ஆபாச சாமியாரை ஆதரிக்கும் பாஜக அரசு ?
"ஹரியானா மாநில அரசானது, தனது அரசியல் சுயலாபத்திற்காக பஞ்ச்குலா வை தீக்கிரையாக்கி விட்டதாக, உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.‘தேரா சச்சா சவுதா’ வன்முறையாளர் களிடம், முதல்வர் மனோகர் லால் கட்டா தலைமையிலான அரசு சரணடைந்து விட்டதாகவும் நீதிபதிகள் சாடியுள்ளனர்." நன்றி:தீக்கதிர் . தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50), தனதுஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண் சிஷ்யைகளை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக் கிய குற்றம் நிரூபணமாகி இருப்பதாக பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதிஜகதீப் சிங் தீர்ப்பளித்தார். குர்மீத் ராமுக்கான தண்டனை விவரம் திங்கட்கிழமை யன்று வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.அதைத்தொடர்ந்து, பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தேரா சச்சா தொண்ட ர்கள், வன்முறையில் இறங்கினர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் துவங்கிய வன்முறை, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது. தேரா சச்சா சவுதா தொண்டர்கள், பொதுமக்களின் வாகனங்களை அடித்துநொறுக்கியதுடன், பேருந்து, ரயில் களுக்கு தீ வைத்தனர். அரசு கட்ட...