தீபாவளி பொருட்கள் 90% தள்ளுபடியில் வாங்க

ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்றி  சில இ வர்த்தக  மோசடி வலை தளங்கள் மக்களிடம் இருந்து பணம் பறிப்பதாக அடிக்கடி குற்றசாட்டுகள் எழுகின்றன. 

'பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உட்பட பல நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபல மாக உள்ளன. 
ஆனால் இந்த நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி மோசடி வலைதளங்கள் சில இந்த தளங்களைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள,சில மாற்றங்களுடனும் இணையத்தில் உலா வருகின்றன.இவர்கள் இ வர்த்தகத்தில் மக்களை சல்லிசான விலையில் பொருட்களை தருவதாக பிரபல பிராண்ட் பொருட்கள் படங்களைப்போட்டு  போலி பொருட்களை விற்பனை செய்து  ஏமாற்றுகின்றன.
சிலருக்கு செங்கல்களும் சிலருக்கு விளையாட்டு கைபேசிகளும் வந்துள்ளன.

தற்போது ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
முன்பு புத்தகங்களில் ஆரம்பித்த இ வர்த்தக  வியாபாரம், இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது.
ஆன்லைன் மூலம், பொருட்கள் வாங்குவதால், நாம் அலைய வேண்டிய நேரம் மிச்சமாகிறது. அத்துடன், நம் வீட்டுக்கே, பொருள் வந்து சேர்கிறது.மேலும் சந்தை விலையை விட குறைவாக  தள்ளுபடி விலையிலும்  கிடைக்கிறது.
இப்போது இந்தியா வில் விழாக்காலம் என்று ஜனவரி வரை பண்டிகைகள் அணிவகுத்துவரும்  காலம் துவங்க உள்ளது. இம்மாதம்  தீபாவளி  கொண்டாடப்பட மக்கள் தயாராகி வருகின்றனர்.
கடன் வாங்கியாவது புது உடைகள்   புதுப் பொருட்களை வாங்குவர்

இப்போது இவர்களை குறிவைத்து இ - வர்த்தகம் செய்யும் பிரபல நிறுவனங்கள் விளம்பரங்கள் ,பல்வேறு சலுகைகள்,50% வரை தள்ளுபடி என்று பரபரப்பு  செய்ய துவுங்கியுள்ளன. 
 பல இ- வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு விற்பனைகளையும்  அறிவித்துள்ளன.இந்த பண்டிகைக்கால  வாய்ப்பை பயன்படுத்தி  மோசடி வலைதளங்களும்   வரிசையாக களம் இறங்கியுள்ளன. 

இவை உண்மையில் பொருட்கள் தயாரிப்பாளர் வழங்கவே முடியாத தயாரிப்பு செலவை விட மிகக்குறைவான விலை சலுகைகளை அறிவித்து  மக்களை ஏமாற்றும் விளம்பர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. 
இந்த மோசடி வலைதளங்கள் தங்களின் சலுகை தள்ளுபடி அறிவிப்புகள் குறித்து  இ - மெயில், முகநூல் ,எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப்  மூலம் தங்கள் விளம்பர  தகவல்களை  அனுப்புகின்றன.

