வேண்டுதல் செய்ய வேண்டும்?
உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மற்ற எல்லோரையும் விட ஆளும்கட்சி அதிமுக வேட்பாளர்கள்தான் கடும் விரக்தியடைந்துள்ளனர்.
மறுதேர்தலின்போது தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஒருபுறமும், இதுவரை செய்த, 50 லட்சம் ரூபாய்க்கும் மேலான செலவுகள் மறுபுறமும், அவர்களை கவலையடைய செய்துள்ளன.
தேர்தல், வரும், 19ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.
இதற்கு சென்னை மாநகராட்சியில் உள்ள, 200 வார்டுகளில் போட்டியிட, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என, 3,155 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் இந்த வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது.
இதில், பல்வேறு குளறுபடிகளால், சில முக்கிய கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் உட்பட, 25
சதவீதம் வேட்புமனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருந்த நேரத்தில், தி.மு.க., தொடர்ந்த ஒரு வழக்கில், உள்ளாட்சி தேர்தலை தடை செய்தும், முறையான அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவால், வேட்புமனுக்கள் பரிசீலனை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட வில்லை. அதிமுகவுக்கு சாதகமாக இக்குளறுபடியான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு சொதப்பிய மாநில தேர்தல் ஆணையம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், மேல்முறையீடு செய்துள்ளது.
தேர்தல் நடக்குமா, தள்ளி போகுமா என்ற குழப்பம் ஒருபுறம் இருக்க நீதிமன்ற உத்தரவால், கடந்த இரண்டு வாரங்களாக தேர்தல் களத்தில் பணத்தை தண்ணீராக செலவழித்து வந்த ஆளுங்கட்சி வேட்பாளர்கள் கடும் விரக்திஅடைந்துள்ளனர்.
ஆளும்கட்சி வேட்பாளர்கள் அனை வரும் இந்த தீர்ப்பால், விரக்தியின் விளிம் பிற்கே சென்றுவிட்டனர். ஆளும்கட்சியைபொறுத்த வரையில், கவுன்சிலர் சீட் பெறுவதற்கே, வேட்பாளர்கள் மாவட்ட செயலர் களிடம், பல லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள் ளனர்.
போட்டி வேட்பாளர்கள், எதிர் தரப்பினரின் அதிருப்தியை சமாளிக்க, அவர்களுக் கும் கணிசமான தொகையை கொடுத்து விட்டு மீண்டும் வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.இது தொகை லட்சங்களில்தான் உள்ளது.
வேட்பாளர் பட்டியலை கட்சி அறிவித்த நாள் முதல், அனைவரையும் சந்தித்து ஆதரவு
திரட்டியது, பிரசாரம் செய்தது முதல், வேட்புமனு தாக்கல் செய்யபடை திரட்டியது வரை, தினமும் பல லட்சம் ரூபாயை, அவர்கள் செலவழித்துள் ளனர்.
எப்படியாவது வென்று கவுன்சிலர் ஆகிவிட்டால் முதலீடு செய்த பணத்தை பலமடங்காக பின்னர் சம்பாதித்துவிடலாம் என்ற நினைப்பில்தான் இப்படி பணத்தை செலவிட்டுள்ளனர்.
சில வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கும் வேலையைக்கூட துவக்கி விட்டாராம்.
மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட பரிசு பொருட்களுக்கு மொத்தமாக ஆர்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கு லட்சங்களில் முன்பணம் கொடுத்துள்ளனர்.அதையாவது தங்கமாக வாங்கிவைத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஆயிரக்கணக்கில் சால்வை, வேட்டி, சேலை உள்ளிட்டவை மொத்தமாக கொள்முதல் செய்து வைத்தவற்றை வேட்பாளர்கள்தான் பிளாட்பாரத்தில் போட்டு விற்க வேண்டும்.?
இதற்காகவும் பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள் ளது.
மீண்டும் சில வாரங்கள், மாதங்கள் கழித்து, தேர்தலுக்கு முறையான அறிவிப்பு வெளியானா லும், இடைப்பட்ட நாட்களில், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், மீண்டும் தாங்களே அந்த வார்டின் வேட்பாளர்களாகஅறிவிக்கப்படுவோமோ இல்லையோ என்ற சந்தேகமும் வேட்பாளர்களிடம் எழுந்துள்ளது.
