கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு.

 என்எல்சி விவகாரத்தில் கடலூரில் பதற்றம் நிலவுகிறது. நேற்று கடலூர் மாவட்டத்தில் மட்டும் 16 பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. கடலூர் நகர் பகுதியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழிலே கையொப்பமிட வேண்டும். ஆவணங்கள், வருகைப்பதிவு மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும். டி.பி.ஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயரையும், கையொப்பத்தையும் தமிழிலேயே இட வேண்டும் என 2021 அரசாணையைக் குறிப்பிட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கன்னியாகுமரி: வில்லுக்குறியிலிருந்து தோட்டியோடு வரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல், குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் முருகனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அவசர வாகனங்களுக்கு வழிவிட மறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு; லாரியை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல்(91) மாரடைப்பால்உயிரிழந்தார். படிக்காதவன், சர்வர் சுந்தரம், விக்ரம் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர். மேலும் 5 படங்களை இயக்கியும், 3 படங்களை தயாரித்தும் உள்ளார்.

ஜார்ஜ் பெர்னாட் ஷா.

உலகப் புகழ்பெற்ற அயர்லாந்து நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னாட் ஷா. அயர்லாந்தின் டப்ளின் நகரில் 1856 ஜூலை 26 -ம் தேதி பிறந்தார்.


 வீட்டு வாடகைக்கு பணம் இல்லாமல், கடற்கரையில் ஓட்டைப் படகில் வசித்தார். 10 வயதில் பள்ளியில் சேர்ந்து 4 ஆண்டுகள் படித்தார். 

ஆனால் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்ததால் வாரம் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார்.

இங்கிலாந்து சென்று எஸ்டேட் அலுவலகத்தில் எழுத்தராக வேலை செய்தார். அப்போது நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை திரும்பி வந்தாலும், தொடர்ந்து எழுதினார். 

இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன.
அவரது எழுத்து போலவே நிஜ வாழ்வின் பேச்சிலும் நகைச்சுவை, நையாண்டி அதிகம் கலந்திருக்கும்.

 1925-ல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு, 'பிக்மலியன்' என்ற படத்தின் திரைக்கதைக்காக 1938-ல்ஆஸ்கர் விருது ஆகிய விருதுகளை பெற்றவர் பெர்னாட் ஷா.

----------------------------------------------

பாக்ஸ்கான்

சாதனை செய்த ஸ்டாலின்.

இந்தியாவில் மின்னணு சாதனங்கள் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் தமிழ்நாடுதான் முன்னிலை வகித்து வருகிறது. 

ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. 

மின்னணு சாதன ஏற்றுமதியில் உபி,மகராஷ்டிரா,கர்நாடகா மாநிலங்களின் சாதனைகளை வென்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது தமிழ்நாடு.

1.86 பில்லியன் டாலராக இருந்த ஏற்றுமதியை இரண்டு ஆண்டுகளில் 5.87 பில்லியன் டாலருக்கு உயர்த்தி அபார சாதனை செய்துள்ளது 

தமிழ்நாடு. இந்த நிலையில்தான் சமீபத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டர்நெட் நிறுவனம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுடன் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கர்நாடகாவில் முதலீடு செய்வதற்காக அங்கே ஆலோசனைகளை மேற்கொண்ட ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடைசியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது.

இந்த ஆலோசனைகளின் முடிவில் தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பல்வேறு மின்னனு சாதனங்களை உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளதாம்.

அதன்படி 200 மில்லியன் டாலரை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாம் பாக்ஸ்கான். 

தமிழ்நாட்டில் மின்னணு சாதனங்கள் தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த முதலீட்டை செய்ய உள்ளதாம். மின்னணு பொருட்களை உருவாக்கும் பிளாண்ட்களை இங்கே அமைக்க உள்ளதாம் பாக்ஸ்கான்.

 சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. 

அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.

சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.

சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. 

சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த ஐபோன் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. 

சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் கிளை, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் வகையை உற்பத்தி செய்தது. 

ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. 80% உற்பத்தி சென்னையில் நடந்தது. அதனால் இதை முழுமையாக மேட் இன் இந்தியா என்று சொல்ல முடியாது.

 இந்த நிலையில்தான் மொத்தமாக முழுக்க முழுக்க சென்னையிலேயே ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகளும் நடந்து வருகின்றன. 

இது போக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 மற்றும் 12 மாடலை மொத்தமாக சென்னையில் உற்பத்தி செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படுவதால் இந்த போனில் இனி மேட் இன் இந்தியா என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். 

அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்தான் தற்போது தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படும் பொருள் ஆகும். 

ஹூண்டாய் உள்ளிட்ட ஆட்டோமொபைல் ஏற்றுமதியை முந்தி ஐபோன் ஏற்றுமதியில் சென்னை கலக்கி உள்ளது.

 கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் இருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபோன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?