தடுக்க மாட்டாராம்

தடுக்க மாட்டாராம்...

தனி நீதிமன்றம் அமைப்பாராம்!

குற்றத்தைத் தடுக்கச் சொன்னால் தனி நீதிமன்றம் அமைக்கப் போகிறேன் என்று அறிவிப்பு செய்கிறார் முதலமைச்சர் விஜய்.


எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இருக்கிறவர்தான் விஜய்.

நாடு முழுக்க பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டது. அதைத் தடுக்க முதலமைச்சர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக குற்றங்கள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு, விசாரணை செய்ய தனிநீதிமன்றங்கள் அமைக்கப்போவதாக கூறுகிறார் விஜய்.


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் 26 போக்சோ நீதிமன்றங்களை அமைக்க விஜய் உத்தரவிட்டு இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.


நாடு முழுக்க அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க முதலமைச்சர்என்ன செய்தார்? எதுவமில்லை. முதலில் அவர் தன் கட்சியினர் மீது வரும் பாலியல் பகார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அதைச் செய்யவில்லை. ஒரு அமைச்சர் தன் கட்சி பெண் உறுப்பினர்களை எப்படி பாலியல் வேட்டையாடி வருகிறார் என்பது சமூக வலைதளங்களில் அவரது கட்சிப் பெண்களால் ஆடியோக்களாக வெளியாகி வருகிறது.


தனது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட பிறகு தான் அவர் பதவிகளைப் பெற்றுத் தருகிறார்.


இதனை அவர் வழக்கமாக வைத்துள்ளார் என்று அந்தப் பெண்கள் சொல்கிறார்கள். இதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் போக்சோ போராளி விஜய்?


ஆட்சி மீதோ, தன் மீதோ சமூக வலைதளத்தில் வரும் பதிவுக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்கும் முதலமைச்சர் விஜய், ஒரு அமைச்சர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சரவணன் மீது குற்றம் சாட்டியவர் விஜய் ரசிகை. த.வெ.க. கட்சியில் இருப்பவர். எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி தான் த.வெ.க. உறுப்பினர்களால் அந்த ரசிகை வேட்டையாடப்பட்டார்.

இதுவரை எம்.எல்.ஏ.சரவணன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவரது பதவியைப் பறித்திருக்க வேண்டாமா போக்சோ போராளி விஜய்?


அமைச்சர்களோ, க.வெ.க. எம்.எல்.ஏ.க்களோ தவறு செய்தால் விஜய்யால் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களது தயவால் தான் இவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர்களைத் தூக்கினால் தனது நாற்காலி கவிழ்ந்துவிடும். அதனால் அவர் நடவடிக்கை எடுப்பது இல்லை.


த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதுதான் எத்தனை பாலியல் புகார்கள். இதுவரை அவர் எடுத்த நடவடிக்கை என்ன?


இதேபோல் போதைப் பொருள் கடத்தல் சட்டப்படி பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கவும் 7 தனி நீதிமன்றங்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

இதை அமைப்பதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா?


வெட்டவெளியில் போதை மருந்து பயன்படுத்தி, அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டவர் அமைச்சர் சரத்குமார் . அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த வீடியோ காட்சிகள் வெளியானதும் அவர் பதவியை பறித்திருந்தால் விஜய் சரியான நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லலாம்.


சரத்குமாரை சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலக வைத்திருந்தால் விஜய் சரியான நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லலாம். இதைச் செய்யவில்லை விஜய். 'அமைச்சர் சரத்குமார் அதிகமான பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்ட வேண்டாம்' என்று உத்தரவு போட்டுள்ளார்களாம்.

இது ஒரு தண்டனையா?


சரத்குமாரை நீக்கினால் ஆட்சிக்கான ஆதரவில் ஒன்று குறைந்து போகும். எனவே தனது நாற்காலியைக் காக்க சரத்குமாரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார் விஜய்.


நாகையில் ரூ.300 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தியதாக த..வெ.க. நிர்வாகி பூபாலனை மத்திய வருவாய் புலனாய்வு காவல் துறை கைது செய்துள்ளது.


விஜய் அரசு கைது செய்யவில்லை. ஒன்றிய அரசு தான் கைது செய்துள்ளது. விஜய் வைத்துள்ள போதைப் பொருள் தடுப்புத் துறை என்ன செய்கிறது? அவர்கள் ஏன் பூபாலனை கைது செய்யவில்லை.


ஒழுங்காக கண்காணித்திருந்தால் இவர்கள் தானே பூபாலனை கைது செய்திருக்க வேண்டும்? க.வெ.க. நிர்வாகி என்பதற்காக த.வே.க. ஆட்சி பூபாலனை கைது செய்யாமல் வைத்திருந்ததா? இந்த ஆட்சியின் தயவில்தான் அவர் போதைப் பொருள் கடத்தினாரா?


