மோசடி கால் சென்டர்கள்.



லோன் வேண்டுமா,உங்கள் எண்ணுக்கு ஐயாயிரம் பெறுமான பாரிஸ் .தபாலை நிலையத்தில் கட்டுமான செலவை கட்டி பெற்றுக்கொள்ளுங்கள் என்ற அளவில் இருந்த கால் சென்டர்கள் என்ரு அழைப்பு மய்யங்கள் புதிய எழுசி நம்மை அதிர வைக்கிறது.

மும்பையின் முக்கிய வர்த்தக பகுதியான தானே பகுதியில் செயல்படும் சில கால் சென்டர்கள், உள் வருவாய் சேவைகள் துறையில் இருந்து அழைப்பதாக கூறி 6,000த்திற்கும் மேற்பட்ட அமெரிக்க குடிமக்களிடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான பணத்தை பரித்துள்ளனர். 

இந்த மோசடி, தற்போது ஏமாற்று வேலைகளில் ஈடுப்பட்டு வரும் கால் சென்டர்களில் பணிபுரிந்து வரும் ரகசிய ஊழியர் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இந்த மோசடி அனைத்திருக்கும் மூளையாக செயல்பட்டது 23 வயது இளைஞர் என்பது தான் அதிர்ச்சியான செய்தி. 

வருவாய் சேவை துறை தானே பகுதியில் மிரா சாலையில் உள்ள கால் சென்டரில் இருந்துக்கொண்டு அமெரிக்காவில் பல குடிமக்களை வருவாய் சேவை அதிகாரி என தோற்றத்தில் தொடர்பு கொண்டு வரி செலுத்தாதமைக்காக மிரட்டியுள்ளனர். 

இவர்கள் வலையில் சிக்குவோர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 500 டாலர் முதல் 60,000 டாலர் வரையிலான தொகையை பெற்றுள்ளனர் இந்த மோசடி மன்னர்கள். குறிப்பிட்ட தொகையை கொடுக்க மறுக்கும் நபர்களிடம், நீங்கள் பணத்தை செலுத்தவில்லை என்றால் 30 நிமிடத்தில் உங்களை கைது செய்யவும், உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மிரட்டியுள்ளனர்.  
 புகார் ஆனால் இத்தகையை மிரட்டல் குறித்து எந்த ஒரு அமெரிக்கரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. காரணம் அவர்களிடம் இருக்கும் கருப்பு பணம். 

பரிமாற்றம் மேலும் இந்த கால் சென்டர்கள் பண பறிமாற்றம் அனைத்தையும் கிப்ட் கார்டு, ஐடியூன் கிப்ட் கார்டு வாயிலாக பெற்றுள்ளனர். இப்படி தினமும் 1.5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து வருகிறது இந்த மோசடி கும்பல். 700 பேர் இந்த மோசடியில் சுமார் 700 பேர் ஈடுப்பட்டுள்ளனர், அதில் 70 பேரை மட்டுமே தானே போலீல் கமிஷனர் பரம் பீர் சிங் தலைமையிலான குழு கைது செய்துள்ளது. 

கால் சென்டர்கள் இந்த மோசடி குறித்து தானே பகுதியில் ஐசர்வ் பிபிஒ பிரைவேட் லிமிடெட், லோரெக்ஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட், மேக் அவுட்சோர்சிங் சேவைகள், டெக் சொல்யூஷன்ஸ் மற்றும் கால்-டெக் சொல்யூஷன்ஸ் ஆகிய நிறுவனங்களில் விசாரனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் மோசடிக்கு தொடர்புடைய சுமார் 9 கால் சென்டர்கள் போலீசாரால் மூடப்பட்டுள்ளது.   எப்படி..? 

மோசடியில் ஈடுப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அமெரிக்க மொழி வழக்கில் சிறப்பாக பேசுபவர்கள் இவர்களின் உதவியுடன் VOIP என்ற இணைய வசதிகள் மூலம் அமெரிக்காவில் உள்ள மக்களை ஏமாற்றியுள்ளனர். VOIP மூலம் ஒருவரின் மொபைல் எண் அல்லது தொலைபேசியில் அழைக்கும்போது அவர்களுக்கு Random எண் தான் வரும், இதனால் இதனை கொண்டு யார் எங்கு இருந்து அழைக்கிறார்கள் என கண்டுப்பது கடினம். 

அப்படி கண்டுப்பிடிக்க பாதிக்கப்பட்டவர்கள் போலீஸிடம் புகார் அழித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   
சமுக வலைதளம் இந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்   அனைவரும் சமுக வலைதளங்களில் செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டு நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மோசடி கும்பல் தானே போலீஸார் அளித்த தகவல் படி இந்த மோசடியில் ஹைதர் அளி (24), ஹம்சா போலேஸார் (34), கபீர் வர்தன் (26), அர்ஜூன் வாசுதேவ் (24), அப்துல் ஜாரிவாலா (22), ஜான்சன் டான்டோஸா (24), கோவிந்த தாகூர் (28) மற்றும் அன்கித் குப்தா (19) ஆகியோர் ஈடுப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு எல்லாம் மூளையாக செயல்பட்டது 23 வயதுடைய ஷேகி எனப்படும் சாகர் தாக்கர் தான் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது அவருடன் தபஸ் என்பவரும் ஈடுப்பட்டுள்ளார்.  

 தகவல் விற்பனை இந்த கால் சென்டர்கள் அமெரிக்க கருப்பு சந்தையில் இருந்து தொலைபேசி எண்கள் மற்றும் அவரது விபரங்களை வாங்கியுள்ளனர். 

10,000 தொலைப்பேசி எண்கள் 1 லட்சம் ரூபாய் என்ற விலையில் தகவல்களை வாங்கியுள்ளனர்.

=====================================================================================
ன்று,
அக்டோ பர் -11.

  • லக பெண் குழந்தைகள் தினம்
  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)
  • ஜா ன் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது(1811)
  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)

=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?