எச்சரிக்கையாக இருங்கள்!

 உலக பல்கலைகழக தர வரிசை பட்டியலில் 91 இந்திய பல்கலைகழகங்களுக்கு இடம்.

"அதிமுக-பாஜ பிரிவு உட்கட்சி தகராறுதான் மோடி, அமித்ஷா பேசினால் மீண்டும் கூட்டணி வந்துவிடும்."-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் .

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுபெற்ற 10,205 பேருக்கு பணி ஆணை.முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்"2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை "எனவும் அறிவிப்பு .

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது எனக்கூறி தமிழ்நாட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் அண்ணாமலை நண்பர் தேஜஸ்வி சூர்யா.

அக்.27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

நெஞ்சுவலி என வந்த பெண்ணின் கை அகற்றம்.. ராஜூவ் காந்தி மருத்துவமனை மீது கணவர் குற்றச்சாட்டு.

“வாட்ஸ் அப்பில் உலா வரும் செய்திகள்; பகுத்தறிவோடு சிந்தியுங்கள்” - உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள்.

---------------------------------------------

எச்சரிக்கையாக இருங்கள்!

கோவிட் முடிவல்ல தொடக்கம்' என தொடர்ச்சியாக பல ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருவதைக் காண முடிகிறது. அந்த வரிசையில் `டிசீஸ் எக்ஸ்’ (Disease X) என்ற பெருந்தொற்று மனித உயிர்களைக் கொல்லக் காத்திருக்கிறது என எச்சரித்து இருக்கிறார், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டேம் கேட் பிங்காம்.

இது குறித்து டேம் கேட் பிங்காம் எச்சரிக்கையில், ``கோவிட் தொற்று அவ்வளவு ஆபத்தானதல்ல. 

ஆனால், அடுத்த தொற்றுநோய் சுமார் 50 மில்லியன் உயிர்களைப் பறிக்கக்கூடும். இது கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தானது. 

இந்தப் புதிய தொற்றுநோய்க்கு உலக சுகாதார அமைப்பு டிசீஸ் எக்ஸ் (Disease X) என்று பெயரிட்டுள்ளது. 

இந்த டிசீஸ் எக்ஸை தட்டம்மை போன்ற தொற்றுநோயாகவும், அதன் இறப்பு விகிதம் எபோலாவின் 67 சதவிகிதத்துடன் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 உலகில் எங்கோ இந்த நோய் பிரதிபலிக்கிறது. விரைவிலோ அல்லது சிறிது காலத்திற்குப் பின்னரோ யாராவது இதனால் நோய்வாய்ப்படத் தொடங்குவார்கள்.

ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்களை உள்ளடக்கிய 25 வைரஸ் குடும்பங்களை விஞ்ஞானிகள் இதுவரை கண்டறிந்துள்ளனர்.

 இன்னும் மில்லியன் கணக்கான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கே உலகம் ஆட்டம் கண்ட நிலையில், கொரோனாவைவிட கொடிய தொற்றா என மக்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் நேஹா கூறுகையில், ``கோவிட் தொற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய வேரியன்ட்கள் தொடர்ச்சியான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் அதே வேளையில், சுகாதார வல்லுநர்கள் இப்போது `டிசீஸ் எக்ஸ்' என்ற புதிய தொற்றுநோய்க்குத் தயாராகி வருகின்றனர். 

எதிர்காலத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் - எச்சரிக்கும் சீனாவின் பேட்வுமன்!

எதிர்காலத்தில் இன்னொரு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் - எச்சரிக்கும் சீனாவின் பேட்வுமன்!

இந்தப் புதிய வைரஸ் ஸ்பானிஷ் ஃப்ளுவை (Spanish Flu) போலவே பேரழிவை உண்டாக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, டிசீஸ் எக்ஸ் என்பது நோய்க்கிருமியைக் குறிக்கிறது; 

இது தெரியாத பெரிய அளவிலான தீவிரமான தொற்றுநோயை ஏற்படுத்தும். மேலும் மனிதர்களிடையே பெரிய அளவிலான நோய்களுக்கு வழிவகுக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

--------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?