இதனால் வேட்பாளர்கள் மாவட்ட செயலர்களை சந்தித்து, 'எண்ணண்ணே இப்படி ஆகிடுச்சு' என்று இப்போதே தாங்கள் கொடுத்த பணத்திற்கு அடி போட்டு வைக்கின்றனர். இதற்கு, 'தேர்தல் ரத்தானாலும், மறு தேர்தல் வரும்போது, நீங்கள் தான் வேட்பாளர்கள்' என, அவர்களும் ஆறுதல் கூறி வருவதாககூறப்படுகிறது.ஆனால் அதிமுக கடசி தலைவி ஜெயலலிதா நல்ல முறையில் திரும்பி வந்து முன்போலவே செயல் பட ஆரம்பித்தால் இப்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட முன்னாள் கவுன்சிலர்களுக்கு சீட்டு கிடைப்பது பெருத்த சந்தேகம்.
எனவே உடனடியாக 'மேல்முறையீடு செய்து, எப்படி யும் தேர்தல் நடத்த முயற்சிக்க வேண்டும்' என, ஆளும்கட்சி வேட்பாளர்கள் விரும்புகின் றனர்.
ஒருவேளை கடந்த, 1991ம் ஆண்டு நடந்ததை போல, உள்ளாட்சி தேர்தல் வேண்டாம் என்று அறிவித்து, சிறப்பு அதிகாரிகளை நியமித்து, உள்ளாட்சிகளை நிர்வகிக்க அரசு முடிவெடுத்து விட்டால், தாங்கள் முதலீடு செய்த பணம்என்னவாகும் என்ற கவலையும் ஆளும்கட்சி வேட்பாளர்களை வாட்டி வதைக்கிறது.
கவுன்சிலர் வேட்பாளர்களிடம் பணம் வாங்கியது மாவட்ட செயலர்கள் தான். இதனால் அவர்களுக்கும், நீதிமன்ற உத்தரவு பெரும் கவலையை அளித்துள்ளது. பணம் வாங்கியவர்களுக்கு பதில் சொல்லி மாளவில்லை .
அரசு பெயருக்கு மேல் முறையீடு செய்து விட்டு அது தள்ளுபடியானால் தேர்தலே வேண்டாம் என்றுமுடிவெடுக்க லாம்.
தற்போதைய சூழலில் முறையாக அரசு நிர்வாகம் நடக்காத,அப்போலோவில் முடங்கிப் போயுள்ளநிலையில் எதுவும் நடக்கலாம் என்பதே உண்மை.
பல லட்சங்களை முதலீடு செய்து, தற்போது வேதனையில் ஆழ்ந்துள்ள வேட்பாளர்கள்
ஒருபுறம் இருக்க, மறுபுறம் பகீரத பிரயத்தனம் செய்தும், 'சீட்' பெற முடியாமல், புகைச்சலில் இருந்த எதிர்கோஷ்டியினர் பெருத்த சந்தோஷத்தில் உள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எதிர்க்கட்சியினரையோ, சுயேச்சை வேட்பாளர்களையோ அதிகமாக பாதிக்க வில்லை என்பதும் கண்கூடு .அவர்கள் எப்போது தேர்தல் அறிவித்தாலும் தவிர்க்க முடியாத சூழல் உருவாகாத வரையில் நாங்கள்தான் வேட்பாளர் என்பது உறுதி என்று கூறுகின்றனர்.
எனவே இது ஆளும்கட்சி வேட்பாளர்களை மட்டுமே கடுமையாக பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது நீதிமன்ற ஆணையை ரத்து செய்து, தேர்தல் நடைபெற வேண்டி, கோவில், கோவிலாக அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஏறி, இறங்க ஆரம்பித்துவிட்டனர். அப்போலோவில் இருக்கும் தங்கள் தலைவிக்காக என்று வெளியே அறிவித்து விட்டு வழிபாடுகளை தங்களுக்காக நடத்த ஆரம்பித்து விட்டனர்.
ஏற்கனவே வெற்றிக்காக கோவிலுக்கு சென்று வந்த இவர்கள் தற்போது அதிமுக தலைவி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை சாக்காக வைத்து அவருக்காக வேண்டுதல் செய்ய கோவிலுக்குச் செல்வதாகக் கூறி, உள்ளாட்சி தேர்தல் நடை பெறவும், அதில் தாங்கள் வெற்றி பெறவும் வேண்டுதல்களை நடத்தி வருகின்றனர்.
இதை இன்றைய நிலையில் கோவில்களில் வழிபாடு செய்ப்பவர்களை கவனித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
=========================================================================================
உலகின் உயரமான மரக் கட்டிடம்
கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தாமல், மரப் பொருட்களைக் கொண்டு கட்டடிம் கட்டப்பட்டுள்ளது.
