மன்னிக்க முடியுமா – தெரசாவை?
“உலகத்திலேயே நீங்கள் பெரிதும் மதிக்கின்ற நபர் யார்? வாழ்க்கையில் ஒரேயொரு முறையாவது நீங்கள் நேரில் சந்திக்க விரும்பும் நபர் யார்?”
இப்படியான கேள்விகளுக்கு கோடம்பாக்கத்தின் கதாநாயகிகள் அனைவரும் கூறும் பதில் ஒன்றுதான் – அன்னை தெரசா.
கனவுக்கன்னிகளின் கனவுக் ’கன்னி’ அதாவது கனவுக் கன்னியாஸ்திரீ. அன்பு, அருள், அமைதி, அடக்கம். ’அ’ வில் தொடங்கும் அனைத்து எழுத்துக்களும் இந்த அன்னையைத் தான் அடைக்கலம் சேர்கின்றன.
ஏழை நாடுகளின் ஏழை மக்களுக்கு இளைப்பாறுதல் தருவதற்காகவே பிறப்பெடுத்தேன் என்று கூறும் இந்த அன்னை எங்கிருந்து வந்தார். எதற்காக வந்தார் என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை – ’சாத்தான்களையும் விரியன் பாம்புக் குட்டிகளையும்’ தவிர.
”ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக ஏவியிருக்கும் ஆயுதம் தான் அல்பேனியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் இந்த கன்னிகா ஸ்தீரி”
“தனது காலனி ஆதிக்கப் பெருமிதத்தை நினைவு படுத்திக் கொள்ளவும், நீட்டிக்கவும் மேற்குலகம் நிறுவியிருக்கும் கிளைதான் அன்னை நடத்தும் இல்லம்”
“மூன்றாம் உலகைச் குறையாடும் மேலை நாடுகள் தங்கள் குற்றவுணர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் வடிகால்- அன்னை தெரசா”
“நிலவுகின்ற சுரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதே தெரசாவின் கொள்கை. அதற்கு ஆபத்து வரும்போது கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளை ஆதரிப்பதற்கும் தெரசா தயங்கியதில்லை.”
அன்னை தெரசாவையும் அவரது தலைக்குப் பின்னால் சுழலும் அருள் ஒளிவட்டத்தையும் அம்பலப்படுத்தும் கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடையை மேற்கூறியவாறு துணிச்சலாக அறிவித்தது ‘நரகத்தின் தேவதை’ என்ற தொலைக்காட்சிப் படம். கிறிஸ்தோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், தாரிக் அலி என்ற பிரிட்டனில் குடியேறிய பாகிஸ்தானி பத்திரிக்கையாளரும் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை, ‘சானல் – 4’ பிரிட்டிஷ் தொலைக்காட்சி நவம்பர் மாத மத்தியில் ஒளிபரப்பியவுடனே பெரும் கூச்சலும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
“அன்னை தெரசாவைப் போன்ற மாபெரும் மனிதரை ஒருவர் தாக்க முடியுமா? அதுவும் இவ்வளவு தரம் தாழ்ந்து போக முடியுமா?” என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டார் கடத்தல்காரர்களின் இதயதெய்வமான பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா.
“அவர்கள் பத்திரிகையாளர்கள் அல்ல சாக்கடைப் பன்றிகள்.” “சானல்-4 தொலைக்காட்சியின் பொறுப்பாளர் மைக்கேல் கிரேடு ஒரு யூதன்; தாரிக் அலி ஒரு முஸ்லிம். இது கிறித்தவத்தை இழிவுபடுத்துவற்கான யூத-முஸ்லிம் கூட்டுச் சதி”
இவையெல்லாம் மறுகன்னத்தைக் காட்டுபவர்கள் இந்தத் திரைப்படத்திற்குத் தந்திருக்கும் மறுமொழிகள். விவிலியம் வர்ணிக்கும் நரகத்தை இந்தப் பூமியிலேயே உருவாக்கிவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள் இந்த தேவகுமாரர்கள்.
“அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; ஆனால் எங்கள் படம் எழுப்பியுள்ள கேள்விகளில் ஒன்றுக்குக் கூட யாரும் பதில் சொல்லவில்லை – அதுதான் முக்கியம்” என்கிறார் தாரிக் அலி.
