அவமானத்தைத் தேடிக் கொடுத்த த.வெ.க,அரசு.

    புதிய தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் 2 கோரிக்கைகள் நிறைவேற்றம். தமிழ்நாட்டின் மக்களவை பிரதிநிதித்துவம் 7.23 சதவீதமாக உயரும், புதிய எண்ணிக்கை 25 ஆண்டுகள் மாறாது என அமித் ஷா உறுதி.🔲    நீதிபதிகள் நியமனத்தில் 5 சதவீதத்துக்கு குறைவாக உள்ள ஒரு சமூகத்துக்கே(பார்ப்பணர்) முன்னுரிமை. நலிவடைந்த பிரிவினர் புறக்கணிக்கப்படுவதாக குடியரசுத் தலைவருக்கு முன்னாள் தலைமை நீதிபதி கடிதம்..🔲    திருப்பரங்குன்றம் மலையில் அனைத்து பக்தர்களும் விளக்கேற்றலாம் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு. தர்காவில் இருந்து 50 மீட்டருக்கு அப்பால் எங்கு வேண்டுமானாலும் விளக்கேற்ற அனுமதி.🔲    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி. திறனற்ற தவெக அரசு மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்.🔲    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பொய் சொன்னவர், பொய் சொல்ல வைத்தவர் மீதும் நடவடிக்கை தேவை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி பெற்றுத் தருவோம் என்றும் உறுதி.🔲    பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் தவெக எம்.எல்.ஏ. 119 நாட்கள் கழித்து கைது என உதயநிதி சாடல். பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் தெரிவித்தாரா? என்றும் கேள்வி.🔲    அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம். கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு தொகுதிகளில் தேர்தல் வழக்கு முடிந்த பின்பே இடைத்தேர்தல் பற்றி முடிவு.🔲   தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு வரும் டிசம்பர் 14-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை விடுமுறை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு🔲    தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில் முகமூடிக் கொள்ளையர்கள் துணிகரம். பொருட்களை அடித்து நொறுக்கி, 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களுக்கு போலீஸ் வலை

🔲    சேலம் மாவட்டம், சங்ககிரி தனியார் கல்லூரியில் திருவள்ளுவர் உருவில் அணிவகுத்த 3 ஆயிரம் மாணவர்கள்.. ஒரே நேரத்தில் ஆயிரத்து 330 திருக்குறள்களையும் ஒப்புவித்து உலக சாதனை.
🔲   எதிர்க்கட்சித் தலைவராக அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு அங்கீகாரம். மேற்குவங்க சட்டமன்ற சபாநாயகரின் முடிவை ரத்து செய்தது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
🔲    முகத்தை மூடி மறைத்து காங்கிரஸ், பாஜக, சுயேட்சை என 3 முறை வேட்புமனு. ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண்.



அவமானத்தைத் தேடிக் கொடுத்த த.வெ.க,அரசு.

 “மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க அரசு. விஜய் அரசு, தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய தூண் மீது, நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதற்காக மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவிலிருந்து எல்லா திசைகளிலும் குறைந்தது 50 மீட்டர் தொலைவில், பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து, இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைத்து தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு, இந்த வழக்கில் தோல்வி அடைந்துள்ளது என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு – மதநல்லிணக்கம் – மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

 நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.

‘மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க அரசு.

திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க அரசு.

 மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.

அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் – திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.

முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. 

அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.

இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.

நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.கொள்கைப்படி நடந்ததா த.வெ.க. அரசு?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சியைப் போலவே இன்றைய த.வெ.க. ஆட்சியும் மிகச் சரியாக நடந்து கொண்டது என்று தவறான பரப்புரை செய்யப்படுகிறது.

 ‘இதை தி.மு.க. பாராட்டி இருக்க வேண்டாமா?’ என்று கல்லாப் பெட்டி கூட்டணியின ஜால்ரா கட்சித் தலைவர் ஒருவரும் சொல்லி இருக்கிறார்.


திருப்பரங்குன்றத்தில் த.வெ.க. அரசு நடந்து கொண்ட முறை என்பது கொள்கை அல்ல, பயம். அதனால்தான் மறுநாளே உச்சநீதிமன்றத்தில் போய் மன்னிப்புக் கேட்டுள்ளது அரசு.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேதான் காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 

அதே மலையில் உள்ள சிக்கந்தர் அவுலியா தர்க்காவுக்கு அருகே ஒரு கல் தூண் உள்ளது. இதில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சிலர் பிரச்சினை கிளப்பினார்கள். இதுதான் நீதிமன்ற விவகாரம் ஆனது. “காலம் காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் இடமே சரியானது, இவர்கள் சொல்லும் தூண் என்பது ஆங்கிலேயர் காலத்தில் நட்ட நில அளவைத் தூண்” என்பதை கடந்த தி.மு.க. ஆட்சி வரலாற்றுப் பூர்வமாக வாதிட்டது.

