விண்டோஸ் 7 செயல்திறன் மேம்பட...



விண்டோஸ் 7 இயங்குதள டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்கள் செயல்திறன் மேம்பட கீழ்க்கண்ட 10 குறிப்புகளை பின்பற்றவேண்டும் என்று கணினி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

டெஸ்க்டாப்பில் சுமை
முதலில் கணினியின் டெஸ்க்டாப் பகுதியில் அதிகமான ஷார்ட்கட் ஐகான்கள், ஃபோல்டர்கள், ஃபைல்களைப் பதிவதைத் தவிர்க்கவும். 
டெஸ்க்டாப் என்பது கணினியில் உள் நுழையும் வரவேற்பு அறை மட்டுமே. அதில் தேவைக்குரிய ஐகான்களை மட்டும் வைக்கவும். கோப்புகளை பதிவதைத் தவிர்க்கவும். அதனை டிரைவில் மட்டும் பதிந்து வைக்கவும். கோப்புகளின் எண்ணிக்கையும், கொள்ளளவும் அதிகரிக்க அதிகரிக்க கணினியின் செயல்பாடு மந்தமாகும். 
எனவே, டெஸ்க்டாப்பில் குறைவான ஐகான்கள் இருப்பது அழகு மட்டுமல்ல, கணினி வேகமாக செயல்படவும் உதவும்.

ஹார்ட்டிஸ்க் செயல்பாடு
3 அல்லது 4 டிரைவ்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வன்தட்டின் ஒவ்வொரு டிரைவிலும் குறைந்தது 10 சதவீதமாவது காலியிடம் இருக்கவேண்டும். குறிப்பாக விண்டோஸ் இயங்குதளம் பதிந்துள்ள C டிரைவில் நிச்சயம் இந்த அளவு கட்டாயம் தேவை. 
C: டிரைவை மாதம் ஒருமுறை எர்ரர் செக் செய்யவேண்டும். இதற்கு C: டிரைவை தேர்வு செய்து ரைட் கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்யவும். தோன்றும் திரையில் Tools என்பதைக் கிளிக் செய்து திறக்கவும். 
அதில் Error Checkingஎனும் பகுதியில் Checkஎன்ற பட்டனைக் கிளிக் செய்யவும். திரையில் Start, Schedule disk check எனும் பட்டனைத் தேர்வு செய்து கிளிக் செய்து ஸ்கேன் செய்யவும். இச்செயல்பாடு முடிந்தபின் கணினியை ரீஸ்டார்ட் செய்து பயன்படுத்தவும்.

தேவையற்ற கோப்புகள் நீக்கம்
கணினியை பயன்படுத்தும்போது தற்காலிகமாக சில கோப்புகள் உருவாக்கப்படுகின்றன. இவை பணி முடிந்ததும் தேவைப்படாத குப்பைகளாக கணினியில் தங்கியிருக்கும். 
எனவே இவற்றையும் மாதம் ஒருமுறை நீக்க வேண்டும். இந்த கோப்புகளில் மென்பொருளால் உருவாக்கப்படும் கோப்புகள், இணையப் பயன்பாட்டால் உருவாக்கப்படும் கோப்புகள் என்ற பல வகைகள் உள்ளன. 
இவை அனைத்தையும் நீக்க சி கிளீனர் போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். அல்லது விண்டோசில் நாமே செய்வதற்கு Start -> All Programs ->Accessories ->Systems Tools -> DiskCleanup சென்று இயக்கினால் தோன்றும் திரையில், எந்த டிரைவில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கம் செய்திடலாம் என்று கேட்கப்படும். 
அதில் விருப்பமானதைத் தேர்வுசெய்து Ok பட்டனை அழுத்தினால் தற்காலிக கோப்புகள் அழிந்துவிடும்.

மென்பொருள்கள்
அதிகமான அளவு மென்பொருள்கள் பதிந்து வைப்பதும், ஒரே நேரத்தில் பல மென்பொருள்களைத் திறந்து வைப்பதும் கணினியின் வேகத்தை குறைக்கும். 
எனவே, தேவையற்ற அல்லது பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை கணினியிலிருந்து நீக்குவது அவசியமாகும்.

