அயோத்"தீ" இடத் "தீ"ர்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.

 தற்போது உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகோய் இம்மாதம் 17அன்று ஓய்வு பெறவுள்ளதால் வரும் 13க்கு முன்பு முக்கியமான பல வழக்குகளில் தீர்ப்பளிக்க உள்ளார்.

அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் குறித்த அயோத்தி வழக்கும் ஒன்று.

ஏற்கனவே  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள  வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை சன்னி வக்பு வாரியம் நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

சமரசப் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்ச னைக்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் அமைத்த சம சரக்குழுவும் 4 மாதங்களாக அனைத்து தரப்பி னரையும் அழைத்துப்பேசியபோதும் அது பலனளிக்கவில்லை.

எனவே வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.இன்னும் ஒருவாரத்திற்குள் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் நாடு முழுவதும் திட்டமிட்டு ஒரு பதற்ற நிலையை இந்துத்துவா சக்திகள் உரு வாக்கி வருகின்றன.

 தீர்ப்பு தங்களுக்கு சாதக மாக வரும் என்றும் பாபர்மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று ராமர் கோவில் கட்டும்பணி தொடங்கும் என்றும் உன்னாவ் தொகுதி பாஜக எம்.பியும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷம் கக்கும் மதவெறிப் பேர்வழியுமான  வகையில் எப்போதும் பேசும் சாக்சி மஹராஜ்  தெரிவித்திருக்கிறார்.

இவர் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களும் பல பாஜக தலைவர்களும் ஆர்எஸ்எஸ் தலைவர்க ளும் தங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதைப்போல் பேசி வருகிறார்கள்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களே நீதிமன்ற தீர்ப்பின் வெற்றியை எப்படி ‘கொண்டாட’ வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தில்லி, ஹரியானா, குஜராத்,  மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாது காப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 தீர்ப்பை பயன்படுத்தி மதவாத சக்திகள் வன்முறை யில் ஈடுபடுவதைத் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை  நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்வது அவசியம்.

தென்மாநிலங்களில் காலூன்ற தீவிரமாக முயன்று வரும் பாஜக பரிவாரம் இந்த தீர்ப்பை பயன்படுத்தி வெறியாட்டம் போட எத்தனிக்கிறது.

இந்த மாநிலங்களில் உள்ள அரசுகளும் பாது காப்பை பலப்படுத்தி அமைதியை பராமரிக்க முன்னுரிமை அளிக்கவேண்டும்.

பதற்றம் நிறைந்த நகரங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
சிறு பான்மை மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் வழிப் பாட்டுத்தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 புல் புல் புயல்
வங்கக் கடலில், புல் புல் புயல் உருவாகியிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், மத்திய வங்கக் கடல் பகுதிக்கு, தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறி வுறுத்தியிருக்கிறது.
சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், அதன் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித் தார்.

அப்போது, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதி யில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்பொழுது புயலாக உரு வாகியுள்ளது என்றார்.

 ‘புல் புல்’ என்று பெயரி டப்பட்ட இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச கரை நோக்கி நகரக் கூடும் என்றும் கூறினார்.

 தமிழ்நாட்டின் உள்  மாவட்டங்களில், வெள்ளிக் கிழமை(நவ.8) முதல் 10ஆம்  தேதி வரை வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்க ளில் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பிருப்ப தாக, வானிலை மைய இயக்  குநர் புவியரசன் கூறினார்.

 சென்னையைப் பொருத்த வரை அடுத்த இரண்டு நாட்  களுக்கு வறண்ட வானி லையே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில்,
முன்னால்

உலக நகர திட்டமிடல் தினம்

மொன்டானா, அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)

வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்(1895)


பிரிட்டன் இந்திய பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது(1965)


தற்சேயலில் நோபல்.
 எதிர்மின்வாய்க் கதிர் (Cathode ray) குறித்த ஆராய்ச்சியின்போது தற்செயலாகத்தான் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார் ஜெர்மானிய இயற்பியலாளரான வில்ஹெம் ராண்ட்ஜன் (Wilhelm Rontgen). இந்தக் கண்டுபிடிப்புக்காக இயற்பியல் துறைக்கான முதல் நோபல் பரிசை 1901-ம் ஆண்டு பெற்றார்.

ராண்ட்ஜன், 1845 மார்ச் 27 அன்று பிறந்தார். இவருடைய தாய் டச்சுக்காரர் என்பதால் வளர்ந்ததெல்லாம் நெதர்லாந்தில்தான். பள்ளியில் சராசரி மாணவராகத்தான் ராண்ட்ஜன் இருந்துள்ளார்.
அவரை நெதர்லாந்திலுள்ள புகழ்பெற்ற கல்வி நிலையமான யுரேச்செட் பல்கலைக்கழகத்தில் சேர்க்க அவருடைய பெற்றோர் முயன்றனர்.
ஆனால், போதிய மதிப்பெண் இல்லாததால் அனுமதி கிடைக்கவில்லை.
அதனால் சுவிட்சர்லாந்தில் ஃபெடரல் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட்டில் இயந்திரவியலில் பட்டயம் பயின்றார். பிறகு ஜூரிச் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார். இந்தக் காலகட்டத்தில்தான் இயற்பியல் துறை மீது ஈடுபாடு அவருக்கு அதிகமானது.

எதிர்மின்வாய்க் கதிர் குழாய் (Cathode ray tube) குறித்த ஆராய்ச்சிகள் அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தன. 1895 நவம்பர் 8-ல் ராண்ட்ஜனும் அந்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். வெற்றிடக் குழாய்களுக்குள் (vaccum tube) மின்சாரம் செலுத்தப்படும்போது எதிர்மின்வாயிலிருந்து மின்சாரம் உமிழப்படும். இந்த ஆராய்ச்சி ஏற்கெனவே கண்டுபிடிக்கப் பட்டிருந்த க்ரூக்ஸ் குழாயைக் (Crookes tube) கொண்டு நடந்தபோது அருகில் கதிர்களைக் கண்டுபிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேரியம் பிளாட்டினோ திரை ஒளிர்ந்துள்ளது.

அப்போது, மின் உமிழ்வு நடக்கும்போது திரை ஒளிர்வது உறுதியானது. மீண்டும் இரவு பகலாக இந்தக் கதிர்களைக் கண்டறிய முயன்றார். எதுவென்று கண்டறிய முடியாததால் அதற்குத் தற்காலிகமாக எக்ஸ் (X) எனப் பெயரிட்டார். ஆனால், அதுவே பெயராகிவிட்டது. சில நாடுகளில் ராண்ட்ஜன் கதிர் என அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

எக்ஸ் கதிரைக் கண்டுபிடித்த பிறகு முதன்முதலாக அவருடைய மனைவி அன்னா பெர்தாவின் உடலை எக்ஸ்ரே எடுத்துக் காண்பித்துள்ளார். அவரது எலும்புக்கூட்டின் எக்ஸ்ரே வரைபடத்தைப் பார்த்த அவரது மனைவி வியந்துபோனார்.
அதே ஆண்டு டிசம்பர் 28-ல் இந்த எக்ஸ் கதிர்கள் குறித்து ‘On A New Kind Of Rays’ ஆய்வைச் சமர்ப்பித்தார் ராண்ட்ஜன்.
மருத்துவத் துறையில் நோயைக் கண்டறியவும் குணப்படுத்தவும் பாதுகாப்புச் சோதனைக்காகவும் இயந்திரவியல், கட்டிடவியல் போன்ற துறைகளில் தரத்தைச் சோதிக்கவும் எக்ஸ் கதிர்கள் பயன்படுகின்றன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

பேஸ்புக்கிற்கு ஏன் புதிய லோகோ?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் புதிய லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. தனது துணை செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவைகளில் இருந்து பெற்றோர் நிறுவனத்தை வேறுபடுத்தி காட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய லோகோ இப்போது முன்பை விட பேஸ்புக்கின் அதிக வாய்ப்புகளை குறிக்கிறது.
பேஸ்புக்கிலிருந்து எந்தெந்த தயாரிப்புகள் வருகின்றன என்பதை தெளிவுபடுத்துவதே புதிய பிராண்டிங்கிற்கான காரணமாகும்.