உச்சகட்டமாக  ஒரு வலைதளம், மொபைல் போன் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களை அதன் சந்தை விலையில் ருந்து  98 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித் திருந்தது. அதாவது 100 ரூபாய் பொருளை வெறும் 2 ரூபாய்க்கு தருவதாக அறிவிப்பு உள்ளது.
இது பலரை திடுக்கிட வைத்துள்ளது. 
ஆனாலும் இப்படி பொருளை வழங்க முடியுமா என்று சிலர் யோசிப்பதாக குட தெரியவில்லை.
ஆனால் இப்படிப்பட்ட  சில நிறுவனங்கள் பொருள் விலையை மிக குறைவாக வைத்து விளம்பரம் செய்து விட்டு அதை வாங்க விண்ணப்பித்து பணம் செலுத்தும் நேரம் சிப்பம்,கொரியர் செலவு என்று அதிக விலையை குறைப்பாக பொருள் உண்மை விலையை நிர்ணயித்து விடுகிறார்கள்.
அதாவது நீங்கள் வாங்கும் 100 ரூபாய் மதிப்புள்ள பொருள் விலை வெறும் 2 ரூபாய்தான்.ஆனால் அதை சிப்பம் செய்து கொரியரில்  உங்களுக்கு அனுப்பி வைக்க 95 ரூபாயாகும்.அல்லது பொம்மை சாமான்கள் இருக்கும்.
 இது போன்ற ஏமாற்று வேலைகள்   இ - வர்த்தகத்தில் பிரபலமாக உள்ள நிறுவனங்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
வழங்கவே முடியாத சலுகைகளை அறிவிக்கும் இ-வர்த்தக வலைதளங்களை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. 
இந்த வலைதளத்திடம்  பணம் செலுத்த தன் கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை பதிவு செய்வது கூட ஆபத்து.
அதை வைத்து உங்கள் வங்கிக்கணக்கில் பணம் காணாமல் போகும் அபாயத்தை இந்த போலி நிறுவனங்கள் செய்துவிட்டும்.
பெரிய நிறுவனங்கள் கூட கையில் பொருளை கொரியறில் இருந்து தருகையில் பணம் செலுத்தும் முறையை வைத்துள்ளது(கேஷ் ஆன் டெலிவரி) .கூடுமான வரை அதையே நாம் பயன் படுத்தலாம்.கொரியரில் பொருள் எங்காவது தவறினால் கூட நம் பணத்துக்காக அந்நிறுவனத்தை தாங்கிக்கொண்டு அலைய வேண்டியதிருக்காது.  
இந்த வலைதளங்களை, 'கிளிக்' செய்வதால், அவர்களின் நிதி தொடர்பான விபரங்கள், முறை கேடாக பயன்படுத்தப்படும், அபாயம் உள்ளது. 
மேலும் சில மோசடி வலைதளங்கள் பிரபல நிறுவனங்களின் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்துகின்றன. பிரபல நிறுவனங்கள் பெயரில் விளம்பரம் இருக்கும்.பொருள் வாங்க தரும்  சுட்டியை (link)அழுத்தினால்அது உண்மையான நிறுவனத்துக்கு செல்லாமல் போலி நிறுவன இணைய தளத்துக்கு அழித்து சென்று விட்டு விடும்.
 அதனால், ஆன்லைனின் பொருட்களை வாங்குவோர், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். 
பொது இடங்களில் அல்லது இலவசமாககிடைக்கும், 'வை- பை'யை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவை மூலமும் தகவல்கள் திருடு போகலாம். 

அனைத்து விதமான ஆன்லைன் வர்த்தகத்துக்கும் ஒரே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி இருக்கிறோம்  எவ்வளவு வாங்கி இருக்கிறோம், என்பதை மதிப்பிட முடியும். 
தள்ளுபடியோ, சலுகையோ நம்ப முடியாதபடி இருந்தால் நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். 
அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய, வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி பார்த்து  உறுதி செய்து கொள்ள வேண்டும். 
தற்போது இணையத்தில்  பொருட்கள் விற்பனை என்றில்லாமல்  சீட்டு விளையாட்டு , கிரிக்கெட் சூதாட்டம், தீபாவளி சீட்டு மோடி, ஏல மோசடி என, பல மோசடிகள் வந்துள்ளன. 
அந்த  கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஆசைப்படாமல், எச்சரிக்கையுடன் இருந்தால்தான், இந்த மோசடிகளில் இருந்து தப்ப முடியும்.இந்த மோசடிகளில் படிக்காத வர்களை விட படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறிக் கொண்டிருக்கின்றனர்.
காரணம் அவ்வளவாக படிக்காதவர்கள்  இணையத்தில் தங்கள் நேரத்தை செலவிடுவதில்லை.
மேலும் அவர்களும் ,பெண்களும் பொருட்களை நேரில் பார்த்து தேர்வு செய்வதையே பெரிதும் விரும்புகிறார்கள்.
======================================================================================
ன்று,
அக்டோபர் -02.
  • இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)

  • இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் ராஜா ரவி வர்மா இறந்த தினம்(1906)

  • சர்வதேச வன்முறை எதிர்ப்பு தினம்

  • பெருந் தலைவர் காமராஜர்  மரணம் (1975) 

  •  காந்தி பிறந்த தினம்(1869)


=======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?