சீன பொருட்கள் தவிர்ப்போமா?
சீன பொருட்கள் இப்போது இந்தியாவில் அமோக விற்பனையில் உள்ளது.மின்னணுப் பொருட்கள் இந்திய தயாரிப்பு பொருட்களின் விலையில் ஐந்தில் ஒரு பங்கு விலைதான் சீன தயாரிப்பு பொருட்களின் விலை.
மக்கள் சீன தயாரிப்பு மோகம் பிடிப்பதில் வேறு என்ன வேண்டும்?
சீன பொருட்களை இந்தியர்கள் வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்று பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் முகநூல் ,டுவிட்டரில் ஆவேசமாக இடுகை போடுகிறார்கள்.தேசபக்தி வேண்டும் என்கிறார்கள்.
சீனா ஊட்டப்பட்ட பல நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யவும்,அந்நிய மூலதனங்களை நாடு,நாடாக சென்று பிரதமர் மோடி இந்தியா பக்கம் முதலீடு செய்ய கோரி வருகையில் இந்த தேச பக்தி எங்கே போயிருந்தது என்ற கேள்வி வருகிறது.
உலகமயமாக்கல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க நடக்கையில் சீனா உட்பட எந்த நாட்டு பொருட்களையாவது தவிர்ப்பதோ அல்லது வெறுப்பதோ நடைமுறைக்கு வருமா என்ற கேள்வி எழுகிறது.
உலகமயமாக்கலுக்கு பின்னர் இந்தியா உடைபட்ட அனைத்து நாடுகளும் தனது அண்டை நாடுகளுடன் பொருளாதார ரீதியாக சார்ந்து இருப்பது அதிகரித்து வருகிறது. கட்டாயமுமாகி விட்டது.உலகமே சிறு கிராமம் போலாகி விட்டது.
தற்போது இந்தியா சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களைகுறிப்பாக மின்னணு பொருட்களை அதிகமாக நம்பியுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டால், அது இந்தியாவையே அதிகமாக பாதிக்கும்.
இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக கூட்டாளி சீனா. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகம் ரூ.5 லட்சம் கோடிகளை தாண்டிவிட்டது.
இதற்கு அடுத்தபடியாக உள்ள அமெரிக்காவுடனான ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடியை எட்டும் அளவிலேயே உள்ளது.

ஆனால் இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்ததைவிட, ஏழு மடங்கு இறக்குமதி செய்துவருகிறது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிக அளவு உள்ளது.
காரணம் இந்திய பொருட்களை விட சீன பொருட்கள் விலை கொள்ளை மலிவு.இந்தியா முழுக்க பரவலாக பரபரப்பான விற்பனை .
சீனாவில் இருந்து நுகர்வோர் மின்னணு பொருட்கள் (கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ்) என்று கூறக்கூடிய செல் போன் உட்பட பல்வேறு வகையான போன்கள், லேப்டாப், அணு சக்திக்கு தேவையான இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்கள், தொழில் துறைக்கு தேவையான இயந்திரங்கள், கச்சா பொருட்கள் என பல்வேறு வகை பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் 2011 முதல் 2016 வரையிலான காலத்தில் பொருளாதார மந்தநிலை நிலவிய காலத்தில் மற்ற நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் 20 சதவிகிதம் குறைந்தது.
அதே நேரத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது 11.5 சதவிகிதம் அதிகரித்தது. இதில் இருந்து சீனாவின் இறக்குமதியை தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாது என்பது வெட்ட வெளிச்சம் .

அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் மையமாக சீனா விளங்குகின்றது.
இந்த பொருட்களை இந்தியாவைச் சேர்ந்த மொத்த வர்த்தகர்கள், சில்லரை வணிகர்கள் அதிக அளவு இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர். இதுவே இவர்களின் வாழ்க்கை ஆதாரமாக உள்ளது.

முன்பு இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா இருந்தது.
இந்த இடத்தை சீனா பிடித்த பிறகு இரு நாடுகளும் வர்த்தக, பொருளாதார ரீதியாக ஒன்றை மற்றொன்று சார்ந்து உள்ளன.
சென்ற வருடம் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு சென்று இருந்த போது, 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வர்த்தக உடன்படிக்கையை சீனா செய்து கொண்டது.
சீனாவுடனான ஆரோக்கியமான வர்த்தக உறவு, இந்தியாவுக்கு மிக அவசியமானதாக உள்ளது.

