இன்று14.05.2013

 வங்கதேசம் - மியான்மர் இடையே இன்று நண்பகலில் கரையை கடக்கிறது அதிதீவிர புயலாக மாறிய மோக்கா. தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு கன்னட மக்கள் தக்கபாடம் புகட்டிவிட்டதாக காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு மக்கள் முடிவு கட்டிவிட்டதாகவும், பல மாநிலங்கள் சட்ட விரோதமாக பாஜக ஆட்சி அமைத்ததாகவும் நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிபெறும் மாநிலங்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், இமாச்சல பிரதேசத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமைகிறது.

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி சிக்மங்களளூர் தொகுதியில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் தம்மையா 8 ஆயிரம் ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

ஹிஜாப் தடையை அமல்படுத்திய கல்வி அமைச்சர் நாகேஷ் படுதோல்வியடைந்தார்.

-----------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?