மைக்கேல் மிட்கென்ஸ் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செய்திப்படமே ஒரு விவாதம் போல அமைக்கப்பட்டிருக்கிறது.
கல்கத்தாவின் ஒரு மூலையில் தொழு நோயாளிகளுக்கும் அநாதைகளுக்கும் இல்லம் நடத்தி வந்த தெரசா உலகப் புகழ் பெறத் துவங்கிய கதையைச் சொல்கிறது ஒரு காட்சி.
1969-இல் பி.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் அன்னை தெரசாவைப் பற்றிய ஒரு திரைப்படத்தை முதன் முதலாக ஒளிபரப்பியது. அதைத் தயாரித்தவர் மால்கம் மாகரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர். “இறந்து கொண்டிருப்பவர்களின் இல்லம்” என்று அன்னை தெரசாவால் அழைக்கப்படும் (கல்கத்தா இல்லத்தில் உள்ள) ஒரு அறையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்ததாம். கும்மிருட்டாக இருந்த அந்த அறையில் ஒளி விளக்குகளின் உதவியின்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படம் பதிவாகியிருக்காது என்று அனைவரும் சந்கேப்பட்டனர். ஆனால் என்ன ஆச்சரியம் லண்டனுக்குத் திரும்பிவந்து ஃபிலிம்கருளைக் கழுவிப் பார்த்தபோது படங்கள் தெளிவாக வந்திருந்தன.
“அற்புதம்.. அற்புதம்.. விஞ்ஞானத்தை மீறிய விந்தை மின்சார ஒளியில்லாத போதும் படம் பதிவாகியிருக்கிறது. அது என்ன ஒளி விசுவாசிகளே அதுதான் தேவ ஒளி!” என்று கூவினார் மக்கரிட்ஜ். ’அறிவிற்சிறந்த’ ஆங்கிலேய நாட்டின் பத்திரிகைகளும் வானொளியும் “அற்புதம்.. அற்புதம்..” என்று எதிரொலித்தன. அந்த குறிப்பிட்ட காட்சியைப் படம்பிடித்த புகைப்படக்காரரின் பேட்டியைப் பதிவு செய்திருக்கிறது, இந்தப்படம்.
“கோடாக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு ஃபிலிம் சுருளை நாங்கள் வாங்கியிருந்தோம். மிகக் குறைவான ஒளியிலும் படத்தைப் பதிவு செய்தது அந்த ஃபிலிம் எனவே அது ஒரு ”கோடாக் அற்புதம்” அவ்வளவுதான்” என்கிறார் புகைப்படக்காரர்.
இந்த உண்மையை அவர் அப்போதே சொல்லியிருக்கலாமே. தன்னைக் கேட்டவர்கள் எல்லோரிடமும் அவர் சொன்னார். மக்கரிட்ஜிடமும் சொன்னார். ஆனால் அவரது குரல் எடுபடவில்லை. “அற்புதம்.. அற்புதம்..” என்று கூவிய மக்கரிட்ஜ் புகைப்படக்காரரையும் இந்த அற்புதத்திற்கு ஒரு சாட்சியாக கணக்குக் காட்டி விட்டார் – தினகரனைப் போல.
இப்படித்தான் உருவாக் கப்பட்டது அன்னை தெரசாவின் முதல் ஒளிவட்டம். மாணவர் போராட்டங்களால் நெருக்கடியில் சிக்கியிருந்த மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இத்தகைய அற்புதங்கள் மூலம் தம் இளைய தலைமுறைக்கு விசுவாசத்தை ஏற்படுத்துவதும், வியட்நாம் ஆக்கிரமிப்பினால் தனிமைப்பட்டிருந்த அமெரிக்கா, மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை – தெரசாவை – முகமூடியாக அணிந்து கொள்ள வேண்டியிருந்ததும் அந்த காலத்தின் கட்டாயங்கள்.
இந்த கோடாக் அற்புதத்தின் பிரதான சாட்சியான தெரசா இதைப் பற்றி என்ன சொல்கிறார்? தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக அவர் கூறுகிறார். அவை கத்தோலிக்கப் பத்திரிக்கைகளிலும் வெளியாகின்றன.
அன்னை தெரசாவின் புகழுக்கு அடித்தளமாக இருக்கும் ’அஷா தன்’ என்ற கல்கத்தாவிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தை ஆராய்கிறார் ஹிட்சென்ஸ்.
