அரோகரா,அரோகரா,
விஜய்க்கு அரோகரா..? ரமேசுக்கு அரோகரா..??
தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகனுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் உண்டு. இந்தாண்டு நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 15ம் தேதி நடந்த கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோருக்கு ‘அரோகரா’ என வேல் முருகனுமா,குப்புசாமியும் முழக்கமிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பெருமானுக்கு மட்டுமே உரிய புனிதமான ‘அரோகரா’ கோஷத்தை முதல்வர் மற்றும் அமைச்சருக்கு பயன்படுத்தியதாக பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும், வேதனையையும் தெரிவித்து வருகின்றன.
சூரசம்ஹார விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் பாடுவதற்கும், நிகழ்வை நேரலையில் தொகுத்து வழங்குவதற்கும் அரசு சார்பில் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.நாட்டுப்புற பாடகரும் இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினருமான வேல்முருகன், ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டதை தொடர்ந்து, முதலமைச்சருக்கும் அறநிலையத்துறை அமைச்சருக்கும் ‘அரோகரா’ எனக் கோஷமிட்டார்.
இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதத்தை தூண்டியது. இதுபோன்று பாடகர் புஷ்பவனம் குப்புசாமி முதலமைச்சர் விஜய்யை முருகப்பெருமானுடன் ஒப்பிட்டு பாடிய சம்பவமும் அரங்கேறியது.
இதனால் கோயிலுக்கு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். தங்களுக்கு பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தை காட்டுவதற்காக கடவுளுக்கு இணையாக கோஷம் போடுவதா என ஆன்மிக பக்தர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.
ஆன்மிக நிகழ்வை தவெக அரசு அரசியல் மேடையாக மாற்றிவிட்டதாகவும், கோயில் விழாக்களில் ஆகம விதிகள் மீறப்படுகிறது. கடவுளுக்கு இணையாக மனிதர்களை புகழ்வது, பக்தர்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
கோயில்களை முதலமைச்சரின் புகழ்பாடும் இடங்களாக மாற்றும் முயற்சி நடந்துள்ளது. இது கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல்.
வெறும் மன்னிப்போடு இதை கடந்து செல்லாமல் முதலமைச்சர், இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து முன்னணி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புனிதமான வழிபாட்டு மரபை கொச்சைப்படுத்தியதாக கூறி, திருச்செந்தூர் கோயில் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.அசுரனான சூரபத்மன் என்பது ஆணவம், அகங்காரம் மற்றும் தீமையின் அடையாளமாக கருதப்படுகிறது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்வது போல, நம் மனதில் உள்ள தீய குணங்களையும் கர்ம வினைகளையும் அழித்து அருள வேண்டும் என்பதற்காக பக்தர்கள் உற்சாகத்துடன் இந்த முழக்கத்தை எழுப்புகின்றனர்.
ஆனால் முதல்வருக்கும், அமைச்சருக்கும் அரோகரா என கூறுவது என்ன அர்த்தம் என கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக மக்களிடம் முதல்வர் விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
அறநிலையத்துறை அமைச்சர் அதிகார வரம்பை மீறி தனக்கும் சேர்த்து கோஷம் போட்டு கொண்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தற்குறித்தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு அரசை நடத்த முயற்சிக்க வேண்டும்
இது பாசிசமா பாயாசமா? என தவெக அரசை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இது பாசிசமா பாயாசமா? டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் அருண் ராம் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது?தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது?
யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவக் கருவிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் உன்னத பணியைச் செய்யும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடம், அம்பத்தூர், திருமழிசை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கிடங்குகளைச் சீரமைக்கும் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தவெக அரசின் இந்த செயல் மிகவும் வெட்ககேடானது என திமுக சாடியுள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ் எக்ஸ் தளத்தில் திமுக தலைமைக்கழகம் கூறி இருப்பதாவது:
மருத்துவப் பணிகள் கழகமா… இல்லை அது மதுபானப் பணிகள் கழகமா? மருந்தும் மதுவும் ஒரே கூரையில், இது தான் தவெக ஆட்சியின் புதிய சுகாதாரக் கொள்கை! பாராசிட்டமாலும் குவார்ட்டரும் ஒரே கூரையில் இருக்க முடியாது என்மறு காட்டமாக கூறப்பட்டுள்ளது.
தவெக ஆட்சியில் நிர்வாகத் திறன் எவ்வளவு தூரம் ‘புரட்சிகரமாக’ மாறிவிட்டதற்கு சாட்சியே தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்கும் பணிகளை மேற்கொள்வது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.தரமான மருந்துகளைக் குறைந்த விலையில் கொள்முதல் செய்வது, அவற்றைச் சேமிப்பது, தரத்தைப் பரிசோதிப்பது, அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிப்பதுஆகிய பணிகளுக்காகதான் மருத்துவ பணிகள் கழகம் உருவாக்கப்பட்டது.
டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை கசிவு சரிசெய்தல், தரை ஓடுகள் மாற்றுதல், மழைநீர் வடிகால் சீரமைப்பு போன்ற பணிகள் செய்வது என்பது மருத்துவ பணிகள் கழகத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைக்கிறது.
பாராசிட்டமால் மாத்திரைகளையும், இன்சுலின் மருந்துகளையும், அறுவை சிகிச்சை உபகரணங்களையும் இதுவரை பாதுகாத்து வந்த மருத்துவப் பணிகள் கழகம், இனி டாஸ்மாக் கிடங்குகளின் மேற்கூரை ஒழுகுகிறதா?
ஷட்டர்கள் சரியாக மூடுகிறதா?
என்பதைப் பரிசோதிக்கும் ‘உன்னதப்’ பணியை செய்ய போகிறது!
‘சரக்கு’ பாதுகாப்பாக இருந்தால்தான், மருத்துவமனைகளுக்கு ‘வேலை’ இருக்கும் என்ற பொருளாதாரச் சுழற்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை முதல்வர் விஜய் எடுத்திருக்கிறாரா?
அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை; நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைக்கவில்லை; மருத்துவ உபகரணங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை; மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை; படுக்கைகள் இல்லை; ஒழுகும் மருத்துவமனை கூரைகள்; பழுதான ஸ்கேன் இயந்திரம் என எத்தனையோ தீக்கப்படாத பிரச்னைகள் பற்றி புகார்கள் வருகின்றன.
அதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கிற அவலத்தை என்னவென்று சொல்வது!!மருந்துக் கிடங்குகளைக் காப்பாற்ற உருவான கழகம், மதுக் கிடங்குகளையும் காப்பாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
பல ஆண்டுகளாக முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இனி மதுபானக் காப்பீடும் கொண்டு வருவார்கள் போல!
மருத்துவப் பணிகள் கழகமா... இல்லை மதுபானப் பணிகள் கழகமா? என்பதை தெளிவுபடுத்திவிடுங்கள்!
ஏன் என்றால் பாராசிட்டமாலும் குவார்ட்டரும் ஒரே கூரையில் இருக்க முடியாது. ‘மருந்து’ம் ‘மது’வும் வேறு வேறு!" என்று திமுக விளாசி உள்ளது.









