ஓட்டல் சுவரில் தகரம்..
ஓட்டல் சுவரில் தகரம்..
த.வெ.க,MLAக்கள் கூட்டத்துக்கு
உச்சக்கட்ட பாதுகாப்ப!
:முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் மாமல்லபுரம் நட்சத்திர விடுதி சுற்றுச் சுவரில் தகரம் கொண்டு அடைத்து நூற்றுக்கணக்கில் காவலர்கள் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் தனியார் விடுதியில் தவெகவை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களுடனும், தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து வருவது, தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வழங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி பதவியேற்று 6 மாதங்கள் ஆன நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் அலையடித்து வருகின்றன.
சில தவெக எம்.எல்.ஏக்கள், எதிர் முகாமுக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவது பெரும் கவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்று கூட்டம் நடைபெறும் மாமல்லபுரம் தனியார் விடுதி இன்று முதல் 3 நாட்ளுக்கு தவெக சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த 3 நாட்களும் தவெக எம்.எல்.ஏக்கள் இங்கு தங்கி இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
தவெகவின் 108 எம்எல்ஏக்களும் மாமல்லபுரம் தனியார் விடுதியில் 3 நாள்கள் தங்கவைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர்கள்அனைவரிடமும் பதவி விலகள் கடிதம் வாங்கப் போவதாகவும் அதனால் எம்எல்ஏக்கள் வெளியில் தங்காமல் இருப்பதைத் தவிர்க்க இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில் பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நூற்றுக்கணக்கில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ள நட்சத்திர விடுதியின் சுற்றுச் சுவரில் தகரம் கொண்டு அடைத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சுவர் வழியாக எம்.எல்.ஏ,க்கள் ஏறிதப்பிவிடக்கூடாது என்பதற்காக தகரம் வைத்து அடைக்கப்படுவதாகத் தெரிகிறது.கூரை ஏறுவதில் த.வெ.க, வினர் திறமை தமிழ்நாடு அறிந்ததே.