பெருநோயாளிகள், அநாதைக் குழந்தைகள் நிராதரவான முதியோர் – கேட்பாரற்ற இந்த அநாதைகள் தான் தன்னுடைய இரக்கத்தை உலகுக்கு அறிவிக்க அன்னை தெரசா தேர்ந்தெடுத்த கச்சாப் பொருட்கள்.
இல்லத்தில் மாத்திரைகள் பற்றாக்குறை, குளுக்கோஸ் இல்லை. ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசியை சுத்தம் செய்யாமலேயே அடுத்தவருக்குக் குத்துகிறார்கள். ஏன் இப்படி என்று கேட்டால் “சுத்தம் செய்யவெல்லாம் நேரமில்லை – அதில் அர்த்தமும் இல்லை” என்று பதில் வருகிறது. அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள மக்களின் உரிமைகளுக்கே உத்திரவாதம் இல்லாத நாட்டில் அநாதைகளின் உரிமைக்கு யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்? தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கவா முடியும்?
கல்கத்தாவின் தெருவோரங்களில் புழுக்களைப் போல அழுகிச் செத்துக் கொண்டிருந்தவர்கள் அன்னையின் இல்லத்தில் ’அமைதியாக’ இறைவனடி சேர்கிறார்கள். இந்தியாவைக் கொள்ளையிடுவதில் பெரும் பங்கு வகிக்கும் பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனம் இந்துஸ்தான் லிவர் தான் இந்த இல்லத்திற்கான இடத்தைத் தனது ’அருட்கொடையாக’ அளித்திருக்கிறது.
நோயாளிகளைக் கவனிக்க ஒருவேளை போதிய பணம் இல்லையோ? அன்னை தெரசாவிடம் ஒரு ஆண்டில் புரளும் பணம் பல மூன்றாம் உலக நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகம் என்கிறார் ஹிட்சென்ஸ். அதைவைத்து மிகப் பிரம்மாண்டமான இலவச மருத்துவமனைகள் பல நடத்த முடியும். ஆனால் கிறித்தவ மதப்பிரச்சாரத்திற்காக 500 கான்வென்டுகளை 105 நாடுகளில் நடத்தி வருகிறார் தெரசா.
அன்னை தெரசாவின் இல்லத்தைச் சுற்றிப்பார்க்க 1980-இல் தானே நேரில் சென்ற அனுபவத்தை விவரிக்கிறார் ஹிட்சென்ஸ். சாவுடன் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் மத்தியில் நான் தெரசாவுடன் நின்று கொண்டிருந்தேன். ”கருக்கலைப்பையும் கருத்தடையையும் எதிர்த்து கல்கத்தாவில் நாங்கள் நடத்தும் போராட்டத்தைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாராம் தெரசா. என்ன வக்கிரம்!
“கருவில் வளரும் குழந்தையின் மீது எனக்கும் இரக்கம் இல்லாமலில்லை. அதுவேறு தன்னை கன்னியென்று கூறிக்கொள்ளும் இந்த அம்மாள் கொண்டிருக்கும் இரக்கம் வேறு. தெரசா கொண்டிருக்கும் இரக்கத்தின் பின்னணியில் இருப்பது அரசியல். கருத்தடை, கருச்சிதைவு மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கத்தோலிக்க மதபீடம் கொண்டிருக்கும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகளை அமல்படுத்துவதற்கு போப் நியமித்திருக்கும் அரசியல் பிரதிநிதி தான் தெரசா” என்று சாடுகிறார் ஹிட்சென்ஸ்.
1988-இல் தெரசா இங்கிலாந்து வந்தபோது வீடற்ற மக்களின் பிரதிநிதியாகத் தான் தன்னை சித்தரித்துக் கொண்டார். ஆனால் கருச்சிதைவைக் தடுக்கும் மசோதாவுக்கு ஆதரவாக அவர் தாட்சரை சந்தித்துப் பேசினார். இது அரசியல் இல்லாமல் வேறென்ன?
அவர் வாடிகனுக்கு மட்டுமல்ல; மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கும், ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் கூட பிரதிநிதி தான்.
