லாபமும்,நட்டமும்...







நட்டத்தில் ஆவின் ...

லாபத்தில் அமுல்..?


தமிழ்நாட்டின் கூட்டுறவு அமைப்பான ஆவின் நிறுவனம் அண்மைக் காலமாகத் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாக உப பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.


அதே நேரத்தில், இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு பால் அமைப்புகள் திறம்படச் செயல்பட்டு லாபம் ஈட்டி வருகின்றன.


அரசு நிறுவனங்கள் நஷ்டமடையும் போது விலையேற்றம் மட்டுமே தீர்வாகுமா அல்லது அதன் உள்கட்டமைப்பு மற்றும் சப்ளை செயினில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டுமா என்ற விவாதம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

அண்மையில் ஆவின் நிறுவனப் பொருட்களின் விலையை 10 முதல் 33 சதவீதம் வரை உயர்த்தி இருக்கிறார்கள்.


அதுவும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலத்தில் இந்த உயர்வு நடந்துள்ளது. தேசிய அளவில் இருக்கும் கூட்டுறவு நிறுவனமான அமுலை விட ஆவின் பொருட்களின் விலை தற்போது 10 சதவீதம் அதிகமாக இருக்கிறது.


அமுல் நிறுவனத்தால் விலையைக் குறைத்துச் சந்தையில் லாபகரமாக வியாபாரம் செய்ய முடிகிற போது, தமிழ்நாட்டின் அரசு கூட்டுறவு நிறுவனமான ஆவினால ஏன் அதைச் செய்ய முடியவில்லை என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.


ஆவின் நிறுவனம் தற்போது கன்சிஸ்டன்டாக நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது, மாதத்திற்குச் சுமார் 12 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.


இதற்குக் காரணம் தமிழ்நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பால் கொள்முதல் முறையில் இருக்கும் குறைபாடுகள் ஆகும். விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் கொள்முதல் விலை 41 முதல் 44 ரூபாயாக இருக்கிறது.


ஆனால், அவர்களின் உற்பத்திச் செலவோ 60 ரூபாய் ஆகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் 60 ரூபாய் கொடுத்துப் பாலை வாங்குவதால் ஆவினுக்குப் பால் வரத்து குறைகிறது.


அமுல் நிறுவனம் தனது சப்ளை செயின் டைனமிக்ஸை மிகவும் ஸ்ட்ராங்காக வைத்துள்ளது. அவர்கள் சயின்டிபிக்காக லாஜிஸ்டிக்ஸை ஸ்டடி பண்ணி, சில்லிங் சென்டர்ஸ் மூலமாகப் பால் கெட்டுப்போகாமல் சேர்க்கும் நேரத்தைக் குறைத்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 60 சில்லிங் சென்டர்ஸ் மட்டும்தான் உள்ளன.


உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பப்பலோ மில்க் சப்ளை செயினை வலுப்படுத்தி பில்லியன் டாலர் அளவுக்கு எக்ஸ்போர்ட் செய்கிறார்கள்.


ஆவினுக்கு ஆண்டுக்கு 720 கோடி ரூபாய் சப்சிடி கொடுத்தாலும் நஷ்டம் தொடருகிறது. நிர்வாகத் திறனின்மை காரணமாக ஏற்படும் நஷ்டத்தைச் சரி செய்யாமல், விலையை மட்டும் ஏத்திக் கொண்டே போனால் இப்போதுள்ள போட்டியில் சந்தையில் முடியாது.


அமுல் நிறுவனம் கோவா, ஸ்வீட்ஸ் போன்ற வேல்யூ ஆடட் ப்ராடக்ட்ஸை அதிகப்படுத்தி கிராஸ் சப்சிடைஸ் செய்கிறது. ஆவின் நிறுவனமும் தனது ப்ராடக்ட் மிக்ஸை மாற்றியிருக்க வேண்டும்.


எந்தவிதமான இன்னோவேஷனும் இல்லாமல் விலை மட்டும் உயர்த்தப்பட்டால், தனியார் நிறுவனங்களின் போட்டியால் ஆவின் நிறுவனம் மேலும் பலகீனமாக மாறும் ஆபத்து அதிகம் உள்ளது.


இதே நிலை நீடித்தால், மாநிலத்தின் வேலைவாய்ப்புகளும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலைதான் உருவாகும்.

நான்மட்டும் தோற்றால்,

ட்ரம்ப் எச்சரிக்கை...!


தேர்தலில் எங்கள் கட்சி வெற்றிபெறவில்லை என்றால், எந்த மசோதாவையும் சட்டமாக்க விடமாட்டேன் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  


அமெரிக்காவில், இன்று (03-11-26) இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கும், பின்பு நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில், நாடாளுமன்றத்தின் 435 மக்களவை பிரதிநிதிகள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு (35) செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


இந்த தேர்தலின் முடிவுகள், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதில் முக்கியத்துவம் பெறக்கூடும் என்பதால், ஆளும் கட்சியான குடியரசு கட்சிக்கும் மற்றும்  எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.    


இந்நிலையில், சமீபத்திய பேட்டியின்போது ட்ரம்ப் பேசுகையில், ‘‘நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஒருவேளை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெற்றிபெற்றால், அவர்கள் கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் எனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிப்பேன்.


தொடர்ந்து நிராகரித்தால் பின்னர் அவர்கள் என்னிடம் சமரச பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்” என்று தெரிவித்தார்.  


ஏற்கனவே, ஈரான் மீதான போர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் உள்ளிட்ட கொள்கைகளில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அமெரிக்க கடுமையான பின்னடைவைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.


இதனால், அந்நாட்டு மக்கள் ஆளும் குடியரசு கட்சி மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, ஆளும் குடியரசு கட்சி இந்த தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி