நேர்மையின் விலை
சிறுமையாதல்? ====================================================== இந்தியாவில் மட்டும்தான் நேர்மையாக செயல் பட்டால் அந்த அதிகாரியை தூக்கிப் பந்தாடல்,அப்படியும் அடங்காவிட்டால் ஒரு காசு பெறாத மேசையடி வேலை கொடுத்தல் அப்படியும் அடாங்கா விட்டால் அவரைப்பற்றி அவதூறு பரப்பல்,முடிவில் அவரின் உயிரைப்பறித்தல் என்று ஆட்சியாளர்கள் பரிசுகளை அள்ளித்தருகிறார்கள். இதற்கு சில நாக்குத்தள்ளிய அவதார அதிகாரிகளும் வாலை ஆட்டிக்கொண்டு உடந்தையாக இருக்கிறார்கள். இதோ நேர்மையாகப் போராடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி யின் மரணத்துக்காக கர்நாடக மாநிலமே பற்றி எரிகிறது. எந்த அமைப்பும் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. ஆனால் அவர் முன்பு பணிபுரிந்த கோலார் மாவட்டமே ஸ்தம்பித்துவிட்டது. டி.கே.ரவி அங்கு பணிபுரிந்தது சில மாதங்கள்தான். ஆனால் அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் ஹீரோ. காரணம், அவரது நேர்மை. தமிழ் நாட்டில் எத்தனையோ மாவட்ட மக்களுக்கு தங்கள் மாவட்ட கலெக்டரின் பெயர் தெ...