போஸ்டன் கன்சல்டன்சி குரூப் ஆய்வின் படி, இந்தியாவின் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் கச்சா பொருட்களையே 90 சதவிகிதம் நம்பி உள்ளன.
போஸ்டன் கன்சல்டன்சி குரூப் பார்ட்னர் பார்ட் ஜான்சீன், “ சீனா உடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டால், இந்தியாவில் அத்தியாவசிய மருந்து தட்டுப்பாடு ஏற்படும்.
அத்துடன் இது போன்ற மருந்துகளை சீனா மட்டுமே அதிக அளவு தயாரித்து வருகிறது. இவற்றின் விலையை அதிகரிக்கவும் செய்யலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க, இந்திய உற்பத்தி துறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும், சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க வேண்டும்.
பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு ஒரே நாட்டை நம்பி இருக்க கூடாது என்று நிபுணர்கள் கூறி வருவதும் கவனிக்க தக்கது.

அதே நேரத்தில் சீன பொருட்களைதவிர்ப்போம் என்று கூறுவதற்கு முன், சீன பொருட்கள் எந்த அளவு அத்தியாவசியமாக இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள், மற்ற நாட்டு பொருட்களை விட, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலை மலிவாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.எனவே வாங்கிவருகிறார்கள்.
முன்பு கைபேசி யில் இருந்து பேட்டரி பொம்மைகள் ஆரம்பித்து பட்டாசுகள் வரை.
பலவண்ணங்களில் வானில் கோலம் போடும் பட்டாசு இந்திய தயாரிப்பு 200 ரூபாய் என்று இருக்கையில் அதை வீட்டா அதிக வண்ணம் காட்டும் சீன பட்டாசு வெறும் 50 ரூபாய்.
மக்கள் எதை வாங்குவார்கள்.காசை கரியாக்கினாலும் அளந்துதானே கரியாக்குவார்கள் ?

2014ல் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த எஸ்.கே.மொகன்தி என்பவர் செய்த ஆய்வில், 2012ல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றில் ஒரு பங்கு பொருட்களின் விலை மிக மலிவானது என்று தெரியவந்துள்ளது.
இது போல் சீனாவில் இருந்து விலை மலிவான பொருட்களின் இறக்குமதி 2007ல் 6.3 பில்லியன் டாலராக இருந்தது, அடுத்த வருடம் (2008) 8.4 பில்லியன் டாலராக அதிகரித்தது. 2012ல் 9.7 பில்லியன் டாலராக அதிகரித்தது.
ஜவுளி, ஆடைகள், வாகன உதிரி பாகங்கள், இரசாயனம் உட்பட பல்வேறு பொருட்கள், மற்ற எந்த நாட்டையும் விட. சீன பொருட்களின் விலை மலிவாக உள்ளது. இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் நம்பமான கூட்டாளியாக சீனா வளர்ந்து வருகிறது. சீனாவுடன் பொருளாதார உறவில், இந்தியா நீண்டகால அடிப்படையில் சாகதமாக இருக்கும்படியாக அணுகுமுறை வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் இந்திய தேசபக்தி அது,இது என்று ஏதோ ஒரு காரணத்தால் அல்லது மக்களின் கவனத்தை கவருவதற்காக, சீன பொருட்களைவாங்காதீர்கள் என்பது கூறுவது, நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதே உண்மை.

