110கோடிகள் வழியில்லை.1000 கோடிகள் ?
அடங்காத ஆசை மக்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்காக வாழ்பவர்களுக்கும் இருக்கிறது.அதை அடக்க முடிவதில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று வெளியெ குமாரசாமியின் தப்புக்கனக்கில் வெளியெ வந்தாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உயிர் பெற்றுள்ளது. அதில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை . ஆனால் இந்த ஆட்சிகாலத்துக்காண குறீயிட்டை ஜெயலலிதா உடன் பிறவா சகோதரி ஆரம்பித்து விட்டாரா.அதில் ஒரு சிறு துளி வெளியே கசிந்து விட்டது. அந்த துளியின் மதிப்பே 1000 கோடிகள் என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மை. 110 கோடிகள் அபராதம் கட்ட பணம் இல்லாதவர்கள் 1000 கோடிகளில் சொத்து வாங்கி குவித்தது எப்படி? இத்தனை நெருக்கடியான காலத்திலும், தனது கொள்ளையை ஜெயலலிதா நிறுத்தவேயில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. ஜெயலலிதா தனது உடன்பிறவா சகோதரி, சசிகலாவின் பெயரில், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக விலைக்கு வாங்கி விட்டார் . தங்கள் சினிமா தொழிலை விரிவடைய வைக்கும் வகையில், தற்போது மேலும் சில தியேட்டர்களை வாங்கும் முயற்சியில் மன்னார்குடி கும்பல் இறங்கியிருக்கி