நான் அவரில்லை.....மறந்துடுச்சு.,

Description: cid:image020.gif@01CBCEB4.774B74A0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 1384 கேள்விகள். எனவே இன்னும் 817 கேள்விகள் ஜெயலலிதாவிடம் கேட்க வேண்டியிருப்பதால், அடுத்த விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி மல்லிகார்ஜுனையா ஒத்தி வைத்திருந்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க விலக்குகோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது,               
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.குமார், ஜெயலலிதா நேரில் ஆஜராக அவகாசம் கொடுக்கும்படி மனு செய்தார். அதை ஏற்று கொண்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜெயலலிதா இன்று ஆஜரானார். இதன் பிறகு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகாஜூனரய்யா விசாரணையை தொடங்கினார். ஜெயலலிதா ஓ. பன்னீர் செல்வம் உட்பட 6 அமைச்சர்கள் படைசூழ நீதிமன்றத்திற்கு சென்றார்.
                           
வழக்கு மன்றத்தை சுற்றி சுமார் 1500 போலிசாருக்கு மேல் குவிக்கப்பட்டிருந்தனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான ஜெயலலிதா இன்று ஒரே நாளில் நீதிபதி கேட்ட 578 கேள்விகளுக்கு பதிலளித்தார். எஞ்சியுள்ள 194 கேள்விகளை நாளை கேட்க திட்டமிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் பெரும்பாலனவைக்கு ஞாபகம் இல்லை என்று பதிலளித்துள்ளார்.இது வரை கேட்கப்பட்ட 90% கேள்விக்கு தனக்கு தெரியவில்லை என்றே ஜெயலலிதா பதிலளித்துள்ளார். 
பெங்களூரு நீதிமன்றத்தில் மட்டுமே ஆறு ஆண்டுகள்.அதற்கு முன்னர் தமிழ்நாட்டில் ப்ல ஆண்டுகள் 
135 க்கு மேல் வாய்தாக்கள்  ஆண்டுகள் ஓடி மறைந்ததில்  சொத்து குவித்தது எல்லாம் எப்படி இன்னும் நினைவில் இருக்கும் .மறந்து போவது சாதாரணம்தான்.முன்பு போட்டக் கையெழுத்தே மறந்து போய் நான் போடவே இல்லை என்று சொல்லவில்லையா?
____________________________________________________________________________________________________________
 2-ஜிஅலைவரிசை: விசாரணை இனி திகாரிலேயேதான்.
                    
2-ஜி அலைவரிசை வழக்கு தொடர்பாக இதுவரை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உட்பட 14 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் நிலை முடிந்து தற்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடந்துவருகிறது.
வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை தினந்தோறும் நடந்து வந்தது.
டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி வியாழக்கிழமையில் இருந்து 2ஜி வழக்கு விசாரணை திகார் சிறை வளாகத்திலேயே நடைபெறும் என்று, இந்த வழக்கை விசாரித்து வரும் ஒ.பி சைனி, அறிவித்தார். ஆனால், இதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை.
வழக்கு விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறும் நாட்களில் கனிமொழி, ஆ ராசா ஆகியோருக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்களும், திமுக தொண்டர்களும் நீதிமன்ற வளாகத்துக்கு வந்து அவர்களை அடிக்கடி சந்துத்துப் பேசிவந்தனர்.அதற்கு தடைபோடும் விதமாகவே திகார் சிறை வளாகத்தில் வழக்கை விசாரிக்க நீதிபதி ஷைனி முடிவெடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
 திகார் சிறைக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டால், வழக்குரைஞர்கள், சாட்சிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.வழக்கு விசாரணையை திகார் சிறை வளாகத்துக்கு மாற்றுவதற்கு குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக  வழக்குரைஞர்கள் கூறினர்.
 ___________________________________________________________________________________________________
கொஞ்சம் ஜப்பான்,

                    இது சுனாமி ஜப்பானில் உருவாக்கிய குப்பை.
___________________________________________________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?