இவர்களுக்கு உண்மையிலேயே சுதேசி உணர்வு, உள்நாட்டு கைவினைஞர்கள், சிறு, குறுந் தொழில்கள் மீது பாசம் இருக்குமானால், அவர்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள தடைகற்களை நீக்குவதற்கு முன் வர வேண்டும்.
அவர்கள் வளர்ச்சிக்கும், மற்ற நாடுகளுடன் போட்டியிடும் திறனை வளர்த்துக் கொள்வதற்கு உதவிகளையும், அரசின் கொள்கைகளில் தேவையான மாற்றங்களையும் செய்ய வேண்டும்.
சீனாவில் தயாரித்து கப்பல்களில் கன்டெய்னர்களில் ஏற்றி வரும் செலவு,வியாபாரி வைக்கும் லாபம் இவைகளையும் மீறி சீன பொருட்கள் இந்திய பொருட்களை விட விலை கால்வாசியாக இருக்கும் காரணம் என்ன?இந்திய தயாரிப்புகள் விலை அதிகமாக இருக்க என்ன காரணம் என்று இந்திய தயாரிப்பாளர்களும் அரசும் ஆராய வேண்டும் .சீன தயாரிப்புகளுடன் போட்டி போடும் அளவு நம்மை தயாராக்கி கொள்ள வேண்டும்.
அதன் மூலம் இந்தியாவில் சீன பொருட்கள் இறக்குமதி குறையும்,அத்துடன் வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும்.சீனாவுடன் இந்தியா உலகளவில் போட்டியாளராகலாம்.
அதை விட்டு விட்டு போகாத ஊருக்கு வழி கேட்பது தேவையற்றது.
இந்தியா தன்னை சீனாவுக்கு போட்டியாளராக்காமல் சீன பொருட்களை வாங்காதீர்கள்,தவிருங்கள் என்று சொல்லிக்கொண்டு மானிய அரிசி விலையையும் மத்திய அரசு கூட்டிக்கொண்டிருந்தால்
இந்தியாவில் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி,முட்டை இறக்குமதியும் அதிகரித்து விடும்.கேரளாவில் பல இடங்களில் சீன தயாரிப்பு பிளாஸ்டிக் அரசி,முட்டை விற்பனை உள்ளதாம்.நல்ல அரிசியுடன் கலந்து தற்போது விற்பனையாகிறது.
இதில் மற்றோரு வியப்பான செய்தி.சீன பொருட்களுக்கும் அரிசி,முட்டையும் சேர்த்து போலி பொருட்கள் இந்தியாவில் டெல்லி,மும்பை போன்ற இடங்களில் தயாரிக்கப்பட்டு பரவலாக விற்பனையாகிறதாம்.
இப்படி பட்ட திறமைசாலிகளை இந்தியாவில் வைத்துக்கொண்டிருக்கும் நம்மால் சீனாவுடன் போட்டி போட முடியாதா என்ன?
வார முத்துக்கள்.
ஜப்பான் டோக்கியோவில் உள்ள சன்சைன் அகுவோரியம் இரவு நேரங்களில் தனது அகுவோரியத்தை வீணாக மூடிவைப்பதை விட நாலு காசு பார்க்க திட்டமிட்டது.
விளைவு Noroi no Mizugush(The Haunted Water Comb)என்ற பெயரில் இரவு திகில் மாளிகையை தனது அகுவோரியத்தில் மீன்கள் நீந்தும் தண்ணீரிலேயே பேய்கள்,கோர உருவங்கள் அலைய,நீந்த விட்டு உருவாக்கி விட்டது.
இதனால் இரவும் ஜப்பானியர்கள் காசை கொடுத்து வந்து பயத்தை அனுபவித்து செல்கிறார்கள்.
இப்போது சன்சைனுக்கு போட்டியாக இருப்பதுக்கு மேற்பட்ட பேய் அகுவோரியங்கள் உண்டாகிவிட்டனவாம்.
========================================================================
இந்த ஆண்டு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் புதிதாக சேர்க்கப்பட்ட சொற்களில் "ஐயோ "(Aiyoh) என்ற தமிழ் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.
வியப்பு ,பயம் மற்றும் வலி போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படும் உணர்சசியிலான தமிழிலேயே கூட உள் ளர்த்தமில்லா சொல் 'ஐயோ" ஆங்கில அகராதியில் இடம் பெற்றிருப்பது ஐயோடா என்றுதான் சொல்லவேண்டும்.
========================================================================
குரங்கில் இருந்து மனிதன் வந்திருந்தாலும் இதுவரை வால் இருந்ததில்லை.
ஆனால் நாக் பூரை சேர்ந்த 18 வயது இளைஞனுக்குத்தான் இப்படி வால் முளைத்துள்ளது.தற்போது 20 சென்டி மீட்டர் அளவில் இருக்கும் வால் பிறக்கும் போது உடன் பிறந்ததல்ல.14 வயதில் முளைக்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகளில் இந்த அளவுக்கு வளர்ந்த்து விட்டது.
இதற்கு முன்னர் சிலருக்கு அரிதாக வால் இருந்தாலும் இப்படி வளர்ந்து கொண்டே போனதில்லை.
சிறிதாக முளைக்க ஆரம்பித்த வாலை ஆடைகளுக்குள் மறைத்து வைத்தாலும் நாளாக,நாளாக அது பெரிதாக ஆரம்பித்ததால் மருத்துவமனையில் சேர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டனர்.
========================================================================
நீங்கள் கோபமாக இருக்கும் போதோ அல்லது மன வருத்தத்தோடு இருக்கும் போது வழக்கமாக செய்யும் கடுமையான உடற்பயிற்சி செய்தால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பின் அளவு அதிகரிக்கும் என்று சர்வதேச சுகாதார ஆய்வு கூறியுள்ளது.52 நாடுகளில் 12000 மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மாரடைப்பு பற்றி தெரிய வந்ததாக அமெரிக்கன் ஹார்ட் அச்சொசியேஷன் ஜர்னலில் செய்தி வெளியாகியுள்ளது.
======================================================================================
இன்று,அக்டோபர்-16.
- சர்வதேச உணவு தினம்
- பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன், ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்(1799)
- பிரிட்டன் இந்தியாவில் வங்காளப் பிரிப்பு இடம்பெற்றது(1905)
- வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1923)
- ====================================================================================================