கலவரத் தீ
ஆன்மீக விழாவில் கலவரத் தீ ! ஆர்எஸ்எஸ் சதித் திட்டத்தின் பின்னணி என்ன “இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. புது மையான பல மனிதர்களைக் கண்டிருக்கி றது... கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக…” 1952-இல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தில் கலைஞர் எழுதிய மேற்கண்ட வசனங்களை இப்போது கேட்கும் போது, திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய தீர்ப்பு நினைவுக்கு வருகிறது. இந்திக்கு இராமன்; தமிழுக்கு முருகன் சுதந்திர இந்தியாவில் ஆர்எஸ்எஸ், இராமரை முன்னிறுத்தி கலவர விதையை விதைத்து இஸ்லாமிய சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தை இடித்து ராமர் கோவிலைக் கட்டியது. அதன் விளைவாக, மத ரீதியாக ஒரு பகுதி மக்களை அணிதிரட்டி, அரசியல் செல்வாக்கை உருவாக்கி, மத்தியிலும் பல மாநிலங்க ளிலும் ஆட்சியையும் அதிகாரத்தையும் நிறுவியி ருக்கிறது. தென் மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இராமரை முன்வைத்து ஆர்எஸ்எஸ் உருவாக்க நினைக்கும் கலவர அரசியல் வெற்றி பெறவி...