கணக்குத் தீர்ப்போம் வா!

 உயர்ந்தும்  உயராத பெட்ரோல் விலை.!
சர்வதேச சந்தையில், கச்சா எண் ணெய் விலை நிலவரத்தை பொறுத்தே, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துகிறோம்; மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றுநீண்ட காலமாக எண்ணெய் நிறுவனங் கள் கூறி வருகின்றன.
 இதுதான் உண்மை என்பதை நிரூபிப்பதற்காக, தங்கம் - வெள்ளி நிலவரத்தைப் போல, பெட்ரோல், டீசல் விலையை, நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையையும் எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகிறது.

ஆனால், சர்வதேச சந்தையில், கடந்த 1 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 9 சதவிகிதம் வரை உயர்ந்தும், இந்தியாவில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பெட்ரோல் - டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கடந்த மார்ச் 10 முதல் ஏப்ரல் 10 வரை எண்ணெய் விலை  9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
அதாவது, இந்த காலத்தில்71.73 டாலர் வரை பேரலுக்கு அதிகரித்துள்ளது.


ஆனால், பெட்ரோல் விலை 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் 9 சதவிகிதம் விலை அதிகரித்தும், இந்தியாவில் 1 சதவிகிதம்கூட விலையேற்றம் இல்லை என்றால், அந்த அளவிற்கா, எண்ணெய்நிறுவனங்களுக்கு மக்கள் மீது பாசம் வந்து விட்டது? என்று கேள்விகள் எழுகின்றன.

அதுமட்டுமல்ல, இந்த குறைவான விலையேற்றத்திற்கும், மத்திய அரசுக்கும், நடந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று எவ்வளவுதான் முயன்றாலும் அதை நம்ப முடியவில்லை.

மேலும், மத்திய அரசுக்கும் பெட் ரோல் - டீசல் விலை உயர்வுக்குமான தொடர்புகளுக்கு, கடந்த தேர்தல்கால விலை நிலவரங்களே சாட்சி இருக் கின்றன.
கடந்த ஜூன் 2017 முதல் ஏப்ரல் 2018 வரையிலான காலத்தில், பெட்ரோலின் மாதாந்திர விலை அதிகரிப்பையும், கச்சா எண்ணெய் விலையையும் ஆராய்ந்ததில், சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையை விட, இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளன.அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1 மடங்கு உயர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலைகள் நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.
இவை சாதாரணக் காலங்களில் இருக்கும் நடைமுறைகள்.

 ஆனால், தேர்தல் கால நடைமுறைகள் முற்றிலும் வேறு.
கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான காலத்திலும் இது நடந்திருக்கிறது. அப்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 11 சதவிகிதம் விலை அதிகரித்தது.
ஆனால்,உள் நாட்டில் பெட்ரோல் விலை 1 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தப்படவில்லை.

கடந்த 2017-இல் குஜராத் தேர்தல் நேரத்திலும் இதுவே நடந்துள்ளது.
டிசம்பர் 2017-இல் குஜராத்தில் நடைபெற்ற தேர்தலின் போது அக்டோபர் - நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 10 சதவிகிதம் அதிகரித்தது.
ஆனால் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலை 2 சதவிகிதமும், அக்டோபர் முதல் நவம்பர்வரையிலான காலத்தில் 1 சதவிகிதமும் குறைக்கப்பட்டதும் நடந்தது.

கடந்த 2018 செப்டம்பர் - அக்டோபர் வரையிலான காலத்தில்கூட, கச்சா எண்ணெய் விலை 8 சதவிகிதம் அதிகரித்திருந்தபோதும், உள் நாட்டில் விலை 2 சதவிகிதம் மட்டுமேஅதிகரித்திருந்தது.
அப்போது பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசுகள் வரி விலக்கும்அளிக்கப்பட்டது.
இதுதான் தற்போது மக்களவைத் தேர்தலையொட்டியும் நடந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய்விலை 9 சதவிகிதம் அதிகரித்தும் பெட் ரோல் - டீசல் விலை 1 சதவிகிதம் அளவிற்கே உயர்த்தப்பட்டிருக்கிறது.
தேர்தல் வரும்போதெல்லாம், செய்யும் ஏமாற்று வேலையை, இப்போதும் மோடி அரசு செய்திருப்பதாகவே தெரிகிறது. மக்களின் கோபம் தங்களுக்கு எதிராகத் திரும்பி தேர்தலில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காகவே மோடி அரசு பெட்ரோல் - டீசல் விலை உயர்வில் தலையிட்டு, மட்டுப்படுத்தி வைத்துள்ளது.