இதே பிரச்சினை இந்த ஆண்டும் வந்தது. உச்சநீதிமன்றம், ‘இந்த ஒரு நாள் மட்டும் அந்தத் தூணில் தீபம் ஏற்றலாம்’ என்று அனுமதி வழங்கியது. ‘இந்த அனுமதி ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே வழங்கப்படுகிறது. இதை மதுரை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்” என்பதுதான் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை நடந்தது. ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்து வீர்களா?’ என்று நீதிபதிகள் கேட்டபோது, த.வெ.க. அரசின் சார்பில் மதுரை ஆட்சியர், ‘ஆம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம்’ என்றுதான் சொன்னார்.

 தனது அரசின் நிலைப்பாட்டைச் சொல்ல வில்லை. ‘தீர்ப்பை அமல்படுத்துவோம்’ என்றுதான் சொன்னார். இது த.வெ.க. அரசின் முதல் சறுக்கல்.

உச்சநீதிமன்றமே தனது இடைக்கால உத்தரவில் தூணுக்கு சட்டபூர்வமான எந்த உரிமையும் வழங்கவில்லை.

 அன்றைய தினம், வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே, காலம் காலமாக ஏற்றப்படும் இடத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. திடீரென சுட்டிக்காட்டப்படும் இடத்தில் ஏற்றப்படவில்லை.

ஏன் ஏற்றப்படவில்லை என்பதற்காக த.வெ.க. அரசு சொன்ன காரணம்தான் அந்த அரசின் ஊசலாட்டத்தைக் காட்டுகிறது. ‘கல் தூணில் தீபம் ஏற்ற யாரும் வரவில்லை’ என்று காரணம் சொல்லி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மதுரை ஆட்சியர் சொல்கிறார்...

‘’ The time for the ceremony was fixed at 6.00 PM to 6.30 PM, as proposed by the Executive Officer herself. No team authorised by the Devasthanam come also at the place where it is customarily lit; and that the traditions and customs of the Temple be there after brought to the notice of the Court; and (d) that, as per the said resolution, the Thirukarthigai Maha Deepam was lit at about 6.00 PM on 24.11.2026 at the Deepa Mandapam near the Uchi Pillayar Temple on the Hill” என்று சொல்லி இருக்கிறார்.

“தீபம் ஏற்றும் நிகழ்வு நேரமான மாலை 6 முதல் 6.30 மணி வரை தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு வரவேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் 6 மணி முதல் 6.30 வரையிலான நேரத்தில் தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு தீபமேற்ற வரவில்லை” என்றுதான் சொல்லி இருக்கிறார்களே தவிர, தங்கள் அரசின் கொள்கை நிலைப்பாட்டைச் சொல்லவில்லை. ‘தீபம் ஏற்ற யாரும் வரவில்லை, வந்திருந்தால் ஏற்ற விட்டிருப்போம்’ என்பதுதான் த.வெ.க. அரசின் நிலைப்பாடாக இருந்துள்ளது.

‘’தீபத் தூணில் தீபம் ஏற்றாததற்கு நான் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று மனு போட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்.

‘‘That I submit that I took all the steps to comply with the order in good faith. There has been no wilful deliberate disobedience on my part of any directions of this Hon’ble Court. I hold the orders of the Hon’ble Court in highest respect and remain committed to comply with every direction this Hon’ble Court may issue. I sincerely apologise for the lamp not being lit at the Deepathoon. The District Administration made every effort to secure the authorisation of the Devasthanam and the lighting of the lamp at the Deepathoon. However, the Board of Trustees, by its resolution dated 24.11.2026, resolved to light the lamp at the customary place. I submit that I will submit an additional status report with all supporting documents along with the same” என்கிறது மாவட்ட ஆட்சியரின் மனு.

இதுதான் த.வெ.க. ஆட்சியின் ஊசலாட்டமான நிலைப்பாடு ஆகும். இதில் கொள்கை எங்கே இருக்கிறது?

வழக்கமாக எல்லா விஷயத்திலும் நிறம் மாறுவது, பொய் சொல்வதுதான் இதிலும் நடந்துள்ளது.

மீனவர்கள் வாழும் இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட முயற்சித்தார்கள். அதை மீனவர்கள் எதிர்த்ததும், ‘நாங்கள் கட்டப்போவதாகச் சொல்லவில்லையே’ என்றார்கள். அதைப் போலத்தான், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவோம்’ என்றார்கள். ‘பின்னர் தீபம் ஏற்ற ஆள் வரவில்லை’ என்றார்கள். இறுதியில், ‘படுத்தே விட்டானய்யா’ என்பதைப் போல மன்னிப்பும் கேட்டாயிற்று. இந்த உருட்டலுக்கு கொள்கைக் குஞ்சரம் கட்டுவது தவறானது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி