ஞானேஷ்குமாரின் S.I.R,
@ வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வருகிற 13ம் தேதி தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்; வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேலும் ஒரு தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@ புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ரகுபதி,
”விராலிமலையில் தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை; வேட்பாளர் அறிவிக்கவில்லை; ஆனால், தீபாவளி என்று சொல்லி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வீடு 2,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை முதற்கட்டமாக விநியோகிக்க தொடங்கியுள்ளார்.
விராலிமலையில் தேர்தலுக்காக வேலை செய்ய ஆரம்பிக்கவில்லை என்று தவெக சொன்னாலும் பணம், பரிசுப்பொருட்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
@ வழக்கமாக மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நிலையில் நவம்பர் 8 தீபாவளியை முன்னிட்டு நாளை ரேஷன் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
@ சென்னையில் இருந்து மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன், முருகன், விஜயகாந்த் ஆகிய 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்களைத் தேடும் பணியை விரைவுபடுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
@ 2025-ஆம் ஆண்டில் சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்தன் தொடர்ந்திருந்த வழக்கை அவரே திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பொன்முடியை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
@ தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களுக்கு மாதாந்திர வரி பகிர்வு தொகையாக ரூ.1,09,019 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான வரிப்பகிர்வு தொகையாக தற்போது ரூ.4466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இதுவரை வரி பகிர்வாக மொத்தம் ரூ.8932 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் 10ல் மாதாந்திரத் தவணை தொகை வழங்கப்படும். பண்டிகை காலம் என்பதால் நவ.5ம் தேதி முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது.
@ நாகை அருகே போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டு, பண அபிஷேகத்துடன் சொகுசாக வாழ்ந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 73, 900 ரூபாய் பணம், தங்கக் கம்மல், போலி தங்க மோதிரங்கள், அடகுக் கடை ரசீதுகள், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மோசடி பணத்தில் பண அபிஷேகம் செய்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
@ ஆந்திராவில் முரசு புயலில் சிக்கி 9 தமிழக மீனவர்கள் மாயமான நிலையில் 4 பேரின் சடலம் கரை ஒதுங்கியது. காசிமேடு மீனவர்கள் உள்ளிட்டோர் மாயம் - 4 பேர் சடலமாக மீட்பு. மாயமான 5 மீனவர்களை தேடும் பணி தீவிரமடைந்தது.
@ சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. வழக்கமான கட்டணங்களை விட 3 முதல் 4 மடங்கு வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.குறிப்பாக, வழக்கமாக ரூ.4,730 ஆக இருக்கும் சென்னை - மதுரை விமான கட்டணம் நவம்பர் 5-ஆம் தேதி ரூ.16,700 ஆகவும், நவம்பர் 6-ஆம் தேதி ரூ.12,600 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல, சென்னை - தூத்துக்குடி கட்டணம் ரூ.17,000-ஐத் தாண்டியுள்ள நிலையில், சென்னை - திருச்சி, சென்னை - கோவை மற்றும் சென்னை - சேலம் ஆகிய நகரங்களுக்கான விமானக் கட்டணங்களும் வழக்கத்தை விட பன்மடங்கு அதிகரித்துள்ளன.
ஞானேஷ்குமாரின்
,SIR_-க்குப் பிறகு
கர்நாடக மாநிலத்தில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிக்கு பிறகு சுமார் ஒரு கோடி வரை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. எஸ்.ஐ.ஆர்-க்கு முன் 1.03 கோடியாக இருந்த பெங்களூருவின் வாக்காளர் எண்ணிக்கை, எஸ்.ஐ.ஆர்-க்கு பின், அக்டோபர் 27ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 43.13 சதவீதம் குறைந்து 59.08 லட்சமாக உள்ளது.
பெருநகர பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ.ஆர்-க்கு பின் மொத்தம் 59,08,151 வாக்காளர்கள் உள்ளனர்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 28 சட்டப்பேரவைத் தொகுதிகளில், இறுதி வாக்காளர் பட்டியலில் 46.88 லட்சம் பெயர்கள் ஏஎஸ்டிடிஓ எனும் (இல்லாதவர்கள், இடம் மாறியவர்கள், இறந்தவர்கள், போலி வாக்காளர்கள் மற்றும் இதர பிரிவினர்) வகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதில் 7.27 லட்சம் பேர் தொகுதியில் இல்லாதவர்கள் எனவும், 32.74 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறியவர்கள் எனவும், 3.19 லட்சம் பேர் இறந்தவர்கள் எனவும், 63,549 பேர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் எனவும் குறிக்கப்பட்டுள்ளனர்.பெங்களூருவின் சட்டப்பேரவைத் தொகுதிகளிலேயே, ஏ.எஸ்.டி.டி.ஓ நிலை அறிக்கையின்படி அதிகபட்சமாக பெங்களூரு தெற்கு தொகுதியிலிருந்து 3.63 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக மகாதேவபுராவில் 2.96 லட்சமும், பொம்மனஹள்ளியில் 2.65 லட்சமும், கே.ஆர்.புரத்தில் 2.58 லட்சமும் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் அனைத்தும் பாஜ வசம் இருப்பவை ஆகும்.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கணிசமான எண்ணிக்கையில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் சிவாஜிநகர் தொகுதியில் 81,236 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. அதிகப்படியான நீக்கங்களைக் கண்ட பெங்களூரு தெற்கு தொகுதி தான், இந்த திருத்தப் பணிகளுக்குப் பிறகும் 4.41 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது.
மாவட்ட வாரியான தரவுகளின் பகுப்பாய்வில், எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பு 41.07 லட்சம் வாக்காளர்களுடன் முதலிடத்தில் இருந்த பெலகாவி, தற்போது 36.35 லட்சம் வாக்காளர்களைக் கொண்டுள்ளது.
40.21 லட்சம் வாக்காளர்களைக் கொண்டிருந்த பெங்களூரு நகர்ப்புறத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை 24.01 லட்சமாகக் குறைந்துள்ளது. மைசூருவின் வாக்காளர்கள் எண்ணிக்கை 27.99 லட்சத்திலிருந்து 22.80 லட்சமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், இந்த 3 மாவட்டங்களும் தான் இந்தத் எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகும் வாக்காளர்களின் எண்ணிக்கையில் அதே முதல் 3 வரிசையில் நீடிக்கின்றன.
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி வாக்காளர் திருத்தம் நியாயமாக நடந்துள்ளது என்று நற்சான்று கொடுத்ததால் காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று அவர் சமாளித்தார்.
இந்நிலையில் தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியலை ரத்து செய்துவிட்டு புதியதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கணக்கெடுப்பு 2028ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜவுக்கு சாதகமாகவே ஒன்றிய அரசு நடத்தியுள்ளது என்று குற்றம்சாட்டுகின்றனர்.








