பொய்யிலே பிறந்து...

 விஞ்ஞானிகள் மருத்துவர்கள் அடங்கிய அவையில் :

“மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை.

 அன்றே மரபணு அறிவியல் இருந்ததே காரணம்.

விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் :

"ராகுல் காந்தியை செல்வச் செழிப்பில் பிறந்தவர். நான் இரயில் நிலைய மேடைகளில் டீ விற்று வளர்ந்தவன். அவர் பகட்டான ஆடைகளை உடுத்தி வளர்ந்தவர். ஆனால் நான் அப்படி இல்லை” 

பிரதமரானதும் ரூ.10 இலட்சம் செலவில் கோட் போட்டுக் கொண்டு ஊர் சுற்றினார்.

மோடி தேநீர் விற்றதாகக் கூறிய ரெயில் நிலையம் அப்போது கட்டப்படவே இல்லை.பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகே கட்டப்பட்டது.

இராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வரப் பட்டது. 

எதிர்ப்பு வலுத்த நிலையில் ஒரே ஓய்வூதியம் கொண்டு வருவதாக மோடி அரசு சொல்லியது. 

"இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. நடைமுறையில் இருக்கிறது"  என அறிவித்தார்.

கருப்பு பணம் மீட்பு

"பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட 1.25 இலட்சம் கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது "

ஆனால் உண்மை?

அந்த பணம் அரசுக்கு வரவேயில்லை.

 அதிகபட்சமாக கண்டு பிடிக்கப்பட்ட பணத்திற்கு உரிய வரியும், அபராதம் மட்டுமே பெறப்பட்டது.


"அகிலேஷ் அரசு ரம்ஜானுக்கு அதிக மின்சாரத்தை வழங்குகிறது. 

 தீபாவளி என்றால் மின்சாரத்தை குறைத்து கொள்கிறது. முஸ்லிம்கள் என்றால் ஒன்று, இந்துக்கள் என்றால் ஒன்றா?"

உபி மின்சார வாரிய அதிகாரப்பூர்வ தகவல் படி தீபாவளிக்கு தான் மின்சாரம் அதிகம் கொடுக்கப்பட்டது.

உபி 2017

"அகிலேஷ் யாதவ் ஆட்சி செய்யும் உ.பி. அரசு தான் நாட்டின் வன்முறை நடக்கும் இடங்களில் முதலாவதாக இருக்கிறது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களைப் பாருங்கள்"

போன வாரம், பிஜேபி ஆட்சியில் கேமரா முன்னால் வைத்து லைவ் ஆக அத்திக் அகமது போட்டுத் தள்ளப்பட்டார்.

சுதந்திர தின உரை 2017

"இதுவரை அரசால் கண்டுபிடிக்கப்பட்ட வரி ஏய்ப்பு செய்த 1,62,618 நிறுவனங்களின் உரிமைகள் இரத்து செய்திருக்கு"

 ஆனால் உண்மை நிலவரம்?

2014 - 17 வெறும் 1155 நிறுவனங்கள் மட்டும் தான் வரி ஏய்ப்பு செய்வதை கண்டுபிடித்திருக்கு.

"திருமணத்திற்குப் பிறகு இனி பெண்கள் தங்கள் பெயரை பாஸ்போர்ட்டுகளில் மாற்றத் தேவையில்லை. பெண்களை அடிமை முறையி லிருந்து மீட்பதற்கு ஒரு சட்டம் வந்துவிட்டது "

உண்மையில்

 பாஸ்போர்ட்டில் கணவர் பெயர் சேர்க்கும் முறை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே நடைமுறையில் இல்லை.

ஆயிரக்கணக்கான பொய்களில் மிகவும் 

பயங்கரமான பொய்

கல்யாணம் ஆனதை மறைத்து

35 வருடம் ஒரு பெண்ணை ஏமாற்றி விவகாரத்து வழங்காமல் சேர்ந்து வாழாமல் இருந்தது.

------------------------------------------------------------

தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்துடா..

செயற்கை நுண்ணறிவுAI

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?