கோப்புகளை அடுக்குதல்
கணினியில் கோப்புகளை பதிவது நீக்குவது ஆகிய செயல்பாடுகளை தொடர்ந்து செய்வதால் வன்தட்டின் நினைவகத்தில் கோப்புகள் சிதறலாக பல இடங்களில் பரவிக் கிடக்கும். 
இவற்றை ஒருங்கிணைத்து வரிசைப்படுத்த Disk Defragment என்ற செயல்பாட்டை மேற்கொள்ளவேண்டும். இதற்கும் தனியாக மென்பொருள்கள் இருக்கின்றன. 
விண்டோசில் உள்ள கருவியை செயல்படுத்த Start ->All Program ->Accessories -> System Tools -> Disk Defragment சென்று இயக்கவும். .

தற்காலிக நினைவகம்
கணினியின் வேகத்தில் முக்கியப் பங்காற்றுவது ரேம் எனப்படும் தற்காலிக நினைவகமாகும். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளில் பணியாற்றும்போது இதன் தேவை பன்மடங்காக இருக்கும். 
வீடியோ, ஆடியோ, கிராபிக் வகை மென்பொருள்களைப் பயன்படுத்துபவர்களுக்கு பிராசசரின் வேகத்திற்கு ஏற்ற அளவு ரேம் நினைவகம் அவசியமானதாகும்.

ஸ்டார்ட்அப் புரோகிராம்கள்
நாம் தற்போது திறக்காத மென்பொருள்கள் கணினியில் மறைமுகமாக இயங்கிக் கொண்டிருக்கலாம். இதனை டாஸ்க் மேனேஜர் செயல்பாட்டை இயக்கிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். கணினி தொடங்கும்போது சில புரோகிராம்கள் இயங்கத் தொடங்கிவிடும். 

அவற்றில் தேவையற்றவற்றை நிறுத்தி வைக்கலாம். இதனை செயல்படுத்த Start விண்டோவின் Search Boxல் msconfig என்று டைப் செய்து எண்டர் கொடுத்தால் சிஸ்டம் கான்ஃபிகிரேசன் விண்டோ தோன்றும். 
அதில் ஸ்டார்ட் அப் என்ற டேப்-ல் கூகுள் அப்டேட், அடோப் பிடிஎப் அப்டேட் என்பது போன்ற தேவையில்லாத பல ப்ரோகிராம்கள் இயங்கி கொண்டிருக்கும். இதில் எவை நமக்குத் தேவையில்லை என்பதை கண்டறிந்து அவற்றிற்கு நேரே உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட்டு OK கொடுக்கவும்.
பவர் செட்டிங்ஸ்
கணினியின் செயல்திறனைக் கூட்டும் மற்றொரு அம்சம் அதன் பவர் செட்டிங்ஸ். இதை செயல்படுத்த ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்சில் Power Options என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். 
தோன்றும் விண்டோவில் High Performance என்பதைத் தேர்வு செய்யவும்.

செயல்திறன் சோதனை
கணினியின் செயல்திறனை சோதிக்க ஸ்டார்ட் மெனு சர்ச் பாக்சில் troubleshooting என்று தட்டச்சு செய்து வரும் விண்டோவில் System and Security என்பதில் Check for performance issues என்பதைக் கிளிக் செய்தால் வரும் விண்டோவில் நெக்ஸ்ட் கொடுத்தால் கணினியின் செயல்திறனை மேம்படுத்தும் தானியங்கி சோதனை செயல்படுத்தப்படும்.

டெஸ்க்டாப் செயலிகள்
கணினியின் வேகம் குறைய மற்றொரு காரணம், கணினியில் செயல்பாட்டில் இருக்கும் கேட்கட்கள். நகரும் காட்சிகள், அறிவிப்புகள் ஆகியவற்றை வழங்கும் இவ‍ற்றை நிறுத்தி வைப்பதும் நல்ல பலன் தரும். 
எனவே, தற்போது செயல்பாட்டில் இருக்கும் கேட்கட்கள் பற்றி அறிந்து கொள்ள gadgets என்று ஸ்டார் மெனு சர்ச் பாக்சில் டைப் செய்தால் வரும் பட்டியலில் View list of running gadgets என்பதைத் தேர்வு செய்யவும். 
அதில் தற்போது உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் செயல்பாட்டில் இருக்கும் கேட்கட்கள் பற்றிய விபரம் காட்டப்படும். அதில் தேவையற்றவற்றை நிறுத்திவிடவும்.
எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்



=====================================================================================
ன்று,
அக்டோபர் -26.

  • ஆஸ்திரியா தேசிய தினம்(1955)
  • அமெரிக்கா நாட்டு தேசப்பற்று சட்டத்தை நிறைவேற்றியது(2001)
  • நார்வே, ஸ்வீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது(1905)
  • ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது(1955)

======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?