எனவே புதிய லோகோ வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும். இவை இரண்டும் தலா ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளன.
மேலும் பிரபலத்தின் அடிப்படையில் பேஸ்புக் ஆப் பயன்பாட்டிற்கு போட்டியாக இருக்கும்.
உதாரணமாக, இன்ஸ்டாகிராமில் ‘From Facebook’ லோகோ இன்ஸ்டாகிராம் லோகோவைப் போலவே ஒரு தனித்துவமான இளஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைக் கொண்டுள்ளது.

 வாட்ஸ்அப்பில், ‘From Facebook’ லோகோ பச்சை நிறத்தைக் கொண்டிருக்கும்.
பேஸ்புக்கின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அன்டோனியோ லூசியோ தனது பதிவில், லோகோ குறித்து அறிவித்தார்.
 “இன்று, பேஸ்புக்கிலிருந்து வரும் தயாரிப்புகள் குறித்து தெளிவாக இருக்க எங்கள் நிறுவனத்தின் வர்த்தகத்தை புதுப்பித்து வருகிறோம். புதிய பிராண்டிங் தெளிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் நிறுவனம் மற்றும் ஆப்-க்கு இடையில் காட்சி வேறுபாட்டை உருவாக்க custom typography மற்றும் capitalisation பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பேஸ்புக் தனது தயாரிப்புகள் மற்றும் சந்தைப்படுத்தும் பொருட்களுக்குள் புதிய லோகோவை விரைவில் பயன்படுத்தும் என்று கூறுகிறது.
 பேஸ்புக் ஒரு புதிய நிறுவன வலைத்தளத்தையும் கொண்டிருக்கும் என்று கூறுகிறது.
இது ஏற்கனவே இருக்கும் சமூக தள வெப்சைட்டில் இருந்து வேறுபட்டே இருக்கும். எந்த நிறுவனங்கள் தங்களுக்கு சொந்தமானவை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேஸ்புக் விரும்புகிறது.

மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ், பணியிடங்கள், போர்ட்டல் மற்றும் கலிப்ரா போன்ற அதன் சேவைகள் அனைத்தும் விரைவில் ‘From Facebook’ லோகோவைப் பெறும்.
 நினைவில் கொள்ளுங்கள், பேஸ்புக் அதன் அனைத்து ஆப் பயன்பாடுகளிலும் “From Facebook” லோகோ பயன்பாட்டை ஜூன் 2019ல் தொடங்கியது.

ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த பேட்டியில், லூசியோ கூறுகையில், “ஜெனரேஷன் இசட் மற்றும் மில்லினியல்களில் இருந்து நாங்கள் மேற்கொண்ட அனைத்து ஆராய்ச்சிகளும், அவற்றின் பிராண்டுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் உள்ளோம்.
 எல்லாமே ஒரே நிறுவனத்திலிருந்தே வருகின்றன என்பதைக் காண்பிப்பதில் எங்கள் பயனர்களுடன் நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ”

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இரண்டுமே  பேஸ்புக்கிற்கு  சொந்தமானது என்று 29% பயனர்களுக்கு க்கு மட்டுமே தெரியும் .