மரப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் எப்போதும் வேண்டுமானாலும் இதன் வடிவ மைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதே நேரத்தில் உறுதியானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
70 சதவீதம் மர பைபரால் ஆன பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கட்டிட ம் 400 மாணவர்கள் தங்கும் மாணவர் விடுதியாக பயன்படுத்தப்பட உள்ளது.
=======================================================================================
இன்று,
அக்டோபர் -06.

தற்போதைய நிலையில் உலகின் உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா.
இது 2,723 அடி உயரம் கொண்டது.
இது உலகின் உயரமான மர கட்டிடம்.
கனடாவில் உள்ள 174 அடி உயரம் கொண்ட இக்கட்டடிம் உலகின் உயரமான மர கட்டடம் என்ற பெயரை பெற்றுள்ளது.
கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கட்டுமானப்பொருட்களை பயன்படுத்தாமல், மரப் பொருட்களைக் கொண்டு கட்டடிம் கட்டப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் தான் இந்த கட்டடிம் கட்டப்
பட்டுள்ளது.
இதன் உயரம் 174 அடி. 18 மாடிகளைக் கொண்டுள்ளது.
இதற்கான செலவு 340 கோடி ரூபாய்.
இந்த மரத்திலான கட்டடிம் 70 நாட்களில் கட்டப்பட்டுள்ளது.
மற்ற கட்டுமான வகையை விட 18 சதவீதம் விரைவாக இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மரப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் எப்போதும் வேண்டுமானாலும் இதன் வடிவ மைப்பை மாற்றிக்கொள்ளலாம். அதே நேரத்தில் உறுதியானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்டுமான பொருட்களுடன் ஒப்பிடும் போது, இந்த மரப்பொருட்களான கட்டிட த்தால் 2,432 டன் கார்பன்-டை-ஆக்சைடு அளவு (அதாவது ஆண்டுக்கு 500 கார்கள் வெளியிடும் கார்பனின் அளவு) குறைக்கப்பட்டுள்ளது.
70 சதவீதம் மர பைபரால் ஆன பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த கட்டிட ம் 400 மாணவர்கள் தங்கும் மாணவர் விடுதியாக பயன்படுத்தப்பட உள்ளது.
வெளிப்புற கட்டுமானப் பணி முடிந்து தற்போது உள்பக்க வடிவமைப்பு பணிகள் நடந்து
கொண்டிருக்கின்றன. 2017 மே மாதம் இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொண்டிருக்கின்றன. 2017 மே மாதம் இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வரும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இன்று,
அக்டோபர் -06.
- எகிப்து ராணுவ தினம்
- ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
- பிஜி குடியரசானது(1987)
- முதல் பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)
😀என்னடா முனியா நான் ஊர்ல இல்லாதப்ப நம்ம வீட்ல ஊருல ஏதும் விசேஷம் உண்டா…?
😌பெருசா ஒன்னும் இல்லீங்க எசமான் நம்ம நாய் செத்துப்போச்சு...
🤔அடக்கடவுளே எப்படிடா திடீர்ன்னுசெத்துச்சு…?
😌கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடுச்சுங்க….
😳மாட்டுக்கறி எங்கடா கிடைச்சது அதுக்கு…?
😔நம்ம வீட்ல தாங்க…
😟நாம தான் மாட்டுக்கறி திங்கிறதில்லையே …!!?
😔நெருப்புல அவிஞ்சி போன மாடு மூணு நாலா கிடந்து கெட்டுப்போச்சுங்க. அதைத்தான் நாய் தின்னிடுச்சு….
😳நம்ம மாடா…?
😔ஆமாங்க…
😰அய்யய்யோ….!! எப்படிடா எரிஞ்சி போச்சு..!?
😔நம்ம வீடு எறியும் பொது நெருப்பு பறந்து மாட்டுக்கொட்டகை யில் விழுந்துரிச்சு. …
😨வீடு எப்படிடா எரிஞ்சது….?
😔குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்சுங்க....
😧குத்து விளக்கு ஏத்துற பழக்கமே நம்ம வீட்டுல கிடையாதேடா…!
😔அதுக்காக… செத்தவங்க தலைக்கு விளக்கு வைய்க்காம இருக்க முடியுமா…?
😥யார்ரா செத்தது…?
😔உங்க அம்மா…
😥எப்படிடா செத்தாங்க…?
😔தூக்கு போட்டுக்கிட்டு. ..
😨ஏன்டா…?
😔அவமானத்தில்தான் …
😰என்னடா அவமானம்…?
😔வீட்டுல இருக்குற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா...?
😡ஓடிப்போனது யாருடா…?
🙄உங்க பொண்டாட்டிதான்..: