வைகோ என்ற மோசமான அரசியல் தரகர்....,

காவிரி பிரசனையில் கர்நாடகாவுக்கு,பாரதிய ஜனதா மோடி அரசும் செய்யும் அரசியலை விட ,நம்பிக்கை துரோகம் தமிழக அரசியல் கடசிகளால்தான் செய்கின்றன.

காவிரி பிரசனையில் இந்தியா முழுக்க எதிரிகளாக அரசியல் செய்யும் காங்கிரசு,பா.ஜ.க  உட்பட அனைத்து கர்நாடக அரசியல் கடசிகளும் ஒரே குரலில் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் விடக்  கூடாது என்று
குரல் விட்டு ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் செய்து வருகையில் இங்கு தண்ணீர் கேட்கும் குரல்கள் மட்டும் தனித்தனியாக வெறும் முனங்களாக வருகிறது.

ஆளும் அதிமுக இப்பிரசனை யை கிட்டத்தட்ட கண்டு கொள்ளவில்லை அதற்கு எப்போதும் போல் பல் மக்கள் பிரசனைகள் .
ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு அப்போலோவில் சேர்ந்து ஒருவரையும் பாரா நிலையிலோ காவிரி பிரசனை யம் ,கருகும் வயல்களும்,எரியும் விவசாயிகள் வாழ்க்கையும் அதற்கு ஒரு பொருட்டே இல்லாமல் போய் விட்டது.

ஜெயலலிதா செயல்படும் நிலையில் இருந்தே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சொல்லிக் கொண்டேயிருந்தது திமுக.ஆனால் ஜெயலலிதா கண்டுகொள்ளவில்லை.
இது அவரின் வழக்கமான நிர்வாகத் திறமைதான்.
பல்வேறு அரசியல் கடசிகளை வைத்து விவசாயிகள் சங்கம் பல போராட்டங்களை நடத்தியது.திமுக உடப்பட்ட அனைத்துக்கடசிகளும் கலந்து கொண்ட  ரெயில் மறியல் உ ட்பட்ட போராட்டங்களில் நமது அரசியல் ஒற்றுமையை காட்டும் காலத்தில் அரசியலில் அரசியல் செய்யும் வைகோபால்சாமி தனது சித்து விளையாட்டுகளை காட்டி தன்னுடன் ம.ந.கூ என்ற அதிமுக பி டீம் வைத்து தனியாக ரெயிலை மறித்து தமிழக அரசியல் கட்சிகளின் அவலத்தை காட்டினார்.

இதற்கு அவர் பாஜக கடசி போல் போராட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாம்.
கர்நாடக அரசியல் கட்சிகளை போல் அனைத்துக்கடசியினரையும் டெல்லி சென்று பிரதமர்,குடியரசுத்தலைவர்களை பார்த்து காவிரி பிரசனியில் தமிழகத்தின் நிலையை கூறி மனு கொடுத்து வரலாம் என்று திமுக ஆளும் அதிமுகவை கூட்டத்தை கூட்ட சொல்லி பலமுறை கூறியும் பலனில்லாததால்  தானே கூட்டி செல்லும் முயற்சியில் இறங்கப்போவதாக பலமுறை கூறி தற்போது அப்படி ஒரு கூட்டத்தை கூட்டுகிறது.

பல்வேறு கட்சிகளும் ,அமைப்புகளும் கலந்து கொள்ளும் முடிவில் இருக்கையில் அங்கும் தனது அரசியல் தாயத்தை சகுனி போல் திமுக மீதான காழ்ப்புணர்வில் உருட்டி கம்யுனிஸ்டுகள்,வி.சி.கடசிகள் கருத்து கூறும் முன்னர்."அதிமுக அரசு காவிரி பிரசனையில் சரியாக செயல்படுகிறது.திமுக கூட்டம் மோசடி.எங்கள் கூட்டணி கடசிகள் கலந்து கொள்ளாது என்று அறிக்கை விட்டு விட்டார்.

கம்யுனிஸ்டுகளுக்கோ தேசியகட்சி என்ற குழப்பம்.விசி திருமாவளவன் கலந்து கொள்ளவேண்டும் என்று கடைசிவரை போராடியும் என்ன மாயமோ வைகோபாலசாமி காலடியில் சரணடைந்து விட்டார்.
ஆக ம.ந.கூட்டணி கடசிகள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்.
அனைத்துக்கடசி முக்கியத்துவர்களும் டெல்லி சென்று மனு கொடுப்பது தமிழ் நாட்டின் பக்கம் காவிரி நீர் விவகாரத்தில் வலுசேர்த்திருக்கும்.

காவிரி ஆணையம் அமைப்போம் என்று சொல்லி மோடி பின்னர் குட்டிக்கரணம் அடிக்க கர்நாடகா கடசிகளின் ஒற்றுமை குரல்தான் கரணம்.
இவை வைகோபால்சாமிக்கோ ,கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கோ தெரியாததல்ல.
ஆனாலும் மலிவான அரசியல் சகுனி வைகோபால்சாமியின் தாயத்தில் இவர்கள் கவிழ்ந்து போனது மகா கேவலம்.