உலகின் மிகக் கொடுரமான சர்வாதிகாரியும், கொள்ளைக்காரனுமான டுவாலியரிடமிருந்து 1980-இல் தெரசா ஒர் விருதைப் பெற்றுக் கொண்டார். ”தங்கள் நாட்டின் தலைவருடன் மிகவும் சகஜமாக ஏழைக் குடிமக்கள் கூட பழகுவதை உலகத்திலேயே நான் இங்குதான் பார்த்தேன். ஒரு அருமையான பாடத்தைக் கற்றுக் கொண்டேன்” என்று டுவாலியரைப் பற்றி தெரசா புகழ்ந்த போது நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர். தெரசாவின் நன்சான்றிதழைப் பெற்ற இந்த டுவாலியர் தான் அடுத்த சில ஆண்டுகளில் மக்களின் கோபத்தால் விரட்டப்பட்டு அடித்த கொள்ளையோடு பிரான்சில் தஞ்சம் புகுந்தான்.
தன்னுடைய கைகளால் சுதந்திரத்தின் பதக்கத்தை தெரசாவிற்கு அணிவித்தார் ரீகன், அதே கைகள் தான் மத்திய அமெரிக்க நாடுகளில் கூலிப்படைகளை ஏவிவிட்டு படுகொலைகளை நடத்தின என்பதை தெரசா அறியாமலில்லை.
பிரார்த்தனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த கத்தோலிக்க ஆர்ச் பிஷப்பும், நான்கு கன்னிகா ஸ்திரீகளும் அமெரிக்கக் கூலிப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சான் சால்வடாருக்கு தெரசா சென்றார். கொலைக்களமாக இருந்த கவுதமாலாவுக்குச் சென்றார். தான் சென்ற இடங்களிலெல்லாம் அமைதி நிலவுவதாக அறிக்கை விட்டார்.
வாடிகனின் அயலுறவுக் கொள்கை அவரை லெபனானுக்கு அனுப்பியது – கத்தோலிக்க மதவெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக. நிகராகுலாவுக்கு அனுப்பியது-தேச விடுதலைப் போராட்டத்தை நசுக்கிக் கொண்டிருந்த ராணுவ சர்வாதிகாரத்துக்கு ஆதரவாக. சோவியத் யூனியனுக்கு (ஆர்மேனியா) அனுப்பியது ’சோசலிசத்தை’ வீழ்த்த; திருச்சபையை மீண்டும் உயிர்ப்பிக்க.
வாடிகனின் தூதராக தெரசா உலகெங்கும் சென்றார். ஆனால் ஏழைகளின் தூதராகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ’நாய் விற்ற காசு குரைக்காது’ என்பது அவரது கொள்கை. அமெரிக்க மக்களின் பணத்தை சேமிப்பு என்ற பெயரில் கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு, குற்றம் நிருபிக்கப்பட்டு இப்போது சிறையில் இருக்கும் கீட்டிங் என்பவனின் விமானத்தைத் தான் தெரசா பயன்படுத்தினார் காரணம் கீட்டிங் ஒரு கத்தோலிக்க மதவெறியன்.
இந்தத் திரைப்படம் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு அன்னை தெரசாவின் பதில் என்ன? “அவரது தரப்பு கருத்தையும் கேட்பதற்காக நாங்கள் அவரை அணுகியபோது பேட்டியளிக்க மறுத்துவிட்டார்” என்கிறார் தாரிக் அலி.
என்ன பதில் சொல்ல முடியும்? தொழு நோயாளிகளுக்குப் பாதுகாப்பு – தொழுநோய் பிடித்த முதலாளித்துவ சமூகத்துக்கும் பாதுகாப்பு. ஏழைகளுக்கு ஆத்தும சுகம் – பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் – மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை!
ஏகாதிபத்தியங்களின் ஆன்மீக ஒடுக்குமுறைப் படைப்பிரிவாகச் செயல்படும் திருச்சபை இந்தக் கேள்விகளுக்கு என்றுமே விடை சொல்ல முடியாது.
1984-இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் நடத்தப் பட்ட கோரப் படுகொலைக் காட்சி திரையில் நகர்கிறது.
“இது பாவிகளுக்கு இறைவன் வழங்கிய நியாயத்தீர்ப்பு அல்ல; அப்பாவி மக்கள்மீது அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் நடத்திய தாக்குதல். நியாயம் கேட்டுப் போராடும் மக்களின் கோபக்குரல் திரையில் ஒலிக்கிறது.
