்­பான பேட்­டியை சிரித்­துக் கொண்டே கொடுத்­தார் மாணிக்­கம் தாகூர்.

அப்­படி எந்­தக் குறுஞ்­செய்­தி­யும் அனுப்­ப­வில்லை’ என்று பேட்டி கொடுத்­தார் துரை வைகோ. ‘மறு­ம­லர்ச்சி செக்­யூ­ரிட்டி சர்­வீஸ்’ என்று அவர்­கள் விரை­வில் பெயரை மாற்­றிக் கொண்­டா­லும் யாரும் ஆச்­சர்­யப்­பட மாட்­டார்­கள். அந்­த­ள­வுக்கு முட்­டுக் கொடுத்­துக் கொண்டு இருப்­ப­வர்­கள் அவர்­கள்.


இவை அனைத்­துமே பெண் மாவட்ட ஆட்­சி­ய­ருக்கு விடுக்­கப்­பட்ட மறை­முக மிரட்­டல்­கள். மாவட்ட ஆட்­சி­யரை அங்­கி­ருந்து மாற்ற ஆட்சி மேலி­டம் முயற்சி செய்­த­தா­க­வும், அவர் மறுத்­த­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யாகி இருக்­கிறது. பல்­வேறு நெருக்­க­டி­களை அந்­தப் பெண் ஆட்­சி­யர் இந்த நான்கு மாத­கா­ல­மாக சந்­தித்து வந்­துள்­ளார். தலை­மைச் செய­லா­ளர் சாய்­கு­மார் என்ன செய்து கொண்டு இருக்­கி­றார்? அவ­ருக்கு இதில் எந்­தப் பொறுப்­பும் இல்­லையா?


சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­யின் பெண் நீதி­பதி கொந்­த­ளித்­துப் பேசிய பிற­கும் நட­வ­டிக்கை இல்லை. உயர்­நீ­தி­மன்­றத்­தில் இந்த வழக்கு வந்­தது. அப்­போ­தும், ‘ புகார் வர­வில்லை’ என்­று­தான் அரசு வழக்­க­றி­ஞ­ரைச் சொல்ல வைத்­தார்­கள்.


பொறுத்­தது போதும் என்று புகார் தர முன்­வந்­தார் ஆட்­சி­யர். அவரே பயந்­தி­ருந்­தால் என்ன ஆகி இருக்­கும்? அருள் விக்­னேஷ் அடுத்த ஆபாச குறுஞ்­செய்­தியை அனுப்­பு­வார்.இன்­னும் பல­ருக்கு அனுப்­பு­வார்.


அவ­ரைப் போலவே த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் பல­ரும் இதைச் செய்­வார்­கள். அமைச்­சர் விஜய் பாலாஜி, பெண் எஸ்.பி.யை இரவு நேரத்­தில் தனது வீட்­டுக்கு வரச் சொன்ன விவ­கா­ர­மும் நடந்­துள்­ளது.


இதெல்­லாம் ஒரு ஆட்சி?

இவ­ரெல்­லாம் ஒரு முத­ல­மைச்­சரா? எனும் கேள்வி எழுகிறது.


                                                 -நன்றி:முரசொலி -

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி