தமிழ்நாடு சட்டப் பேரவை

 

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் குரங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க எல்லை பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல். 

சாவரின் கோல்ட் பாண்ட்களை வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்களில் இன்று முதல் 16ஆம் தேதி வரை வாங்கலாம்.

இலங்கை, மொரீசியஸ் நாடுகளில் இன்று முதல் யுபிஐ பணப்பரிவர்தனை திட்டம் அமலாகிறது.

கோவை கார் வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை கைது செய்தது என்ஐஏ.

பீகாரில் நிதிஷ் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு 

பஞ்சாப்,கேரளா,கர்நாடகா,ஹரியானாவில் இருந்து 5000க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு.

காஷ்மீரில் ஓவர் லோடு பயணிகளை ஏற்றிச் சென்ற கார் பள்ளத்தில் விழுந்து 3 பேர் பரிதாப பலி.

தாய்லாந்திற்கு கடத்த முயன்ற ரூ.2.33 கோடி மதிப்பிலான வைரங்கள் பறிமுதல்! 


தமிழ்நாடு சட்டப் பேரவை கூடுகிறது.

மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர் - ஆளும் கட்சி மோதல்கள் தொடர்கதையாகி வருகின்றன. சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசுவது, சட்ட மசோதாக்களை நிறுத்திவைப்பது, தனியாக ஆய்வுக்குச் செல்வது, மாநில அரசின் நியமனங்களை நிறுத்திவைப்பது என முடிந்த வழிகளில் எல்லாம் ஆளுநர்கள் ஆளும் அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.


தமிழகத்தில் 2021 செப்டம்பர் 18-ம் தேதி ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகளால் கடுகடுப்பில் இருக்கும் திமுக அவரை மாற்ற வேண்டுமென தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.


இதை மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்திப் பேசினார்.


அத்துடன், ஆளுநரை மாற்றக் கோரி திமுக எம்பி-க்கள் குடியரசு தலைவர் மாளிகைக்கே மனுவுடன் போனார்கள்.


இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், இன்று தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்.


இந்த ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட், வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்வார்.


பொது பட்ஜெட்டை தொடர்ந்து 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எம்ஆர்கே பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்வார்.

கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.


இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.


ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது.


ஆனால், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.


இந்த சூழலில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது உறுதியானது.


கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சட்டசபை சபாநாயகர் அப்பாவு, சட்டசபை பிப்ரவரி 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடும்.

அன்றைய தினம்ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்'' என்று அறிவித்தார். தமிழகஅரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19ஆம் தேதி தாக்கல் செய்வார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.


இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.


ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் சட்டசபை புதுப்பொலிவுடன் தயாராகி உள்ளது. தமிழக அரசின் சாதனைத் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?