கோபம் கொண்ட இந்த மந்தைக்கு அன்னை தெரசா வழங்கும் அறிவுரை என்ன?
கருணை ததும்பும் கண்களுடன் திரையில் தோன்றும் தெரசா கூறுகிறார்: மன்னியுங்கள்… அவர்களை மன்னித்து விடுங்கள்.
மன்னிக்க முடியுமா – தெரசாவை?
– சூரியன்.
புதிய கலாச்சாரம், நவ, டிச 1994.இதழில் இருந்து,
புதிய கலாச்சாரம், நவ, டிச 1994.இதழில் இருந்து,
=================================================================================================
மார்கண்டேய கட்ஜு தனது முகநூல் பக்கத்தில் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் கவனத்துக்கு என்று ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில் ' முதல்வர் ஜெ., பூரண குணமடைய நான் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்துள்ளேன். இந்நிலையில் ஜெ., உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதாக பலர் கைது செய்யப்படுகிறார்கள்.
எந்த அடிப்படையில் இதை செய்கிறீர்கள்?
அங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா?
தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் கிடையாதா?
இதுபோன்ற கொடுங்கோல் ஆட்சியை நிறுத்தவிட்டால் 356-வது சட்ட பிரிவுபடி தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப்பிடம் முறையிடுவேன்.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு உங்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, போர் குற்றம் புரிந்த ஜெர்மனியின் நாஜிக்களுக்கு கிடைத்த தண்டனை போல், உங்களுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தருவேன்'. என்று மிரட்டியுள்ளார்.
இதே கட்ஜு சிலநாட்களுக்கு முன்னர்தமிழ் நாட்டு எதிர்க்கட்சியினர்(தி.மு.க.?)குரங்குகள். ஜெயலலிதாவை தான் ஒருதலையாக நேசித்ததாகவும் ,இப்போதும் நேசிப்பதாகவும்,ஆனால் தான் நேசிப்பது ஜெயாவுக்கு தெரியாது என்றும் டுவிட்டரில் கதைத்திருந்து ஏராளமான திட்டுகளை வாங்கி குவித்தார்.
இப்போது திடீரென தலைகீழ் மாற்றம்.
காரணம் தனது முந்தைய இடுகைக்காக வதந்தி பரப்பியதற்கு கைது செய்து விடுவார்கள் என்ற பயமாக கூட இருக்கலாம்.
இன்று,
அக்டோபர்-18.
சார்லஸ் பாபேஜ் |
- கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
- பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
- அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)
- டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
- நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
தெரிந்து கொள்வோம்....
1) "இந்திரா காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
2) "ராஜிவ் காந்தி" கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
3) தீவிரவாதி "ஆசாராம் பாபு" வின் வழக்கறிஞர் யார் - BJP பாராளுமன்ற உறுப்பினர்(MP) சுப்பிரமணிய சுவாமி.
4) போபால் விசவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்" வழக்கறிஞர் யார் - BJPயின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
5) ஊழல் பெருச்சாலி "லலித் மோடி"யின் வழக்கறிஞர் யார் - BJP மாநில முதல்வர் "வசுந்தரா ராஜி"யின் கணவனும், மகளும்
6) "வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி
7) தீவிரவாதி "அப்சல் குரு" விற்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
8) குஜராத் 500கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர் யார் - BJP நிதியமைச்சர் அருண் ஜெட்லி
9) கடத்தல் மன்னன் "அலேமோ" வின் வழக்கறிஞர் யார் - BJP உறுப்பினர் ராம் ஜெத்மலானி
10) "சஹாரா ஸ்கேன்" ஊழல் குற்றவாளி "சுப்ராத் ராய்" வழக்கறிஞர் யார் - BJP அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
11.ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கிலும் ராம் ஜெத்மாலானி வாதாடியுள்ளார்.
இந்தியாவின் முக்கிய தேச பாதுகாப்புக்கு இடையூறான வழக்குகளில் "பணத்துக்காக" குற்றவாளிகளை ஆதரித்து ஆஜரான பாஜக தலைவர்களான இவர்கள் தான் நமக்கு "தேச பற்று" குறித்து பாடம் நடத்துகிறார்கள்
முகநூலில் படித்ததில் பிடித்தது