இதுடன் இதைச் சேர்க்காதீர்கள்


 ஒமிக்ரான்; தகவல்கள்.

கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் லேசானதாகத் தோன்றுகிறது. 

அந்த பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது.எனவே, வேகமாக பரவக்கூடிய தொற்றாக இருந்தாலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஓமிக்ரான் திரிபு ஒரு 'இயற்கையான தடுப்பு மருந்து' என சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், இந்த கோட்பாட்டை மகாராஷ்டிரா கொரோனா தடுப்பு செயல் நடவடிக்கை குழு உறுப்பினரான டாக்டர் ஷஷாங்க் ஜோஷி மறுக்கிறார்.

அவர், "இது ஒரு தவறான கருத்து. ஒமிக்ரான் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது," என்கிறார்.

அது சரி.... ஓமிக்ரானை ஏன் 'இயற்கை தடுப்பு மருந்து' என்று சிலர் அழைக்கிறார்கள்

ஓமிக்ரான் ஏன் 'இயற்கை தடுப்பூசி' என்று அழைக்கப்படுகிறது?

இயற்கையான தடுப்பு மருந்து என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.மிகவும் பலவீனமான நுண்ணுயிரிகள் அல்லது வைரஸ்கள் எந்தவொரு நோய்க்கும் எதிராக எதிர்ப்பு மருந்தாக உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. சில தடுப்பு மருந்துகளில் இறந்த வைரஸும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா ஒமிக்ரான்

பட மூலாதாரம்,

சிலர் ஓமிக்ரானை 'இயற்கை தடுப்பு மருந்து' என்று ஏன் அழைக்கிறார்கள் .

  • ஓமிக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்தாது. இருப்பினும், அதன் பரவும் திறன் மிகவும் தீவிரமானது.
  • அதனால் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்படும், ஆனால் நோய் தீவிரமாக இருக்காது.
  • அது ஒவ்வொருவரின் உடலை சென்றடைந்ததும் ஆன்டிபாடிகள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

"மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்கான மூன்றாவது அலைக்கு ஓமிக்ரான் திரிபு முக்கிய காரணமாகும். ஓமிக்ரான் கிட்டத்தட்ட மரணம் விளைவிக்கும் டெல்டாவுக்கு மாற்றாகி வருகிறது.

கொரோனா ஒமிக்ரான்

பட மூலாதாரம்

அந்த வைரஸால் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்களின் விகிதம் குறைவாக உள்ளது. நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லை அல்லது மிகக் குறைவு," 

.தற்போதைய சூழ்நிலையில் ஓமிக்ரான் அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையில்லை என்றும், வென்டிலேட்டர் தேவையில்லை.டெல்டா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் இந்த அலையில் பிரதிபலிக்கவில்லை. நோயாளிகளுக்கு இந்தியாவில் மருந்து தேவையில்லை. எனவே, கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், எங்களால் அதை இயற்கையான தடுப்பு மருந்து என கூற முடியும்.

கொரோனா ஒமிக்ரான்

பட மூலாதாரம்

மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் திரிபின் அலை வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் புதியது. இது டெல்டாவை விட லேசானது என்பதால், அதைப் புறக்கணிப்பது புத்திசாலித்தனமாக இருக்காது என்பது நிபுணர்கள் சிலரது கருத்து.ஓமிக்ரான் பாதிப்புடைய நோயாளிகள் நீண்ட கால கோவிட் நோயால் பாதிக்கப்படலாம். அதன் விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை. ஓமிக்ரானை ஒரு 'இயற்கை தடுப்பூசி' என்று கூறுவதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை," என்பது சிலரது வாதம்.

இந்தியவில் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் ஓமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மாரடைப்பால் இறந்தார். 

இந்தியாவில் பலருக்கு இணை நோய்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நீரிழிவு, இதய நோய் மற்றும் பிற பிரச்னைகள் அவர்களுக்கு உள்ளன. இப்படிப்பட்ட நோயாளிகள் தவறுதலாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாவது சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.தொற்று நோய்கள் நிபுணர் டாக்டர் கிரிதர் பாபு ட்விட்டர் பக்கத்தில், "இதுபோன்ற தவறான தகவல்களிலிருந்து விலகி இருங்கள். ஓமிக்ரான் லேசானதாக இருந்தாலும் கூட, அது மரணத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அதனால் மக்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலை உள்ளது," என்று கூறியுள்ளார்.அவர் மேலும், "தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது இயற்கையான தொற்றுகள் மரணம் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் சேருவதை தடுக்காது," என குறிப்பிட்டுள்ளார்.

लस

பட மூலாதாரம்,

ஓமிக்ரான் தொற்று காரணமாக மரணம் ஏற்படாது என்று கூறுவது தவறு என்று ஐஜிஐபி இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்."ஒமிக்ரான் ஒவ்வொரு நபருக்கும் குறைவான ஆபத்தை ஏற்படுத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் இது மிகவும் ஆபத்தானது. அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள், அதிகமான நோயாளிகள் இறப்பார்கள். இது இயற்கையால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி அல்ல," என்று அவர் கூறுகிறார்.

ஓமிக்ரானுடன் கோவிட் முடிவுக்கு வருமா?

ஒமிக்ரான் திரிபு டெல்டாவுக்கு மாற்றாக பரவி வருகிறது. இது பாதிப்பு அளவில் லேசானதாக தோன்றுகிறது. எனவே, நோய் பரவினாலும் உயிரிழப்பு ஏற்படாது என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.டாக்டர் கெளதம் பன்சாலி, "டெல்டாவிற்குப் பதிலாக ஓமிக்ரான் வந்தால், அது தொற்றுநோய் கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்புள்ளது," என்று கூறுகிறார்."கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் குறைந்துள்ளது. எனவே, இனி மக்கள் முககவசம் அணிந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்," என நிபுணர்கள் கூறுகின்றனர்.

-----------------------------------+-----------------------------------------

 மீன் சாப்பிட்டீர்களா?

இதையெல்லாம் மறந்தும் தொடாதீர்கள்!

நம் முன்னோர்கள் உணவை சாப்பிடுவதிலும் உடல்நலன் கருதி பல்வேறு விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள்.

 எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி தெரிவித்துள்ளனர்.

நாம் உண்ணும் உணவு நமது உடலில் உள்ள சக்திகளை தூண்டி நமது ஆரோகியத்தை வெளிப்படுத்துவது ஆகும். 

மீன் போன்ற உணவுகளை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட கூடாது. 

இது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..

  • மீன் சார்ந்த எந்த உணவு சாப்பிட்டாலும் முள்ளங்கியை தொடவே கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் உயிரே பறிபோகும் ஆபத்துகள் நிறைந்துள்ளது. இவை ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்கள் இரு உணவுகளை ஒன்றாக சாப்பிடக்கூடாது.

  • அடுத்ததாக பசலை கீரையுடன் மீன் சேர்த்து சாப்பிடக்கூடாது. 
  • பசலை கீரையுடன் எந்த உணவை சாப்பிடாலும் குறிப்பாக மீன் சாப்பிட்டால் வயிற்று போக்கு ஏற்படும். இவை உடலில் உஷ்ணம் உண்டாக்குவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றது.


  • தேன் சப்பிட்ட பிறகும் மீன் சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிடுவதால் சுவாச பிரச்னைகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. 
  • அதுபோல துளசியும் சாப்பிடக்கூடாது. இதனால் நுரையீரல் பிரச்சனை, வாந்தி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?