அண்மையில் தனியுரிமை முறைகேடுகள் தொடர்பான புகாரில், கடுமையான நம்பகத்தன்மை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பேஸ்புக், நம்பகத்தன்மையை இன்னும் மேம்படுத்தும் என்று அவர் பேட்டியில் கூறினார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் நிறுவனர்கள் இருவரும், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குடன் சிறிது மோசமான உறவுடன் அவர்கள் நிறுவிய நிறுவனங்களை விட்டு வெளியேறினர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் முறிந்தபோது வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் “பேஸ்புக்கை டெலிட்” செய்ய அழைப்பு விடுத்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மூத்திரம் பலநோய் மருந்து.
பால் தங்கம்.
 தங்க நகைக்கடன் தாருங்கள்.
நாட்டுமாட்டுப் பாலில் தங்கம் இருப்பதாக மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருந்த நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பலர், மாடுகளுடன் தங்கக் கடன் கேட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை முற்றுகையிடத் வங்கியுள்ளனர்.
குறிப்பாக, தங்குனி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பசுவுடன் மணப்புரம் நிறுவனத்திற்கு சென்று நகைக் கடன் கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
மேற்குவங்க பாஜக தலைவரான திலீப் கோஷ், கொல்கத்தா அருகே பர்த்வான் நகரில் நடைபெற்ற “கோபா அஷ்டமி காரியக்ரம்” என்ற நிகழ்ச்சியில் நீண்ட உரையாற்றியிருந்தார்.
அப்போது, “இந்தியப் பசுக்களின் பாலில் சிறிது மஞ்சள் நிறம் இருப்பதற்கு காரணம் அதில் தங்கம் இருப்பதே ஆகும்.
  பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த பாலில் ஏராளமான எதிர்ப்புச் சக்தி உள்ளது. ஒரு மனிதன் பாலை மட்டும் உட்கொண்டு உயிர் வாழ முடியும். வேறு எந்த உணவும் தேவைப்படாது” என்று திலீப் கோஷ் குறிப்பிட்டது, நாடு முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர்கள் எப்போதுதான் இதுபோன்ற உளறல்களை நிறுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், தங்குனி பகுதியில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு, பசுமாடுகளுடன் வந்த ஒரு விவசாயி, தன்னுடைய இரு மாடுகளை வைத்துக் கொண்டு தங்கக் கடன் தருமாறு கேட்டு, அதிகாரிகளை மிரட்சியில் தள்ளியிருக்கிறார்.
எந்த அடிப்படையில் மாடுகளின் பேரில் தங்கக் கடன் கேட்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் அந்த விவசாயியிடம் கேட்டதற்கு, “மாட்டுப்பாலில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அதனாலேயே மாடுகளைக் கொண்டுவந்தேன்; என்னிடம் 20 மாடுகள் இருக்கின்றன; வைத்துக் கொண்டு கடன் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

அவரிடம், மாட்டுப்பாலில் தங்கமெல்லாம் இல்லை; அது பாஜக-வினர் கிளப்பி விட்ட புரளி; யெல்லாம் நம்பி வங்கிக்கு வராதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
தங்குனி பகுதி விவசாயியைப் போலவே, கரகச்சா என்ற கிராம ஊராட்சியிலும், ஏராளமானோர், அங்குள்ள ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு, பசுக்களின் பெயரில் தங்கக் கடன் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஊராட்சித் தலைவர் மனோஜ் சிங் தற்போது தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்.
“தங்களின் பசுக்கள் தினமும் 15 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்றும், தங்களுக்கு எவ்வளவு தங்கக் கடன் கிடைக்கும்? என்றும் என்னிடம் கேட்கின்றனர்; இதையெல்லாம் கேட்டால் எனக்கு அவமானமாக உள்ளது” என்று கூறியுள்ள மனோஜ் சிங், “பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு ‘நோபல் பரிசு’தான் கொடுக்க வேண்டும்” என்றும் கிண்டலடித்துள்ளார்.

“ஒரு அரசியல் தலைவர் உணவு, உடை, மக்களின் முன்னேற்றம் குறித்து பேசலாம்.
ஆனால் எந்நேரமும் மதத்தைப் பற்றியேவா பேசிக் கொண்டிருப்பது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள மனோஜ் சிங், “மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்; அவர்கள் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தாண்டு நோபல் பரிசுக்கு பாஜக விலேயே பலத்தப் போட்டி போல ?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?