அறிவற்ற நூல்கள் அகற்றம்.
# சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் இன்று மதியம் 1 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
# பெரியார் அறிவுலக நூலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்வதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தி.மு.க புகார் அளித்திருக்கிறது. தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் மின்னஞ்சல் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதில், ஊழலுக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க, கொள்முதல் ஆணைகள், விநியோகப் பதிவுகள், கட்டணப் பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
# ஜப்பானில் ஷிஸுவேகா என்ற இடத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. மத்திய ஜப்பானில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
# தீபாவளிக்கு சிவகாசியில் ரூ.7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகி உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடந்த நிலையில் இந்தாண்டு ரூ.1,000 கோடி அதிகரித்துள்ளது. அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடக்கும் என உற்பத்தியாளர்கள்.
# பெரியார் அறிவுலகத்தில் சர்ச்சைக்குரிய அறிவற்ற நூல்கள் அகற்றம்!
கோவை பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு பதிப்பகம் மற்றும் பினிக்ஸ் பதிப்பகம் ஆகிய இரண்டு பதிப்பகங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட தரமற்ற மற்றும் கருத்துத் தரமற்ற புத்தகங்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதிய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி, யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்தப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன என்பது குறித்து விவாதித்து கோவை பெரியார் அறிவுலகத்தில்
வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு மற்றும் பினிக்ஸ் பதிப்பகங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
அதன்படி, அந்த இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களும் வைக்கப்பட்டிருந்த இரண்டு ரேக்குகளும் காலி செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த புத்தகங்கள் அனைத்தும் தனியாக ஓர் அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற்றன.
மேலும், காலி செய்யப்பட்ட ரேக்குகளில் மற்ற பதிப்பகங்களைச் சேர்ந்த புத்தகங்களைக் கொண்டு அடுக்கும் பணியில் நூலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் எதிர்கட்சிகள் ஆட்சி.!
தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது.
அதிக இடங்களில் வென்ற கூட்டணி என்ற காரணத்தால் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) நெதன்யாகுவை முதலில் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், காடி ஐசென்கோட்டிற்கு (Gadi Eisenkot) இஸ்ரேலின் 38வது புதிய அரசை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை விடுத்து உத்தரவிட்டுள்ளார்.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Raam) கட்சிகள் தங்கள் ஆதரவை ஐசென்கோட்டிற்கு வழங்க முன்வந்துள்ளதால், அவரது கூட்டணிக்கு 67 இடங்கள் கிடைத்தது.
இதனால் அவருக்கு ஆட்சியமைக்க தேவையான 61 இடங்கள் கிடைத்துள்ளதால் இஸ்ரேல் அதிபர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பெரும்பான்மையை நிரூபிக்க காடி ஐசென்கோட்டிற்கு 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அதிபரின் இந்த அழைப்பு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் (Likud) கட்சி அதிகபட்சமாக 27 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
அவரின் கூட்டணிக்கு 53 இடங்கள் கிடைத்த நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மறுதேர்தல் நடத்த இஸ்ரேல் அதிபர் உத்தரவிடுவார் என நெதன்யாகு ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், ஆட்சியமைக்க ஐசென்கோட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், அமைச்சரவையை அமைப்பதில் ஐசென்கோட் பல சவால்களைச் சந்திக்க நேரிடும் என அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

