லட்சத்( தீவி) ல் ஒருவன்
தென் மாநிலமான கேரளாவில் இருந்து லட்சத்தீவு 524 கி.மீ தூரத்தில் அரபிக் கடல் பகுதியில் உள்ளது. இந்த் தீவுக்கு செல்ல கடல் மற்றும் விமான போக்குவரத்தையே சார்ந்திருக்க வேண்டும். இங்கு பெரும்பாலானவர்கள் மலையாளம், ஆங்கிலம், ஜெசேரி, திவேஹி ஆகிய மொழிகளை பேசுகிறார்கள். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 64 ஆயிரத்து 473 பேர் வாழ்கிறார்கள். இந்த தீவின் மொத்த பரப்பரளவு 32.63 கி.மீ சதுர மீட்டர். மக்கள்தொகையில் பெரும்பகுதியினர்(75%) முஸ்லிம்கள். இவர்கள் உணவுக்காக மாட்டிறைச்சியை பயன்படுத்தும் வேளையில், மத்திய அரசின் பிரதிநிதியாக பிரஃபுல் கோடா வந்த பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் ஆர்.எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சி சார்பானவையாக உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் சீர்திருத்தம் என்ற பெயரில் அவர் அறிவித்துள்ள திட்டங்கள் உள்ளூர் மக்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், கடந்த இரண்டு தினங்களாக அங்கு மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றிய தகவல் இணையத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பகிரப்பட்டது. இதன் பிறகு #SaveLakshadweep என்ற பெயரில் லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என்கிற ஹேஷ்