கைது செய்யப்பட்ட பூபாலன் த.வெ.க.நிர்வாகி. த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டாமா? உள்துறையைக் கையில் வைத்திருப்பவர் முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டாமா?

பூபாலனை கட்சியில் சேர்த்து விட்டு செயற்குழு உறுப்பினர் பதவியை வாங்கித் தந்தவர் த..வெ.க. நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன். அவர் மீது விஜய் என்ன நடவடிக்கை எடுத்தார்?


பூபாலனின் பணம் கடந்த சட்டமன்றத் தேர்த- லில் த.வெ.க.வுக்காக செலவ செய்யப்பட்டுள்ளது என்றால் கட்சித் தலைவர் என்ற முறையில் விஜயின் பதில் என்ன? அவர் இதற்கு பொறுப்பேற்க வேண்டாமா? பூபாலனுக்கு துணையாக இருந்த காவலர்கள் இருவர், இடமாற்றம் தான் செய்யப்பட்டுள்ளார்கள். விஜய் பொறுப்பில் இருக்கும் உள்துறையின் லட்சணம் இதுதான்.


கேரள மாநில மதுவிலக்கு காவல்துறை நீலகிரிக்கு வந்து முகமது நசீப் என்பவரை அக்டோபர் 23 ஆம் தேதி கைது செய்தார்கள். முகமது நசீப், த.வெ.க.வின் நீலகிரி மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் பதவியில் இருக்கிறார்.


இவர் மீதான குற்றம் என்ன தெரியுமா? கோள மாநிலம் வயநாடு பகுதியில் MDMA போதைப் பொருள் கடத்தியதாக வழக்குப் பதிவாகி இருக்கிறது. தன் கட்சி மாவட்ட நிர்வாகி போதைப் பொருள் கடத்தியது த.வெ.க. ஆட்சிக்கு தெரியாமல் போனது எப்படி? உள்துறையை வைத்து விஜய் என்ன செய்கிறார்.


தமிழ்நாட்டில் த..வெ.க. நிர்வாகிகளால் கடத்தப்படும் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு போலீஸார் கண்டு பிடிக்கிறார்கள். கேரள போலீஸார் கண்டு பிடிக்கிறார்கள். விஜய் போலீஸ் கண்டுபிடிக்கவில்லை. தமிழ்நாடு காவல் துறையின் கைகளை கட்டிப் போட்டுள்ளார் விஜய்.


குற்றங்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறவர்களாக காவல் துறையை மாற்றிவிட்டு, தனி நீதிமன்றம் போடுவதால் என்ன பயன்?


குற்றத்தைத் தடுக்க திறமை இல்லாத முதலமைச்சர், சமாளிக்க தனி நீதிமன்றம் என நடிக்கிறார்.


M.L.A,க்களை வாங்கத் தெரிந்தவருக்கு,,

எம்எல்ஏ-க்களை வாங்க தெரிந்த முதல்வர் விஜய்க்கு, வெங்காயம் வாங்க தெரியாதா என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

450 டன் வெங்காயத்தை எந்தவித ஆய்வும் செய்யாமல் அழுகிய நிலையில் தவெக அரசு வாங்கி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், அதை கவர்-அப் செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள் என்றும் சாடியுள்ளார்.தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்காக 450 டன் வெங்காயத்தை கூட்டுறவுத்துறை மூலமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து தமிழக அரசு வாங்கியுள்ளது. 

ஆனால் கொடுக்கப்பட்ட வெங்காயம் தரம் இல்லாமல் இருந்ததால், அதனை என்ன செய்வதென தெரியாமல் தடுமாறி வருகிறது.

இதனால் லாரி ஓட்டுநர்கள் புலம்பும் வீடியோக்கள் வெளியாகின. 

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? 

உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த சோப்ளாங்கி அரசு என்பதற்கு, கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.

ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. 

மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.

இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, “நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை – கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.

அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.

 இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார்.

வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. 

இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?

ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.

எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

 என்று பதிவிட்டுள்ளார்.



"டிரம்ப் "

முடிந்த கனவு....!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிரம்பை முன்னிறுத்திதான் குடியரசுக் கட்சி தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், இப்படி செய்தது பெரிய அளவுக்கு கை கொடுக்கவில்லை. 

குறிப்பாக டிரம்ப் நேரடியாக சென்று பிரச்சாரம் செய்த தொகுதிகளில் கூட.. அவரது குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். மொத்தத்தில்டிரம்ப்கட்சிதோல்வியடைந்திருக்கிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை அதிபர் என்பதை தாண்டி.. டிரம்ப் என்பவர் பெரிய கை! அப்படித்தான் குடியரசுக் கட்சி நினைத்திருந்தது. 

