இடுகைகள்

செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்குமா?

படம்
மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகளின் குழு 1492 ஆண்களின் விந்தணுக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பத்து வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை விரிவாக அலசி ஆராய்ந்தது. இந்த ஆய்வின் முடிவில், செல்லிடபேசிகளில் இருந்து உருவாகும் சூடும், மின்காந்த அலைகளும் கதிரியக்கமும் சேர்ந்து மனிதர்களின் விதைப்பைகளின் விந்தணு உற்பத்தியையும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் செயற்படும் தன்மையையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய மருத்துவர் பியானோ மாத்யூஸ் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்த ஆய்வின் முடிவுகள் முழுமையானவை அல்ல என்று மற்ற விந்தணு ஆய்வாளர்கள் இவற்றை புறந்தள்ளியிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட ஆண்களின் ம...

மின்வெ ட்டு இல் லை

படம்
ஜூன் ஒன்று முதல் தமிழ் நாட்டில் மின்தடை கிடையாது என்றுதான் ஜெயலலிதா சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதாக நினைக்கிறேன் .ஆனால் அதுவரை இருந்த மின்சாரம் அவர் அவ்வாறு ஏதோ சொல்லிய அடுத்த நாள் முதல் காணாமல் பொய் விட்டது. தேர்தலை முன்னிட்டு வழங்கிய மி ன்சாரம் ஜுன் ஒன்று முதல் காணாமல் போனது . தினசரி மின்வெட்டு முன்பைவிட அதிகம் இங்கு. இரவை நினைத்தாலே அழுகைதான் வருகிறது.இடையிடையே மணிக்கணக்கில் மின்சாரம் வெட்டுபட தொடர் தூக்கம் வெட்டு பட்டு தொலைந்து துக்கம் மட்டுமே. ஜெயலலிதா ஜூன் அறிவிப்புக்கு காரணமே தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் உற்பத்தியை துவக்கி 2000 மெகாவாட் மின்சாரத்தை தரும் என்பதுதான்.அந்த மின் நிலையம் கூட கருணாநிதி திட்டமிட்டு ஆட்சிகாலத்தில் உருவானதுதான்.இப்போது பலந்தருகிறது. [சென்னையை கலக்க வரும் மெட்ரோ ரெயில் கூட கருணாநிதி திட்டம்தான்.அப்போது இந்த அம்மையார் அதை வேண்டாம் என்று போராடினார்.இன்று அதற்கு நிதி மோடியிடம் கேட்கிறார்.] ஆனால் அம்மையாரோ தான் இரவுபகலாக திட்டமீட்டு மின்சாரத்தை வரவைத்ததாக அறிக்கையி கோடிகாட்டி இருந்தார். இது பக்கத்து வீட்டுக...

டா வின்சியின் சுய ஓவியம்

படம்
டா வின்சி வரைந்த இயேசுவின் கடைசி விருந்து ஓவிய மீட்கப்படவுள்ள டா வின்சியின் சுய ஓவியம் 1998ம் ஆண்டு முதல் டுரின் நகரில் இருக்கும் ராயல் லைப்ரேரியில் இருக்கும் வெப்பமும், ஈரப்பதமும் கொண்ட நிலவறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியர் லியானார்டோ டா வின்சியின் ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் டா வின்சி தனது உருவத்தைத் தானே வரைந்த ஓவியம் என்று கருதப்படுகிறது. காகிதத்தில் சிகப்பு சுண்ணாம்பால் வரையப்பட்ட இந்த ஓவியம் தற்போது மங்கி வருகிறது. டா வின்சி தனது சுய உருவத்தை 1510 முதல் 1515க்குள் வரைந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகளின் அழிவுக்கும் தேய்வுக்கும் ஆளான இந்த ஓவியம் வரையப்பட்ட காகிதம் பழுப்படைந்து விட்டது. இதைப் பதனப்படுத்த விரும்பும் நிபுணர்கள் ஓவியத்துக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடத் தொடங்கியுள்ளனர். பின்னர் அவருடைய அற்புதமான ஓவியத்தை மீட்பதற்கு தேவையான நுட்பத்தைத் தீர்மானிப்பார்கள் என்று என்பிசி நியூஸ் கூறுகிறது.போலந்து, இத்தாலி நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காகிதங்களில் பழுப்பை ஏற்படுத்தும் குரோமோபோர்ஸின் அடர்த்தியை அழிவ...

இணைய முதல்வர்கள்

படம்
நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர்.  இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர்.  அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம். 1. மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen):  Mosaic என்னும் பிரவுசரை உருவாக்கியவர். முதல் நிலையில், இணையத்தினை மக்களிடம் பரவலாகக் கொண்டு சென்றதில், இந்த பிரவுசருக்கு இடம் உண்டு. பின்னால், நெட்ஸ்கேப் நேவிகேட்டர் என்ற இணைய பிரவுசரை உருவாக்குவதில் இவர் அதிகம் துணை புரிந்தார். 1990 ஆம் ஆண்டுவாக்கில், இணையப் பயன்பாடு தொடர்ந்து உயர்ந்த போது, இந்த பிரவுசரின் இடமும் முதல் இடத்தில் இருந்தது.  2. விண்ட் செர்ப் (Vint Cerf):   இணையத்தை உருவாக்கிய தந்தை என, Bob Kahnஎன்பவரோடு சேர்த்து அழைக்கப்படுபவர் விண்ட் செர்ப். TCP/IP தொழில் நுட்பம் வளர்ச்சி அடைய இவருடைய பணி அதிகம் உதவியது. இவர் அமைத்த MCI mail சிஸ்டம் தான் இன்றைய மின் அஞ்சல்களுக்கு முன்னோடியாய் அமைந்தது. இணைய பெயர்களை வரையறை செய்திடும் ICANN எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corpora...

கலைஞரின்றி அரசியல் இல்லை

படம்
இன்று பிற்ந்த நாள் காண்பவர் கலைஞர் மு. கருணாநிதி,  தமிழக -இந்திய அரசியல் இவர் பங்களிப்பு இல்லாமல் இதுவரை நகர்ந்ததில்லை. நல்லதோ,கெட்டதோ இவர் பெயரை உச்சரிக்காமல் தமிழக அரசியல் இருந்ததில்லை. சொல்லப்போனால் தமிழக அரசியலில் இவரைப்போல் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தலைவர் யாருமே இருந்ததில்லை. தமிழ் நாட்டில் வளர்ச்சித்திட்டங்கள் எல்லாமும் காமராஜருக்கு பின்னர் இவரால்தான் நடந்துள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள பெரிய அரசு கட்டிடங்கள்,சாலைகள்,மேம்பாலங்கள் கல்லூரிகள் கருணாநிதியால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்கு பின்னால் ஆட்சிக்கு வந்த மாற்றுக்கட்சினரால் ஒன்று கூட உருவாக்கப்பட்டதல்ல .வேண்டுமானால் இவரால் உருவாக்கப்பட்ட திட்டங்கள் சிதைக்கப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லலாம். தலைமைச்செயலகம்.,அண்ணா நூற்றாண்டு நூலகம்,செம்மொழி பூங்கா,சமச்சீர் கல்வி திட்டம் என்று அடுக்கலாம். இனி இவரின் வாழ்க்கை விபரம். கருணாநிதியின்  இயற்பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924)  .  நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்த...

370 வது பிரிவு என்றால்...?

படம்
இன்று இந்திய அளவில் காஷ்மீரின் 370 வது சிறப்பு பிரிவு பற்றி நாடு தழுவிய அளவில் வாத,பிரதிவாதங்கள் நடக்கின்றன. ஆனால் அதை கேட்கும் நமக்கு அந்த 370 வது பிரிவு என்றால் என்ன?அது கூறுவது ஏன்ன?அதனால் காஷ்மீருக்கு என்ன சிறப்பு கொடுக்கப்படுகிறது? அந்த 370 வது பிரிவு கொடுக்கப்பட என்ன காரணம்? என்று பல கேள்விகள் எழுகின்றன. அதை பற்றி தோழர்.அருணன் தீக்கதிரில் எழுதிய  கட்டுரை உங்கள் பார்வைக்கு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 பற்றி ஒரு விவாதம் நடத்த வேண்டுமென்று தேர்தல் பிரச்சாரத்தின் போதே திரு. நரேந்திர மோடி கூறினார்.  இப்பொழுது அவர் பிரதமர் ஆனதும் அவரது அலு வலக இணையமைச்சர் ஒருவர் அந்த விஷயத்தை கிளப்பியுள்ளார்.  எந்த ஒன்றைப் பற்றியும் விவாதம் நடத்தலாம் .  ஆனால் அது திறந்த மனதுடன் நடத்தப்பட்டால்தான் ஏதேனும் பயனிருக் கும். இந்தப் பிரிவினைப் பொறுத்த வரை பாஜகவின் மனோநிலை மூடுண்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த மாநிலத்திற்கு எவ்வித தனிச் சலுகையும் காட்டப்படக் கூடாது. அந்தப் பிரிவையே அரசியல...