இடுகைகள்

விண்டோஸ் 7 செயல்திறன் மேம்பட...

படம்
விண்டோஸ் 7 இயங்குதள டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்கள் செயல்திறன் மேம்பட கீழ்க்கண்ட 10 குறிப்புகளை பின்பற்றவேண்டும் என்று கணினி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். டெஸ்க்டாப்பில் சுமை முதலில் கணினியின் டெஸ்க்டாப் பகுதியில் அதிகமான ஷார்ட்கட் ஐகான்கள், ஃபோல்டர்கள், ஃபைல்களைப் பதிவதைத் தவிர்க்கவும்.  டெஸ்க்டாப் என்பது கணினியில் உள் நுழையும் வரவேற்பு அறை மட்டுமே. அதில் தேவைக்குரிய ஐகான்களை மட்டும் வைக்கவும். கோப்புகளை பதிவதைத் தவிர்க்கவும். அதனை டிரைவில் மட்டும் பதிந்து வைக்கவும். கோப்புகளின் எண்ணிக்கையும், கொள்ளளவும் அதிகரிக்க அதிகரிக்க கணினியின் செயல்பாடு மந்தமாகும்.  எனவே, டெஸ்க்டாப்பில் குறைவான ஐகான்கள் இருப்பது அழகு மட்டுமல்ல, கணினி வேகமாக செயல்படவும் உதவும். ஹார்ட்டிஸ்க் செயல்பாடு 3 அல்லது 4 டிரைவ்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வன்தட்டின் ஒவ்வொரு டிரைவிலும் குறைந்தது 10 சதவீதமாவது காலியிடம் இருக்கவேண்டும். குறிப்பாக விண்டோஸ் இயங்குதளம் பதிந்துள்ள C டிரைவில் நிச்சயம் இந்த அளவு கட்டாயம் தேவை.  C: டிரைவை மாதம் ஒருமுறை எர்ரர் செக் செய்யவே...

வைகோ என்ற மோசமான அரசியல் தரகர்....,

படம்
காவிரி பிரசனையில் கர்நாடகாவுக்கு,பாரதிய ஜனதா மோடி அரசும் செய்யும் அரசியலை விட ,நம்பிக்கை துரோகம் தமிழக அரசியல் கடசிகளால்தான் செய்கின்றன. காவிரி பிரசனையில் இந்தியா முழுக்க எதிரிகளாக அரசியல் செய்யும் காங்கிரசு,பா.ஜ.க  உட்பட அனைத்து கர்நாடக அரசியல் கடசிகளும் ஒரே குரலில் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் விடக்  கூடாது என்று குரல் விட்டு ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் செய்து வருகையில் இங்கு தண்ணீர் கேட்கும் குரல்கள் மட்டும் தனித்தனியாக வெறும் முனங்களாக வருகிறது. ஆளும் அதிமுக இப்பிரசனை யை கிட்டத்தட்ட கண்டு கொள்ளவில்லை அதற்கு எப்போதும் போல் பல் மக்கள் பிரசனைகள் . ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்போலோவில் சேர்ந்து ஒருவரையும் பாரா நிலையிலோ காவிரி பிரசனை யம் ,கருகும் வயல்களும்,எரியும் விவசாயிகள் வாழ்க்கையும் அதற்கு ஒரு பொருட்டே இல்லாமல் போய் விட்டது. ஜெயலலிதா செயல்படும் நிலையில் இருந்தே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சொல்லிக் கொண்டேயிருந்தது திமுக.ஆனால் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை. இது அவரின் வழக்கமான நிர்வாகத் திறமைதான். பல்வேறு அரசியல் கடசிகளை வைத்து விவசாயிகள் சங்கம் பல போராட்டங்களை ...

தீபாவளி - தமிழர் விழா அல்ல!

படம்
தற்பொது  தமிழ்நாட்டில் வட்டிக்கு வாங்கியாவது  விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி.  நக ர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந் தொழில்களின் பொருளாதாரம் சார்ந்த தாகவும் இத்திருவிழா கொண்டாடப்படு கிறது.  தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் தேசியத் திருவிழா போலக் காட்டப்படுகிறது.  ஆயினும் தைப் பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்கு களோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை.  தைப் பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா.  இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில்கூடத் தைப் பொங்கல் கொண்டாடப் பெறுகிறது.  ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழா வாக அமைகிறது. தமிழர் திருவிழா - இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? -  பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள், இவற்றின்...

