தேச விரோதி....


காஷ்மீரில் தேடப்படும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் காவல்துறை அதிகாரியான 57 வயதான தேவிந்தர் சிங் ரெய்னாவை விரைவில் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், தீவிரவாதிகளுடன் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இணக்கமாக செயல்படுவதன் பின்னணி குறித்து அறிவது சவால்மிக்க பணியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தற்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ள காஷ்மீரின் மூத்த காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங், பணம் மீது கொண்டிருந்த பேராசை காரணமாக போதை மருந்து கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கார் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும், அதைத்தொடர்ந்து பெரும் பணத்திற்காக தீவிரவாதிகளுக்கு உதவும் வேலையிலும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு & காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தோடு தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூத்த காவல்துறை அதிகாரி தேவிந்தரை பலரும் தொடர்புபடுத்தினர்.
அதாவது, தாக்குதல் நடத்தப்பட்ட காலத்தில்தான் இவர் புல்வாமா பகுதிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தெளிவான ஆதாரங்கள் அப்போது முன்வைக்கப்படவில்லை என்றாலும், தற்போது இதுகுறித்தும் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும் என்று கருதப்படுகிறது.


தீவிரவாதிகளுடன் பிடிபட்ட காஷ்மீரின் மூத்த போலீஸ் அதிகாரி - எழும் கேள்விகள்படத்தின் காப்புரிமைANI

"தேவிந்தர் காஷ்மீருக்கு உள்ளேயும், வெளியேயும் தீவிரவாதிகளுடன் சேர்ந்து பயணிப்பது குறித்து எங்களுக்கு ஏற்கனவே கிடைத்த தகவல்களின்படி" அவரை கண்காணித்து வந்ததாக பிபிசியிடம் பேசிய காஷ்மீர் காவல்துறையை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையின் காசிகுண்ட் பகுதியில் தீவிரவாதிகளுடன் சென்றுகொண்டிருந்த தேவிந்தர் சுற்றிவளைக்கப்பட்டது தொடர்பான பரபரப்பு மிகுந்த நிகழ்வுகளை காவல்துறை வட்டாரங்கள் விவரிக்கின்றன.
ஜம்முவை நோக்கி சென்றுகொண்டிருந்த தேவிந்தருடன், தேடப்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியான சையத் நவீத், அவரது கூட்டாளியான ஆசிப் ரத்தேர் மற்றும் கடத்தல்காரரான இம்ரான் ஆகியோர் கையும் களவுமாக காவல்துறையால் பிடிக்கப்பட்டனர்
மேற்கண்ட சம்பவம் நடந்தேறியபோது, தேவிந்தர் சிங்குக்கும் காஷ்மீரின் மிக மூத்த காவல்துறை அதிகாரியான அதுல் கோயலுக்கும் இடையே நடந்த கைகலப்பு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுடன் தேவிந்தர் சிங் பயணிப்பது குறித்த தகவலை அவரை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரி, தெற்கு காஷ்மீரின் டிஐஜி அதுல் கோயலிடம் தெரிவிக்கப்பட்டபின் அவர் சம்பவ இடத்துக்கே வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தேவிந்தருக்கு முன்னதாகவே சம்பவ இடத்துக்கு தனது அணியினருடன் விரைந்த டிஐஜி, அங்கு தற்காலிக சோதனை சாவடியை அமைத்தார். சில நிமிடங்களில் அந்த இடத்தை அடைந்த தேவிந்தர், தனது காரில் இருந்த தீவிரவாதிகளை காவலர்கள் என்று அறிமுகப்படுத்தினார். எனினும், அதைத்தொடர்ந்து அந்த கார் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஐந்து எறிகுண்டுகளும், ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன."