தேர்தல் முடிந்து ஒருவேளை மீண் டும் மோடியே வருவாரென்றால், அப்போது இருக்கிறது மக்களுக்கு கஷ்டகாலம்.
கடந்த முறையைப் போல தாங்கக் கூடிய வகையில் அது இருக்காது.

வண்டி, வாகனங்களை நிறுத்தி விட்டு மக்கள் அனைவரும் கால்நடையாகவே திரிய வேண்டியதுதான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கணக்குத் தீர்ப்போம் வா!
நவீன இந்திய சுதந்திரத் திருநாடு ஒரு ஜனநாயக நாடாக நீடிக்கப் போகிறதா அல்லது பாசிசசர்வாதிகார சக்திகளிடம் சிக்கப் போகிறதா என்பதைத் தீர்மானிக்கும் நாள் இன்று.

 பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைமுற்றாக துடைத்தெறிவதன் மூலமே ஜனநாயகப் பயிரை பாதுகாக்க முடியும்.
 உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில்ஒன்றான இந்தியாவின் 17ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுதமிழகம் மற்றும் புதுவையில் இன்று நடைபெறவுள்ளது.
அத்துடன் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

 வருமான வரித்துறையும், தேர்தல் ஆணையமும் பாஜகவின் பங்குதாரர்கள் போல செயல்படுவதால் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் தாங்கள் கடந்த ஐந்தாண்டுகளாக பட்ட துயருக்கும், அவமானங்களுக்கும் கணக்குத் தீர்க்கும் நாள் இன்று.


பண மதிப்பு நீக்கம் என்ற பெயரில் கோடானுகோடி இந்திய மக்களின் வாழ்க்கையை மதிப்பிழக்க வைத்தவர்களை தண்டிக்க வேண்டிய நாள் இன்று.

ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் சிறு, குறுத்தொழில்களை அழித்து, அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி வாழ்வாதாரத்தின் மீது அமிலம் ஊற்றியவர்களை மக்கள் கூண்டில் ஏற்ற வேண்டிய நாள் இன்று.

பெட்ரோல், டீசல், கேஸ் என விலையை பன்மடங்கு உயர்த்தி மக்களின் வருவாயையும், சேமிப்பையும் களவாடியவர்களை ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்ற வேண்டிய நாள் இன்று.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வில் இருள் சூழ வைத்தவர்கள் முகத்தில் இருள் சூழட்டும்.
சகோதரத்துவத்தின் சின்னமாக விளங்கும் இந்தியத் தாயின் பிள்ளைகளை மதமாய், சாதியாய் பிரித்து மோத விட முயன்று, ஒடுக்கப்பட்ட மக்களை ஓரம் கட்டியவர்களை ஓரம் கட்ட வேண்டிய நாள் இன்று.


பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத நாடாக இந்தியாவை மாற்றி கார்ப்பரேட் கனவான்கள், வங்கிகளை சூறையாடுபவர்கள், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்கள் போன்றவர்களின் சொர்க்கமாக நம் நாட்டை மாற்றியவர்களை மீள முடியாத சோகத்தில் தள்ள வேண்டிய நாள் இன்று.

ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, இயற்கை பேரிடர் நிதி வழங்க மறுப்பு, இந்தி, சமஸ்கிருத மொழி திணிப்புஎன அனைத்திலும் தமிழகத்திற்கு வஞ்சகம் இழைத்த பாஜகவையும், அவர்களுக்கு சாமரம்வீசுவதே சுகம் என நினைத்து தமிழகத்தை நவீனகாலனி மாநிலமாக மாற்றிய அதிமுகவினருக்கும், இவர்களோடு சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ள அரசியல் வியாபாரிகளுக்கும் ஒருசேர தண்டனை வழங்க கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இன்று.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படவும், தேசத்தின் மதச்சார்பின்மை பாதுகாக்கப்படவும், உண்மையான வளர்ச்சி மெய்ப்படவும் வாக்களிப்போம்;

மக்களை பழி தீர்த்தவர்களை நினைத்துப் பார்த்து கணக்குத் தீர்ப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாரதீய தேர்தல் ஆணையம்தானே?
தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியிருக்கின்றது மத்தியில் ஆளும் பாஜக .

    தேர்தல் பிரச்சார நிறைவிற்கு பிறகு குறிப்பிட்ட வேட்பாளர் ஆதாயம் அடையும் வகையில், அவரோ அவர் சார்பாக யாரேனும் ஒருவரோ பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தக் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுள் ஒன்று.. 