அதிமுகவின் கண்ணசைவுக்கு ஆடும் அதிமுக அல்லக்கைகள்தான் இவை என்ற உண்மை மீண்டும் தமிழக மக்களுக்கு பகிரங்கமாகி இருக்கிறது.
தஞ்சையில் கம்யூனிஸ்டுகள் வலுவாக இருக்க காரணமே விவசாயிகள் பக்கம் அவர்கள் இதுவரை இருந்ததுதான்.

ஆனால் இந்த தவறான முடிவால் ஏற்கனவே தஞ்சை விவசாயிகள் பக்கம் இழந்து வரும் கம்யூனிஸ்டுகள் செல்வாக்கு மிக மோசமாக சீரழியும்.
இவை தெரியாத நிலையில ஜி.ராமகிருஷ்ணன்,முத்தரசன் இருப்பார்கள்.?
அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுக பலம் பொருந்திய எதிர்கட்சி.
இத்தேர்தலில் வெறும் 1.5 சதம்தான் அதிமுக-திமுகவுக்கான வாக்கு வித்தியாசம்.அதிமுக கூட்டாத கூட்டத்தை திமுக கூட்டுவதில் தவறில்லை.அவர்கள் விளிம்பில்தான் ஆட்சி  அமைப்பதை இழந்திருக்கிறார்கள்.மேலும் அதிமுக அரசு நிர்வாக திறமை கம்யூனிஸ்டுகளுக்கு தெரியாததல்ல.
 இவர்கள் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தை வைகோவின் தவறான அறிவுரையால் தவிர்த்தது தமிழக மக்களின் ஒருமித்த குரலை டெல்லியில் ஒலிக்கசெய்வதில் பின்னடைவை செய்துள்ளது என்பதை தவிர திமுகவுக்கு இழப்பு ஒன்றும் இல்லை. 

தெரியும்.இருந்தும் அவர்களை ஆட்டி படைப்பது அதிமுகவும்,அதன்  தரகர் வைகோபாலசாமியும்தான்.
இப்படி இவர்கள் நடந்து கொள்ள கரணம் தேர்தல் காலத்தில் பேசப்பட்ட 1500 கோடிகளில் இவர்களுக்கும் பங்கு போயிருக்கலாமோ,அதை  கூறியே மிரட்டி  வைகோபால்சாமி இவர்களை அரசியலில்  வழி நடத்துகிறாரோ என்ற சந்தேகம்தான் பாமரனான எனக்கு வருகிறது.
இதுதான் மக்களில் பலருக்கும் வந்துள்ள சந்தேகம் .

வைகோபால்சாமி என்ற இந்தியாவின் மிக மோசமான அரசியல் வியாபாரிஇடம் இருந்து இவர்கள் விடுபடும் நாளே இவர்கள் கட்சியை கொஞ்சசமாவது தக்க வைத்துக் கொள்ளும் காலமாக அமையும்.அல்லது மதிமுக என்ற மாபெரும் கட்சியில் வைகோ என்ற அரசியல் சாணக்கியன் மட்டுமே இருப்பது போல் தனிமரமாக இருக்க வேண்டியதுதான்.

ம.ந.கூட்டணிக்கு சென்ற சட்டசபை தேர்தலில் உண்டான மோசமான,கேவலமான தோல்விக்கு முழு பொறுப்பும் வைகோ என்றவாறு தவறான பேச்சுக்கள்,நடவடிக்கைகள்,வழி நடத்தல் கள்  தான் காரணம்.
அதை புரிந்த வாசன்,விஜயகாந்த் விலகி விட்டார்கள்.
ஆனால் கம்யூனிஸ்டுகள்,வி.சி.க்கள்?வி.சி.திருமா கூட தேர்தல் தோல்விக்குப் பின்னர் திமுகவுக்கு நூல் விட்டு சரிவராததால் தற்போது பாஜகவுடன் குலவிக்கொண்டிருக்கிறார்.

சென்ற தேர்தலில் காப்புத்தொகை போகும் அளவுக்கும்,கம்யுனிஸ்டுகளுக்கே உண்டான வாக்கு அளவினை விட பல இடங்களில் குறைவாக வாக்குகள் பெற்றதற்கான காரணத்தை இன்னமுமா இவர்கள் அலசவில்லை.

காரணம் இவர்கள் ம.ந.கூட்டணியை மக்கள் நம்பவில்லை,கைகழுவி விட்டார்கள் என்பதும் இவர்கள் இன்னுமா உணராமல் இருக்கிறார்கள்?அப்படியும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று இன்னமும் அரசியல் செய்வது ம் , வைகோ என்ற மோசமான அரசியல்  தரகரிடம் இருந்து விலகாதது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதுதான்.
======================================================================================
ன்று,
அக்டோபர்-25.


  • தகவல் அறியும் உரிமை சட்ட தினம்
  • கசக்கிஸ்தான் குடியரசு தினம்(1990)
  • இந்தியாவில் தடா சட்டம் நீக்கம். பதிலாக பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது(2001)
  • ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர்(1936)

=======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?