ஜியோ வாங்கியவர்களின் " ஐயோ " குரல்,

படம்
தகவல் தொழில்நுட்ப உலகில் மாபெரும் புரட்சி என்ற அறிவிப்போடு, களத்திற்கு வந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க்தான் இருப்பதிலேயே மிகக் குறைந்த இணைய வேகம் கொண்டது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ அமைப்பின், ஸ்பீட் வெப்சைட் மூலம் இது தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, புதிதாக ஜியோ சிம்மை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், நாடு முழுவதும் 3 மாதங்களுக்கு இலவசமாக பேசிக் கொள்ளலாம்; மாணவர்களின் இணையப் பயன்பாட்டிற்கு 25 சதவிகிதம் மட்டுமே கட்டணம், 1 ஜிபி-க்கான 4ஜி டேட்டா வெறும் 50 ரூபாய் மட்டுமே; ரோமிங் கட்டணம் முற்றிலும் ரத்து என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டன. வெறும் 50 ரூபாய்க்கு 4ஜி டேட்டா வழங்கப்படுவது உலகிலேயே எங்கும் இல்லாதது என்று பெருமையடிக்கப்பட்டது. ஆனால், ரிலையன்ஸ் ஜியோ-வின் சராசரி இணையதள வேகம் 6.2 Mbps என்ற அளவில் மட்டுமே இருப்பதும், இது தேசிய சராசரியை ஒப்பிடும்போது இணையதள வேகத்தில் 5-ஆவது இடத்தில்தான் இருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.  தில்லி வட்டத்தில் ஜியோ...

எந்த எண்ணெயும் நல்ல எண்ணெய் இல்லை!

படம்
ஆரோக்கிய அச்சுறுத்தல் ஏற்கனவே நாம் பல குழப்பத்தில் இருக்கிறோம்…  இதில் ஒவ்வொருவரும் டாக்டராக மாறி ஆலோசனை என்ற பெயரில் நம் குழப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அதிலும் சமையல் எண்ணெய் பற்றி வெளிவரும் விளம்பரங்கள் ஒவ்வொன்றும் அநியாய குழப்பம்.  ‘சந்தையில் விற்பனையாகும் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் உங்கள் இதயத்தில் மெழுகு படியும்.  எங்கள் எண்ணெயில் அது கிடையாது’ என்று சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. எல்லா எண்ணெயிலுமே பிரச்னை என்றால் எந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துவது  என்று இதய சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் கேட்டோம்…‘‘எண்ணெய் கலப்படம் என்பது சாதாரணமாகிவிட்டது. காஸ்மெட்டிக் ஆயில் என்கிற தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் செய்கிற கலப்படத்தால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவதில்லை.  சருமத்தில் அலர்ஜி, எரிச்சல், காயம் போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள்தான் ஏற்படும். அரிதாக சில பெரிய பிரச்னைகள் உண்டாகலாம். ஆனால், சமையல் எண்ணெயில் நடக்கும் Adulteration என்கிற கலப்படம்தான் நம் உடனடி கவனத்துக்குரியது. சில விளம்பரங்களில் சொல்லப்படுவது...

பட்டினியின் பிடியில் ....,,

படம்
பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் பாகிஸ்தானோடு போர்த்தொடுக்கஇந்தியா தயாராக இருப்பதாக சவால்விட்டார். போர்ப் பதற்றத்திற்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டனர்.  மறுபுறம் வறுமையின் சுழலிலிருந்து மீள முடியாத நிலையில் இந்திய மக்கள் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.இந்நிலையில், உலக பட்டினி குறியீடு - 2016 ஆய்வினை சர்வதேச உணவுக் கொள்கைஆய்வு நிறுவனம் (IFPRI) வெளியிட்டுள்ளது.  இந்த அறிக்கை பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளிப்படுத்துகிறது.  குறிப்பாக, பாகிஸ்தான் நிலையை விட மிகவும் கீழான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதும் தெரியவருகிறது. 5 வயதிற்கு உட்பட்ட இந்திய குழந்தைகளின் உயரத்திற்கும், எடைக்கும் சம்பந்தமேஇல்லாத அளவிற்கு 15 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது.  பாகிஸ்தானோடு ஒப்பிடும்போது 10 சதவீத குழந்தைகளே வளர்ச்சி குன்றியுள்ள குழந்தைகளாக உள்ளனர். வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் இந்தியாவின் மிக மோசமான நிலையை வெளிப்படுத்தியுள்ளன.  பெனின், தோகோ, நைஜீரியா, உகாண்டா மற்றும் காம்பியா ஆகிய சிறிய நாடுகளை விடவும் கீழானநிலையில...