கண்டிப்பாக தெரிவிக்க வேண்டிய நன்றிகள்!





ஆனாலும் கமல்ஹாசன் கொஞ்சம் கோபத்தை குறைத்து பேசியிருக்கலாம்.
வேறு  மாநிலத்துக்கு போய் விடும் பேச்சைத்தான் சொல்கிறேன்.
9 கோடிக்கு தராமல் 18 கோடிக்கு விற்கப்பட்டதற்கு பழி அல்லது பலி வாங்க தடை விதித்து 30 கோ டிகள் வரை 10 நாட்களில் தமிழக அரசியார் செய்த நட்டத்தை விஸ்வரூபம் தாண்டி வசூல்ராஜாவாகிவிடும் போல்தான் தெரிகிறது.
அம்மையாரின் பலி எண்ணமும் கூட விஸ்வரூபத்துக்கு இலவசமான விளம்பரமாகிவிட்டது.
‘விஸ்வரூபம்’ திரைப்படம் இந்தியில் ‘விஸ்வரூப்’ என்ற பெயரில் கடந்த வெள்ளிக்கிழமை வட மாநிலங்களில் வெளியானது.

வடமாநிலங்களில் சுமார் ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை அழிப்பதை மையக்கருவாக கொண்ட இந்தப் படத்துக்கு வடமாநில ரசிகர்களிடம் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. 
ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளதால் வடமாநில ரசிகர்கள் ஆவலுடன் வந்து ‘விஸ்வரூப’த்தை கண்டுகளிக்கிறார்கள். இதனால் வட மாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தொடக்கத்திலேயே வெற்றி கிடைத்துள்ளது.

இதை உறுதிப்படுத்துவதுபோல ‘விஸ்வரூபம்’ படத்தின் வசூலும் நல்லவிதமாக உள்ளது. வடமாநிலங்களில் ‘விஸ்வரூபம்’ படம் முதல் நாளே ரூ.1.89 கோடியை வசூலித்து கொடுத்தது. 
2-வது நாளான சனிக்கிழமை வசூல் தொகை ரூ. 2.57 கோடியை தாண்டியது.
ரஜினியின் ‘ரோபோ’ படம் இந்தியில் ரிலீசான முதல் நாள் ரூ.1.75 கோடிதான் வசூலித்தது. ‘விஸ்வரூபம்’ ரோபோவை மிஞ்சி வசூல் சாதனை படைத்துள்ளது. நேற்றும் ரூ.2.60 கோடிக்கு மேல் வசூல் கிடைத்தது. இதன் மூலம் முதல் 3 நாட்களில் விஸ்வரூபம் படம் சுமார் ரூ.7 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 
முதலில் படத்துக்கு எதிர்ப்பு வரலாம் -வன்முறைகள் நடக்கலாம் என்ற வதந்தியால் என்பதால் பல திரையரங்களில் 50 - 60 சதவீத கூட்டமே காணப்பட்டது. இது வெள்ளிக்கிழமை வரையிலான  நிலவரம். 
ஆனால் சனி, ஞாயிறுகளில் படம் பார்க்கவந்தவர்கள்  அதிகரித்திருப்பதாக வடஇந்திய விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விஸ்வரூப் மிகப்பெரிய வெற்றியை இந்தியில் பெறும் என்று திரையரங்க உரிமையாளர்கள்  கூறியுள்ளனர்..

இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ வெளிநாடுகளிலும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வசூலை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. 
வரும் 7-ம் தேதி 520 திரையரங்குகளில் தமிழகத்தில் திரையிடப்படவிருக்கிறது.
இங்கும் நல்ல வரவை எதிர் பார்க்கலாம் .
வழக்கமாக படம் பார்க்க வராதவர்களையும் -கமல் படங்களை பார்க்கப் பிடிகாதவர்களையும் உலகமெங்கும் திரையரங்குகளை நோக்கி வரச்செய்த ஜெயலலிதா,அவரின் பகடைக்காய்களா ன சில இசுலாமிய த் தலைவர்கள் ஆகியவர்களுக்கு கமல்ஹாசன் கண்டிப்பாக நன்றியை தெரிவிக்க வேண்டும்.

அதை அவர் செய்தும் விட்டார்:


 அலாவுதினுக்கு ஒரு அற்புத விளக்கு.கமல்ஹாசனுக்கு "தடை"யே அற்புத விளக்காகி விட்டது.
                         

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?