 எனினும் அத்தகைய விதிமுறையை, சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜாவிற்காக அப்பட்டமாக மீறியுள்ளது பாஜக தரப்பு.
பாலியல் குற்றவாளி ஸ்ரீவத்சவா

 புதன்கிழமையன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள தமிழ்நாடு பிராமணர் சங்க கட்டிடத்தில் இரவு 7:45 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நொய்டா மாநிலத்தில் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரியும் சஞ்சீவ் ஸ்ரீவத்சவா. இவர் பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்ட பாலியல் குற்றவாளி.
அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இவரின் தண்டனைக்கு காரணம் என்ற கோபம் இவருக்கு.

அந்த கோபத்தில் எடுப்பிலேயே, " இங்கு காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் ஊழல்வாதி " என நேரிடையாக தாக்குதல் பாணியைக் கடைபிடிக்க.,  " பாலியல் குற்றஞ்சாட்டப்ட்டு தண்டனைப் பெற்றதற்காகவும்,  அதன் பின்னணியில் ப.சிதம்பரம் இருந்ததாகவும் அதற்கு பழிவாங்குதற்காக தான் இந்த ஏற்பாட்டினை எடுத்துள்ளதாகவும் கூறுகிறார்களே."? எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க அங்கு அமளி ஏற்பட்டது.

 இவ்வேளையில்,  தகவல் அறிந்து அந்தக் கூட்டத்திற்கு வந்த காவல்துறையினரும்,  வருவாய்த்துறையினரும், "இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் " எனக்கூறி கூட்டத்தினை நிறுத்த  வேண்டுமென கூறினர்.ஆனால் பிராமணர் சங்கத்தினருக்கு ஆதரவாக பாஜகவினர் அதிகாரிகளுடன் தகராறு செய்து கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தரப்பட்ட அவரோ கண்டுகொள்ளாமல் இருங்கள் என்று பாஜகவுக்கு வக்காலத்து வாங்கினார்.
இதனால்  அரைமணி நேரம் அமைதி காத்து கூட்டம் முடியும்வரை முடித்து வைத்தது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை. 

கை கட்டி வேடிக்கை பார்த்த,பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரை கண்டித்து புகார் கொடுத்துள்ளனர் காங்கிரஸார். 
என்ன செய்ய.அந்த குற்றசாட்டு வேகமாக விசாரிக்கப்பட்டு பாரதீய தேர்தல் ஆணையக்குப்பைக் கூடைக்கு போயிருக்கும் இந்நேரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார் .
 இவரை ஆதரித்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே பிரச்சாரம் செய்தார் .அப்போது அந்த பிரச்சார மேடையில்  மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று அதிமுக அமைச்சர்  திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் பரபரப்பாக இருந்தது . 


இந்த நிலையில் நேற்று இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது  பேசிய அவர், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார்.

இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார் பின்பு சுதாரித்துக்கொண்டு  ஜோதிமுத்து என்றார் ,

 தொடர்ந்து பேசிய சீனிவாசன் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் மம்தா பானர்ஜி, சரத்குமார் என்றார்.
 இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு உண்டானது . சரத்பவார் என்பதற்கு பதிலாகஅப்படி சொன்னதாக கூறி சமாளித்தார்.
சமீப காலமாக இந்த மாதிரி மாற்றி பேசி பெரும் சர்ச்சைக்குள்  அடிக்கடி சீனிவாசன் மாட்டிக்கொள்கிறார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஒப்புதல் வாக்குமூலம்.
 "உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளி'.
                                                                                                                                       -நரேந்திர மோடி.
அதாவது நாட்டை சுரண்டுபவர்களுக்கு காவலாக இருப்பேன் என்று உண்மையை சொல்லுகிறார்.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தேர்தல் அடையாள மை . 
வாக்கைப் பதிவு செய்யும் வாக்காளரின் இடது கை ஆள்காட்டி விரலில் இந்தமை வைக்கப்படுகிறது. இது அவர் வாக்களித்ததற்கு அத்தாட்சியாக அமைகிறது. 

போலியாக யாரேனும் வாக்களிக்கவந்தால் அவருடைய இடதுகையில் உள்ள நடுவிரலில் இந்த மை வைக்கப்படுகிறது.

