5000000000000கோடிகள் ஊழல்

செல்பேசித் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப வசதிக்கான அலைக்கற்றை தொலைத்தொடர்புத்துறை மூலம் அவ்வப்போது ஏலம் விடப்பட்டு வருகிறது. 
இதுவரை இல்லாத அளவில் ஒரேமுறையாக 4ஜி அலைக்கற்றை ஐந்து லட்சத்து 63,000 கோடி ரூபாய் அளவுக்கு ஏல  விற்பனை செய்வதற்காக திட்டமிடப்பட்டு  ஏலம் கடந்த 1ம் தேதி தொடங்கி, ஐந்து நாட்கள் நடைபெற்றது. 

ஐந்து லட்சத்து 66,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு வெறும் 65,000 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாக தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதில் ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன், ஐடியா செல்லுலர், பார்தி ஏர்டெல், டாட்டா டெலி சர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஏர்செல் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன. 

தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. 

இதுதொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 5 நாட்கள் நடைபெற்ற அலைக்கற்றை ஏலம் மூலம் 65,789 கோடி ரூபாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சேவை வரி போக மத்திய அரசுக்கு 32,000 கோடி ரூபாய் வரை முன்வைப்புத் தொகையாக கிடைக்கும் என தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார். 

இந்த வெகு எதிர்பார்க்கப்பட்ட முன்னேறிய 4ஜி அலைக்கற்றை ஏலத்திலேயே 5.66 லட்சம் கோடிகள் அரசுக்கு வருமானமாக மதிப்பிடப்பட்டு வெறும் 65789 கோடிகள் மட்டுமே கிடைத்துள்ளது.ஒரு லட்சம் கோடியை கூட தொடவில்லை.
ஆனால் பலஆண்டுகளுக்கு முன்னாள் வெறும் 2ஜி ஏலத்தில் 1.73 லட்சம் கோடி இழப்பீடு என்று இதைவைத்து வினோத்ராய் அறிக்கை வெளியிட்டு அதை பாஜக பூதாகரமாக்கியது. 
தற்போது 4ஜி வைத்து பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழிலை மேம்படுத்தி வரும் நிலையிலேயே வெறும் 65 ஆயிரத்து 789 கோடிகள்தான் 4ஜி ஏலம் மூலம் கிடைத்தது என்றால் 2ஜி யில் ராஜா மீது குற்றம் சாட்டியது போல் பாஜக மோடி அரசு மீது 4ஜி ஏலத்தில் ஐந்து லட்சம் கோடிகள் அலைக்கற்றை முறைகேடு அல்லது அன்றைய  தினமணி மொழியில் பாஜக அமைச்சர் மனோஜ் சின்ஹா5000000000000கோடிகள் ஊழல் மோடிக்கு தொடர்பு? என்று செய்திகளை எதிர்பார்க்கலாமா?
======================================================================================

ன்று,
அக்டோபர்-09.
  • உலக அஞ்சல் தினம்

  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)

  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)

  • உகாண்டா விடுதலை தினம்(1962)

  • இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)

=======================================================================================
அரசு நிர்வாகம் ?
ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்ப்பட்டுவிட்டது.
நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.
பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்ப்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.
அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.
கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..? என்ற குழப்பம் உண்டாகியது..
எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு கடிதம் எழுதினான்.
மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.
கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..
நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடித்த்ததையும் சேர்த்து
அனுப்பினார்.
தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.
கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..
கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.
கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.
அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..
ஆத்து தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.
கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.

அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்.. என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.
=======================================================================================
"காலம் மாறிக்கொண்டே இருக்கும்.
கலைஞர் முதல்வராக இருந்தார் நாம் இன்று முதல்வர் பெருமை சரி.
கலைஞர் வயதால் உடல்நலமின்றி இருக்கிறார்.அதுவும் நாளை  நம்மக்கு வரலாம் என்ற எண்ணம்  ஜெயலலிதாவுக்கு இல்லாமல் போனது என்?
அப்போலோ வாசம் அவரை மாற்றுமா? 
ஆனால் முன்பு அவர் பல தண்டனைகளை அனுபவித்தும் தன்னை மாற்றிக்கொண்டதில்லை என்பதே வரலாறு.
காலத்தின் கட்டாயம் இது.
காலம்தான் பதிலைத் தரனும்."

========================================================================================


உலக தமிழாராய்ச்சி கழகம் என்ன பணியை செய்கிறது என்று மண்டையை குடைந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் வாயை அடைக்கிறது இந்த உலக செந்தமிழ் வேள்வி.
இதன் மூலம்  இமயம் வரை தமிழ் தேன் பாயும்.செம்மொழியின் பெருமையை இவ்வுலகம் அறியும்.
வாழ்க இயக்குநர் முனைவர் கோ.விசய ராகவன் தமிழாராய்ச்சி தொண்டு...வளர்க  தமிழாராய்ச்சி நிறுவன மண்டு.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?