அதை சொல்லிதான் டிரம்பையும் ஏற்றி வைத்திருந்தார்கள். எனவே அவர் வந்து கை காட்டினால் போதும்.. கழுதையை நிற்க வைத்தால் கூட அந்த தொகுதியில் வெற்றி நிச்சயம் என்கிற ரேஞ்சுக்கு பேச்சுக்கள் இருந்தன.

டிரம்பும் இதை நம்பினார். நான்தான் அமெரிக்காவின் ஹீரோ என்று சொல்லிக்கொள்ளாத குறை ஒன்றுதான். மற்றபடி அவர் பேச்செல்லாம் அப்படித்தான் இருக்கும். யதர்த்தமும் கிட்டத்தட்ட டிரம்புக்கு ஆதரவாகத்தான் இருந்தது. 

கடந்த 2016ம் ஆண்டு முதல் அமெரிக்க அரசியலில் டிரம்ப் ஆதரிக்கும் வேட்பாளர்கள்தான் ஜெயிப்பார்கள் என்கிற நிலை இருந்தது.

டிரம்ப் எந்த தொகுதிக்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்கிறாரோ.. ஊடகங்களில் எந்த வேட்பாளரை ஆதரித்து பேசுகிறாரோ.. அவரது தீவிர ஆதரவாளர்கள் அந்த வேட்பாளருக்குதான் மொத்தமாக வாக்களிப்பார்கள். இதனால், குடியரசுக் கட்சிக்குள்ளேயே டிரம்ப் யாரை கைக்காடடுகிறாரோ.. அவரே இறுதி வேட்பாளராக நிறுத்தப்படும் சூழல் இருந்தது.

2026 இடைக்காலத் தேர்தலிலும் இதே வேகத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தார் டிரம்ப். ஆனால், இவரது செல்வாக்கு பல இடங்களில் பலிக்கவில்லை. 

குறிப்பாக கேன்சாஸ் மாநில செனட் தேர்தலில் எடுத்துக்கொண்டால்.. டிரம்ப் காரணி எந்த அளவுக்கு பெயிலியர் என்று தெரிந்துவிடும்.

இந்த மாநிலத்தில் 94 ஆண்டுகளாக தொடர்ந்து குடியரசுக் கட்சிதான் ஜெயித்து வருகிறது. இது அவர்களின் கோட்டை. எனுவே இந்த கோட்டையில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ரோஜருக்கு ஆதரவாக டிரம்பும், துணை அதிபர் வேன்ஸும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

 அப்புறம் என்ன? 

அமோக வெற்றி! இதுதான் குடியரசு கட்சியின் கணக்கு. ஆனால், ரிசல்ட் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக வந்திருக்கிறது. 

மொத்தத்தில் டிரம்ப்பை கூட்டி வந்து பேச வெச்சாலும்.. கோட்டையில் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது.

இதற்கான காரணம், அமெரிக்க முழுவதும் இருந்த அதிருப்திதான். சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக.. ஈரானுடன் போருக்கு போய், ஹார்முஸ் ஜலசந்தியை மூட வைத்து.. 

பெட்ரோல், டீசல் ரேட்டை ஏற்றிவிட்டார் டிரம்ப். அதை தொடர்ந்து மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறியது. இதுபோக உள்ளூர் பிரச்சனைகள், குடியேற்ற விவகாரத்தில் தேவையில்லாமல் சீன் போட்டது என மொத்தமும் டிரம்பின் காலை வாரிவிட்டது.

இந்த பிரச்சனை இத்துடன் முடியவில்லை. இந்த தோல்வி 2028 அதிபர் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று குடியரசுக் கட்சி அச்சமடைந்திருக்கிறது. 

எனவே கட்சிக்குள் டிரம்ப் தலைமைக்கு எதிராக கலக குரல்கள் வெடித்திருக்கின்றன. டிரம்பை மட்டும் நம்பினால் 2028 தேர்தலில் ஜெயிக்க முடியாது என்று மற்ற தலைவர்கள் பேச தொடங்கியிருக்கின்றனர்.

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் டிரம்ப் பெரும்பான்மை இழந்ததால்.. இனி அவரால் புதிய சட்டத்தை உருவாக்கவோ.. அதை அமல்படுத்தவோ எளிதாக முடியாது.

 மொத்தத்தில் டிரம்ப் பிம்பம் மொத்தமாக சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈரானுக்காக களமிறங்கும்

ஆனால் உண்மை எது?

இரும்புக்கை மாயாவி