தீவிரவாதிகளுடன் பிடிபட்ட காஷ்மீரின் மூத்த போலீஸ் அதிகாரி - எழும் கேள்விகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேவிந்தர் சிங்கின் விளக்கத்தை பொருட்படுத்தாத டிஐஜி கோயல், உடனிருந்த காவல்துறையினரிடம் தேவிந்தர் மற்றும் மூன்று தீவிரவாதிகளை கைது செய்யுமாறு கூறினார்.
"இது ஒரு விளையாட்டு, இந்த விளையாட்டை கெடுத்துவிடாதீர்கள்" என்று கூறி தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேவிந்தரை, டிஐஜி கன்னத்தில் அறைந்ததுடன், தான் கொண்டுவந்த மற்றொரு காவல்துறை வாகனத்தில் ஏறுமாறு அவரிடம் கூறினார்" என்று காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
1990களிலிருந்து ஜம்மு & காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஆயுதப் போராளிகளுக்கு எதிரான காவல்துறையின் செயல்பாட்டின் முக்கிய நபராக விளங்கி வந்தவர் 57 வயதான தேவிந்தர் சிங்.
தேவிந்தரின் சொந்த ஊரான இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் ட்ரல் பகுதியே காஷ்மீரில் போராளிகளின் மையமாக விளங்கியது. காஷ்மீரில் நவீனகால போராளி குணத்தை தோற்றுவித்ததில் முக்கிய பங்காற்றியவரும் அதன் தளபதியுமான புர்ஹான் வாணி இருந்து வந்தார்.
சரக்குந்துகளை கடத்துதல், அப்பாவிகளை கைது செய்து அவர்களை பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு விடுவிப்பது, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தேவிந்தர் சிங் மீது பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், ஆனால் "எதிர்பார்க்காத வகையில் அவர் மீதான நடவடிக்கையை திடீரென உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்" என்றும் தேவிந்தர் சிங்குடன் பணியாற்றிய பலர் பிபிசியிடம் கூறினர்.
1990களின் தொடக்கத்தில் சிறைச்சாலையில் அப்சல் குருவை முதல் முறையாக தேவிந்தர் சந்தித்ததாக கூறப்படுகிறது. ஜெய்ஷ்-இ-முஹம்மது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளால் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்சல் குருவுக்கு 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக அப்சல் குரு எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருத்தது.


தீவிரவாதிகளுடன் பிடிபட்ட காஷ்மீரின் மூத்த போலீஸ் அதிகாரி - எழும் கேள்விகள்படத்தின் காப்புரிமைPTI

"தேவிந்தர் சிங் என்னை வலுக்கட்டாயப்படுத்தி, வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாதி ஒருவரை டெல்லிக்கு அழைத்து சென்று, அவருக்கு அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து, கார் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு என்னிடம் கூறினார்," என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேவிந்தரின் கடந்தகால செயல்பாடு குறித்து ஏகப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. ஒருவேளை உண்மையிலேயே கறை படிந்த பின்னணியை தேவிந்தர் கொண்டிருந்தால், அவருக்கு ஏன் தொடர்ந்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன? அவர் மீது விசாரணைகள் நிலுவையில் இருக்கிறது என்றால், மிகவும் முக்கியமான பொறுப்புகள் அவருக்கு ஏன் வழங்கப்பட்டன?
அவர் "பேராசை மற்றும் சமரசத்திற்கு ஆளாகக்கூடியவர்" என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தால், அவர் ஏன் 2003ல் கிழக்கு ஐரோப்பாவிற்கு ஐ.நா. அனுப்பிய இந்திய அமைதி காக்கும் படையில் சேர்க்கப்பட்டார்? இவரது பின்னணி குறித்து தெரிந்திருந்தும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த விமான கடத்தலை தடுக்கும் காவல்துறை பிரிவுக்கு மூத்த அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டது ஏன்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
"தேவிந்தர் விமானத்தை கடத்தி சென்றுவிடுவார் என்ற அச்சத்தின் காரணமாக நாங்கள் ஏற்கனவே விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருந்தோம்," என்று கூறுகிறார் காவல்துறையை சேர்ந்த மற்றொரு அதிகாரி.
அவர் "படையில் ஒரு மோசமான ஆப்பிள்" (இவ்வாறு ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்) என்றால், அவர் ஏன் காவல்துறையின் மிக உயர்ந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்? தேவிந்தர் தான் ஒரு விளையாட்டை விளையாடுவதாக உண்மையிலேயே கூறியிருந்தால், அதன் மற்ற வீரர்கள் யார்? அந்த விளையாட்டின் களம் என்ன? உள்ளிட்ட விவரங்களை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை வெளிக்கொணருமா?
இந்த கேள்விகளுக்கான பதில்களையும், வழக்கில் காணாமல் போன இணைப்புகளையும் தேசிய புலனாய்வு முகமை விரைவில் கண்டுபிடிக்கலாம்.





பாதிக்கும் மேல் பாஜகவுக்கே.
------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?