 ஜனநாயகத்தைக் காப்பதில் இந்த மை என்பது மிகவும் சிறிய பொருளாக இருந்தாலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 
இந்த மை வைக்கப்பட்ட நாளில் இருந்துகுறைந்தபட்சம் 20 நாள்களுக்கு அழியாது.
இதனால் ஒருமுறை வாக்கு செலுத்தியவர் மறுபடி மறுபடி வாக்கை செலுத்தமுடியாது. 
50 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்த வாக்காளர் அடையாள மை தயாரிக்கும் நிறுவனம் நமது நாட்டில் செயல்பட்டு வருகிறது. 

இது கர்நாடகாவில் உள்ளதசரா கொண்டாட்டங்களுக்குப் புகழ்பெற்றநகரமான மைசூர் நகரத்தில் இயங்கி வருகிறது. மைசூர் வண்ணப்பூச்சுகள் மற்றும்வார்னிஷ் லிமிடெட்

(Mysore Paint & varnishes Limited)  என்ற நிறுவனம்தான் மிக நீண்டகாலமாக இந்தியாவில் இந்த மையை தயாரித்து வரும் பெருமைபெற்ற நிறுவனம் ஆகும்.

1937ம் ஆண்டுமைசூர் மன்னர் நல்வடி கிருஷ்ணராஜ உடையார் இந்த நிறுவனத்தை வண்ணப் பூச்சுகள் மற்றும் அது தொடர்பான பொருள்கள் தயாரிப்புக்காகத் தொடங்கினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு,இந்த நிறுவனம் நாட்டுடைமையாக்கப்பட்டது.

 1962ம் ஆண்டு நம் நாட்டின் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலில் அடையாளமை தயாரிக்கும் அரும்பணி இந்த மைசூர் வண்ணப்பூச்சுகள் மற்றும் வார்னிஷ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது முதல் இப்போது வரையும் இந்தப் பணியை இந்த நிறுவனமே சிறப்பாகச் செய்து வருகிறது. இந்தமையை தயாரிக்க எந்தெந்த பொருள்கள்என்ன என்ன அளவில் கலக்கப்படுகிறது என்பது இரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது.
5 மிலி, 7.5மிலி., 20மிலி, 500 மிலி,80 மிலி ஆகிய அளவுகளில் பாட்டில்களில் மை அடைக்கப்பட்டு தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. 5 மிலி அடையாள மை 300வாக்காளர்களுக்குப் போதுமானது என்றுகூறப்படுகிறது.
இந்த மையில் அடங்கியிருக்கும் முக்கிய வேதிப்பொருள் சில்வர் நைட்ஆகும்.
இந்த வேதிப்பொருள் கருமையாகஉள்ள ஒரு கரைசலுக்கு மேலும் அதிகஅடர்த்தியைக் கொடுக்கும் தன்மையுடையது.
விரலில் இடப்படும்போது விரலில் உள்ள தோலோடு இந்த சில்வர்நைட் வினைபுரிந்து சில்வர் குளோரைடாக மாறுகிறது.
இந்த சில்வர் குளோரைடு நீரில்கரையாத தன்மையுடையது.
அதனால்தான் வாக்காளர் அடையாள மைஇடப்பட்டு ஒருவர் வாக்கு செலுத்திவிட்டு வந்தபிறகு அதை அவரால் எளிதாகஅழிக்கமுடிவது இல்லை.

 மேலும் இந்தசில்வர் குளோரைடை வெந்நீர், ஆல்கஹால், நகச்சாயத்தை அழிப்பதற்கு பயன்படும் வேதிப்பொருள்கள் (nail polish remover) மற்றும் ப்ளீச்சிங் (bleaching) செய்வதால் அழிக்கமுடியாது.

 விரலில் மைஇடப்பட்ட பகுதியில் இருக்கும் தோல்பழையதாகி அகன்று புதிய தோல் வரும்வரை இந்த மை அழியாமல் அப்படியேஇருக்கிறது.

 அதனால் இந்த அழியாத,அழிக்கமுடியாத மை தேர்தல்களில்அதிகஅளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழைய தோல் மறைந்து புதிய தோல் வளரஆரம்பித்தவுடன் இந்த மை இடப்பட்ட அடையாளம் இல்லாமல் போய்விடுகிறது.

இந்தியாவில் மட்டும் இல்லாமல் இது போல தேர்தல் சமயங்களில் அடையாளமையை விரலில் வைக்கும் வழக்கம் உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது இருந்துவருகிறது.

தாய்லாந்து,சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்றநாடுகளுக்கும் இந்த பெருமைக்குரிய அடையாள மை இந்தியாவில் இருந்துஏற்றுமதி ஆகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும்கம்போடியா நாட்டில் நடைபெறும் தேர்தல்களிலும் இந்த அடையாள மையையே பயன்படுத்துகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?