செப்டிசீமீயா?
அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்று ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய் செப்டிசீமியா. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் அமெரிக்கர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில், 28 முதல் 50 சதவிகிதம் பேர் உயிரிழக்கின்றனர் என்கிறது அமெரிக்காவின் நேனஷல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்.
பாக்டீரியா கிருமித் தொற்றில் மிகவும் ஆபத்தானது செப்டிசீமியா. உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் அபாயகரமானது இந்தப் பிரச்னை. பாக்டீரியா நோய்த் தொற்று உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பிட்ட உறுப்பில் ஏற்பட்ட தொற்று, ரத்தத்தில் கலக்கும்போது, ரத்தத்தில் பாக்டீரியா கிருமி பல்கி பெருகி வளர்ச்சியடைகிறது. இந்த பாக்டீரியா வெளியிடும் நச்சு மற்றும் பாக்டீரியாவை அழிக்க நோய் எதிர்ப்பு சக்தி வெளியிடும் ரசாயம் ஆகியவை உடல் முழுவதும் பயணிக்கின்றன. இவை உடலில் வீக்கத்தை ஏற்படுத்திவதையே செப்டிசீமியா என்கின்றனர்.
உடலில் வீக்கம் ஏற்படும்போது, திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதை செப்டிக் ஷாக் என்று சொல்வர். தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை எனில் இதுவே மரணத்துக்கு வழிவகுக்கிறது.
யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு வரலாம். அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். ஆரம்பநிலையில் சிகிச்சை பெறும்போது உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
எதனால் செப்டிசீமியா ஏற்படுகிறது?
இதில், பெரும்பான்மையான பாக்டீரியா தொற்று காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம். செப்டிசீமியா ஏற்பட பொதுவான பாக்டீரியா நோய்த்தொற்று...
சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று
நிமோனியா போன்ற நுரையீரல் நோய்த் தொற்று
சிறுநீரக நோய்த்தொற்று
வயிறு மற்றும் இரைப்பை நோய்த்தொற்று.
இந்த உறுப்புக்களில் ஏற்படும் நோய்த்தொற்று, ரத்தத்தில் கலக்கும்போது பிரச்னை தீவிரம் அடைகிறது. ரத்தத்தில் கலந்த பாக்டீரியா மிக வேகமாக பல்கி பெருகுகிறது. இந்த நிலையிலேயே உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று
நிமோனியா போன்ற நுரையீரல் நோய்த் தொற்று
சிறுநீரக நோய்த்தொற்று
வயிறு மற்றும் இரைப்பை நோய்த்தொற்று.
இந்த உறுப்புக்களில் ஏற்படும் நோய்த்தொற்று, ரத்தத்தில் கலக்கும்போது பிரச்னை தீவிரம் அடைகிறது. ரத்தத்தில் கலந்த பாக்டீரியா மிக வேகமாக பல்கி பெருகுகிறது. இந்த நிலையிலேயே உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
அறுவைசிகிச்சை செய்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதுதவிர, மிகத்தீவிரமான காயம் அல்லது தீக்காயம், குழந்தைகள் மற்றும் முதியவர்கள், சிறுநீரகப் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள், ரத்தக் குழாயில் தற்காலிகமாக செயற்கை குழாய் பொருத்தியுள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள்
இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அறிகுறிகளை வெளிப்படுத்தும். பாதிப்பின் முதல் நிலையில் இருந்தாலும் கூட மிகவும் சோர்ந்து மிகத்தீவிர நோயாளி போல காணப்படுவர். உடல் சில்லிட்டுப்போகும். உடல் வெப்பநிலை அதிகரிக்கும், மிக வேகமாக சுவாசித்தல் நடக்கும், அதிவேக இதயத்துடிப்பு இருக்கும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டு, அவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனில், குழப்பமான மனநிலை, சிந்திக்க முடியாத தன்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, சருமத்தில் சிவப்பு புள்ளிகள், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், சுவாசித்தலில் சிரமம், இதயத்தின் செயல்திறன் குறைவு, வயிற்றுவலி, ரத்த ஓட்டத்தில் குறைபாடு போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும்.
இவர்களுக்கு, ஐ.சி.யு-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். வயது, உடலின் தாங்கும் திறன், பாதிப்பின் தீவிரம், ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து சிகிச்சை திட்டமிடப்படும். இவர்களுக்கு, பாக்டீரியா கிருமியை அழிக்க, ஆன்டிபயாடிக் மருந்து அளிக்கப்படும். எந்த மாதிரியான பாக்டீரியா என்று ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு அதற்கான மருந்து அளிக்கப்படும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, ரத்தம் உறையாமல் தடுக்க கையில் ஊசி மூலம் திரவங்கள், மருந்துகள் செலுத்தப்படும். சுவாசத் திணறலைத் தவிர்க்க வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, ரத்தம் உறையாமல் தடுக்க கையில் ஊசி மூலம் திரவங்கள், மருந்துகள் செலுத்தப்படும். சுவாசத் திணறலைத் தவிர்க்க வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படும்.
கடந்த செப்டம்பர் 23ம் தேதி, பஞ்சாப் மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுள் ஒருவரான ஜகதீஷ் காக்நிஜா செப்டிசீமியா பாதிப்பு காரணமாக 47 நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: விகடன் தளம்.
\\சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை, நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவிக்கிறது .'
\