இடுகைகள்

சார்லி சாப்ளின்

படம்
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி பிறந்தார்.  ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. சாப்ளின், லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லஸ்- ஹன்னா ஹாரியட் ஹில் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.  1896-ம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர்.  இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப்பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பனிரெண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் ...

என் பெயர் அலி.

படம்
 எனக்கு வயது 12. அன்றைய தினம் பள்ளியில் எங்கள் வகுப்பறையில் முதல் பாடவேளையின்போது பாடங்களை படித்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென வெடிச்சப்தத்தை கேட்டோம்.  அந்த சப்தம் மிகக் கடுமையாக இருந்தது.  பயங்கரமாக இருந்தது.  அது என்ன சப்தம் என ஊகித்திடுவதற்கான நேரம் கூட எங்களுக்கு இருக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த சப்தத்தை எங்களது வகுப்பறைக்கு மிக அருகே கேட்க முடிந்தது.  எங்கள் எல்லோரையும் மேசைக்கு அடியில் ஒளிந்து கொள்ளுமாறு வகுப்பாசிரியர் கூறினார்.“மேசைகளுக்கடியில் ஒளிந்து கொள்ளுங்கள். வேகமாக ஒளிந்து கொள்ளுங்கள்” என ஆசிரியர் அவசரத்தோடும் திகிலோடும் சொன்னார்.  நாங்கள் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்தோம். சிலர் குழப்பமடைந்தும், திகிலடைந்தும் நின்று கொண்டிருந்தோம். “என்ன நடக்கிறது” என ஆசிரியரைப் பார்த்து கேட்கத் துவங்கினோம். எங்களுக்கு அடுத்திருந்த வகுப்பறையிலிருந்து வந்த மாணவர்களின் அலறல் சப்தம்-மரணஓலம்- எங்களை அதிர்ச்சியடையச் செய்தது. நான் மிகவும் பயந்து போனேன்.  வாயடைத்துப் போய் சப்தம் எதுவும் எழுப்ப இயலாது மௌனமாக நின்ற...

ஆரோக்கியத்தை பாதிக்கும் மின் படிப்பான்கள்.

படம்
இ-ரீடர்ஸ் (E-Readers) என்று அழைக்கப்படும் மின்படிகளை உறங்கச் செல்வதற்கு முன்னர் படுக்கையில் படிக்கும் பழக்கத்தால் ஒருவரின் தூக்கம் கெடுவதாகவும், அதனால் அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். புத்தகம் என்றால் அது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தக வடிவில் மட்டுமே இருந்த நிலைமை மாறி இன்று மின்படிகளிலும் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.  ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் எல்லா உலக மொழிகளிலும் இந்த மின்படிகள் கிடைக்கின்றன.  எனவே புத்தகங்களுக்கு மாற்றாக இந்த மின்படிகள் உலக அளவில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. ஒருவர் படுத்து உறங்கச்செல்வதற்கு முன்னர் புத்தகங்கள் படிப்பது பலருக்கும் விருப்பமான பழக்கம்.  சமீபகாலமாக புத்தகங்களுக்கு பதில் மின்னொளி உமிழும் மின்படிகளில் இருக்கும் கதை, கட்டுரை அல்லது கவிதையைப் படிக்கும் பழக்கம் உலகெங்கும் அதிகரித்து வருகிறது. இப்படி அதிகரித்துவரும் மின்படிகளின் பயன்பாடு மனிதர்களின் ஆரோக்கியத்தின் மீது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகள் தற்போது அதிகரித்...

கே.பாலசந்தர்.

படம்
பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார்.  அவருக்கு வயது 84 ஆகும்.  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று[23-12-2014] இரவு 7 மணிக்கு காலமானார்.   நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த பாலசந்தர் 80 படங்களை இயக்கியுள்ளார்.   * தனது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம். * சக இயக்குநர்கள் மற்றும் தனக்கு பின் வந்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், சிறந்த படம் கொடுப்பவர்களை தயங்காமல் பாராட்டி விடுவார்.  * சிவாஜியை வைத்து பாலச்சந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது.  * பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ண திரைப்படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ல் வெளியானது. இவர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளை திரைப்...